ஞாயிறு, 9 டிசம்பர், 2018

கருத்து கணிப்பு, தேர்தல் முடிவு, மனதில் திக் திக்...

ஒரு மிக அதிக வேலை பளுவில் சிக்கி கொண்டதால் கடந்த மாதத்தில் கட்டுரைகளை எழுத முடியவில்லை. மன்னிக்கவும்!


அதிக அளவில் நண்பர்கள் தேர்தலையும் சந்தையும் இணைத்து கேட்டு கொண்டிருப்பதால் இந்த கட்டுரையை தொடர்கிறோம்.



மிக நீண்ட நாள் எதிர்பார்க்கப்பட்ட மாநில தேர்தல் முடிவுகள்.

தமிழ்நாடு, கேரளா என்றால் கண்டிருக்கவே மாட்டார்கள். ஆனால் பிஜேபி வலிமையாக உள்ள ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கார் மாநிலங்கள் என்பதால் ஒரு மினி லோக் சபா தேர்தல் போன்று தான் கவனிப்பு.

இதனை ஒரு விளையாட்டு தொடராகவே பார்க்கிறார்கள்.


பிஜேபியை பொறுத்த வரை இது ஒரு செமி பைனல்.

இதில் மிசோரமும் தெலுங்கானாவும் உள்ளடங்கும்.

ஆனால் ஓரிரு எம்பி தொகுதியை வைத்துள்ளதால் மிசோரத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை. தெலுங்கானாவில் மாநில கட்சி ஆதிக்கம் உள்ளதால் அதனை விட்டு விடுவோம்.

இது போக 3 மாநிலங்கள் உள்ளன. மூன்றிலுமே பிஜேபி,காங்கிரஸ் தான் பெரிய கட்சிகள்.

அந்த மூன்றில் சந்தை ராஜஸ்தானில் பிஜேபிக்கு தோல்வி உறுதி என்று நம்புகிறது.

சட்டீஸ்காரில் பிஜேபி வெல்லும் நிலை இருப்பதாக கருதுகிறது.

மத்திய பிரதேசத்தை பொறுத்தவை கணிக்க முடியாத சூழ்நிலை.

இந்த எதிர்பார்ப்பில் தான் சந்தை 10,500 புள்ளிகளில் நிலை கொண்டுள்ளது.

இதில் நேர், எதிர் மாற்றங்கள் வரும் போது அதே திசையில் அதிக தூரம் பயணிக்க வாய்ப்புள்ளது.

இப்படி ஒன்றை யூகமாக எடுத்துக் கொள்வோம்.

மத்திய பிரதேசம், சட்டீஸ்கார் இரண்டிலும் வெற்றி பெற்றால் மீண்டும் 11,000 நிப்டி புள்ளிகளை எளிதாக கடக்கலாம்.

அதே நேரத்தில் இரண்டிலும் தோற்றால் 10,000 நிப்டி புள்ளிகளை தொடவும் வாய்ப்பு உள்ளது.

இரண்டில் ஏதேனும் ஒரு மாநிலத்தில் தோற்றால் இதே நிலையில் நிற்க வாய்ப்பு உள்ளது.

இதற்கு நம்மை தயார் படுத்திக் கொண்டால் பதற்றம் அடையவும் தேவையில்லை.

மற்றொரு புறத்தில் கச்சா எண்ணெய், ரூபாய் மதிப்பு போன்றவை இந்தியாவிற்கு சாதகமாக அமைந்து வருவதால் அவற்றின் வலிமை சந்தையை தாங்கி கொள்ளவும் வாய்ப்பு உள்ளது.

அதனால் கீழே இறங்கும் சந்தை மீண்டும் மேலே வந்து சமநிலை அடையவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

வர்த்தகம் செய்பவர்கள் ஒன்றை கவனிக்கவும்.

ம்யூச்சல் பாண்ட், FII போன்றவர்கள் Hedging செய்வதற்காக தான் அதிக அளவில் Put, Call நிலையை எடுத்துள்ளார்கள்.

அதனால் அந்த தரவுகளை வைத்து எந்த முடிவிற்கும் வர வேண்டாம்.

இந்த பதற்ற நிலை முடிந்த பிறகு அவர்கள் Hedging நிலையை தவிர்த்து பழைய நிலைக்கு வந்து விடுவார்கள்.

ஆக. எதிர்பார்த்த அளவிற்கு பதற்றமடையும் சூழ்நிலை இல்லை அல்லது சந்தை ஏற்கனவே தயாராகி கொண்டுவிட்டது என்பது தான் யதார்த்தம்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக