செவ்வாய், 11 டிசம்பர், 2018

தேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்

நேற்றைய கட்டுரையில் நாம் எதிர்பார்த்தவாறே சந்தையும் நடந்து கொண்டது நன்றாக இருந்தது.


சந்தையை பொறுத்தவரை சட்டீஸ்காரில் மட்டுமாவது வெற்றி பெறுவார்கள் என்று தான் எதிர்பார்ப்பில் இருந்தது.



ஆனால் சட்டீஸ்கார் இந்த அளவிற்கு தோல்வி கொடுக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

அதே நேரத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களில் பிஜேபி கொடுத்த கடுமையான போட்டி சந்தைக்கு இன்னும் நம்பிக்கையை அளிப்பதாகவே இருந்தது.

அதனால் தான் சந்தையும் நாள் முடிவில் பச்சை நிறத்தில் இறங்கி வந்தது.

ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களை சேர்த்து மொத்தமாக 50 எம்பி தொகுதிகள் வருகின்றன.


தற்போது கொடுத்து இருக்கும் போட்டியை பார்த்தால் குறைந்த பட்சம் பாதி தொகுதியை பெறும் அளவிற்கு பிஜேபிக்கு இன்னும் வலிமை இருப்பதை உணரலாம்.

அடுத்து, இந்த மாநிலங்களில் இருந்த அரசுகள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நீண்ட கால ஆட்சியில் இருந்து வந்தன.

அவற்றின் மீதான அதிருப்தி என்பது மத்திய அரசிடம் இருக்கும் அதிருப்தியை விட அதிகமாகவே இருந்து இருக்கும்.

அதனால் பிஜேபிக்கு நாடாளுமன்ற தேர்தலில் சட்டமன்ற தேர்தலை விட கொஞ்சமாவது நன்றாக இருக்கும் என்று கூட எதிர்பார்க்கலாம்.

அதே நேரத்தில் பெரிய மாநிலங்களை தொடர்ந்து இழந்து வந்த காங்கிரசுக்கு ஒரு உற்சாகம் கிடைத்து இருக்கிறது. இந்த உற்சாகம் எம்பி தேர்தலில் பெரிதும் உதவலாம்.

ஆனால் காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளை பொறுத்தவரை எப்பொழுதுமே பலம் இருக்கும் போது மாநில கட்சிகளிடம் அனுசரித்து போவார்கள் என்பது நிச்சயமற்ற ஒன்று.

அதனால் நேற்று வரை சந்திர பாபு நாயுடு கூட்டிய கூடத்தில் இருந்த பணிவு இனி இருக்குமா என்பதும் கேள்விக்குறியே.

கொஞ்சம் பிசகு ஏற்பட்டாலும் விலகி செல்வதற்கு மம்தா, மாயாவதி தயாராக இருக்கிறார்கள். அந்த வகையில் இனி நாயுடுவிற்கு சவால் காத்திருக்கிறது.

அவ்வாறு எதிர்கட்சிகள் ஒன்றிணையா விட்டால் பிஜேபி மீண்டும் குறைந்தது 200 இடங்களையாவது பெற்று விடும்.

அதனால் இந்த கூட்டி, கழித்தல்கள் தற்போது வரை பிஜேபிக்கே சாதகமாக உள்ளது.

இனியும் குறையும் என்று சந்தையில் இராமல் மலிவாக கிடைக்கும் நல்ல பங்குகளை வாங்கி போடுவது முதலீட்டிற்கு நல்லது!


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக