செவ்வாய், 14 மே, 2019

அடுத்து யார்? தடுமாற்றத்தில் சந்தை...

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு.

அதிக வேலைப்பளுவும், அலைச்சலும் இருந்த நேரத்தில் கட்டுரைகளை எழுதிக் கொண்டு இருந்தால் ஏனோ தானோ என்று தான் இருக்கும்.


அதனால் தான் அமைதியாக இருந்து விட்டோம். மன்னிக்க!





இந்த வருட தொடக்கம் முதல் எதிர்மறையாகவே சந்தை இருந்து வந்தது.

மோடி வர மாட்டார். கஷ்டம். வர்த்தக போர் என்று எக்க சக்க எதிர்மறை காரணங்கள்.

திடீர் என்று தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டது. கருத்துக் கணிப்புகளும் கூடவே வந்தன. மோடி வந்து விடுவார் என்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பணத்தைக் கொட்டினர்.


சந்தை ஏறியது.

ஒரு மாத ஏற்றத்தில் இருந்த சந்தையில் மீண்டும் மோடிக்கு மெஜாரிட்டி கிடைக்காது என்று பணத்தை எடுத்து செல்ல ஆரம்பித்துள்ளனர்.

எல்லாம் ஏதோ திட்டமிட்டபடி தான் நடக்கிறது. நாம் தான் நடுவில்..

ஆனால் 60,000 கோடி அளவிற்கு உள்ளே வந்த பணத்தில் இது வரை 5000 கோடி அளவிற்கு தான் வெளியே சென்றுள்ளது.

ஆக, எதுவாக இருந்தாலும் ஏற்ற, இறக்கங்களுக்கு இனி தான் கிளைமேக்ஸ் வரப்போகிறது என்று கூட சொல்லலாம்.

பிஜேபிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்பது மிக அரிதான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

அதனை சந்தை உணர்ந்து கூட, ஒரு ஐந்து அளவிற்கு மேலிருந்து கீழே சரிந்து விட்டது.

அதனால் தற்போது சந்தையின் எதிர்பார்ப்பு பிஜேபி தனிப்பட்ட அளவில் 220 இடங்களை பெற்று கூட்டணி கட்சிகள் தயவுடன் ஆட்சியை பிடிக்கலாம்.

அது நடந்தால் கூட மீண்டும் விட்ட உயரத்தை தொட முடியும்.

அதற்கும் கீழ் சென்றால் வெளியே உள்ள மற்ற கட்சிகள் எப்படி ஆதரவு கொடுக்கும் என்பதை பொறுத்து சந்தையின் போக்கு மாற வாய்ப்புள்ளது.

அதே நேரத்தில் காங்கிரஸ் 150 இடங்கள் வரை வெற்றி பெற்று கூட்டணி கட்சிகள் தயவுடன் ஆட்சி நடத்தினால் கூட சந்தையில் பெரிய சரிவுகளை காண இயலாது.

ஆனால் இந்த இரண்டுமே ஆட்சிக்கு தலைமை தாங்காமல் மூன்றாவது அணி வந்தால் சந்தை மீண்டும் 10,000 நிபிட்டி புள்ளிகளை தொட்டாலும் ஆச்சர்யமில்லை.

இதை ஓரளவு கணிக்குமளவில் கடைசி கட்ட தேர்தல் முடியும் தேதியான மே 19 அன்று எக்ஸ்ட் போல் கருத்துக் கணிப்புகள் வெளிவரும்.

அப்பொழுது இருந்தே சந்தை தன்னை தயார் படுத்திக் கொள்ள முனையும்.

மே 24ல் தெளிவாகி மீண்டும் நல்ல நிலையில் இருக்கும் பங்குகளை வாங்குவதற்கு நாமும் தயாராக இருப்போம்.

அதற்கு முன்பு கூட வாங்கலாம். ஆனால் சில குறுகிய கால ரிஸ்க் இருக்கும்.

இது வரை ஐடி, வங்கி நிறுவனங்கள் நல்ல முடிவுகளை கொடுத்துள்ளன. அவற்றில் நல்ல பங்குகளை தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளுங்கள்!


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக