சனி, 21 ஜூன், 2014

பங்குகளின் சரியான விலையை கண்டுபிடிப்பது எப்படி? - (ப.ஆ - 20)

இந்த பதிவு எமது முந்தைய பதிவின் மீள் பதிவே.

கடந்த பதிவில் கூறப்பட்ட விவரங்கள் எளிதில் புரியும்படி இல்லை என்று எமக்கு கருத்துக்கள் வந்ததால் தற்போது எளிமைப்படுத்தி எழுதுகிறோம்.

முந்தைய பதிவைக் காண இங்கு செல்லலாம்.

பங்குகளில் முதலீடு செய்வது என்பது ஏதோ குத்து மதிப்பாக வாங்கி சூதாட்டம் போல் செய்வதல்ல. பங்குகளுக்கும் நிலங்கள், தங்கம் போன்று மதிப்பீடு செய்யலாம். அதனால் முதலீடு செய்யும் போது நாம் வாங்கும் பங்கு சரியான விலையில் உள்ளதா? என்பதை அறிய இந்தக் கட்டுரை உதவும்.

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பாகம்

தின வர்த்தகம் செய்யும் போது இதற்கு முன் பங்குகளின் விலை ஏற்ற, இறக்கங்களை அடிப்படையாக வைத்து வர்த்தகம் செய்வார்கள். இங்கு 'பங்குகளின் மதிப்பு' என்பதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கிடையாது.

ஆனால் நீண்ட கால முதலீட்டில் நிறுவன 'பங்குகளின் மதிப்பு' என்பது முக்கியத்துவம் பெறுகிறது. இந்த மதிப்பீடு என்பது கடந்த காலத்தில் நிறுவனத்தின் வருமானங்களை அடிப்படையாக வைத்து கணக்கிடலாம். இதற்கு பல முறைகள் உள்ளன.

அதில் ஒரு முறை தான் P/E என்பதனை அடிப்படையாக வைத்து மதிப்பீடு செய்வது.

P/E என்பதனைப் பற்றி விரிவாக அறிய எமது முந்தைய கட்டுரையைப் படிக்கவும்.



இந்த கணக்கீடு பின்வரும் சில சமயங்களில் பொருந்தாது.
  • நஷ்டத்தில் இயங்கி வரும் நிறுவனங்கள் அல்லது நிறுவனங்களின் வளர்ச்சி எதிர்மறையில் சென்று கொண்டிருந்தால் சரியான மதிப்பு கிடைக்காது.
  • சில நிறுவனங்கள் புற சூழ்நிலைகளின் காரணமாக வரும் வருடங்களில் அதிக அளவு வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். அந்த அதிகப்படியான வளர்ச்சி விகிதம் இந்த கணக்கீட்டில் எடுத்துக் கொள்ள முடியாது. முழுக்க கடந்த கால வளர்ச்சி விகிதத்தை அடிப்படையாக வைத்தே இந்த கணக்கீடு அமைகிறது.

இந்த கணக்கீடு செய்வதற்கு நீங்கள் முதலீடு செய்யும் நிறுவனத்தின் கடந்த ஐந்து வருடத்தில் நிறுவனத்தின் EPS மதிப்புகள் தேவைப்படும்.

அதே போல் கடந்த ஐந்து வருடத்தில் அந்த பங்குகளின் சந்தை மதிப்புகளும் தேவைப்படும். அந்த வருடத்தின் பங்குகளின் சந்தை மதிப்புகளின் சராசரி எடுப்பது நல்லது. ஆனால் அது கடினமான ஒன்று என்பதால் நிதி நிலை முடிவுகள் வரும் மார்ச் மாத பங்கு மதிப்பை எடுத்துக் கொள்வோம்.

ஆக, முதலில் இந்த தேவையான விவரங்களை தயாரித்துக் கொள்வோம்.
EPS = Earning Per Share
MP = Market Price

STEP #1: P/E கணக்கிடுதல் 

ஒவ்வொரு வருடத்திற்கும் P/E மதிப்பை கீழ் உள்ள சூத்திரத்தை பயன்படுத்திக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

P/E = Price To Earning Ratio = Market Price/Earning Per Share


STEP #2: சராசரி P/E மதிப்பைக் கணக்கிடுதல்

STEP #1ல் பெறப்பட்ட P/E மதிப்புகளிளின் சராசரியை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

நாம் ஐந்து வருட தரவுகளை எடுத்துக் கொண்டால் கீழே உள்ளவாறு சூத்திரம் வரும்.

சராசரி P/E = Avg P/E = (P/E1+P/E2+P/E3+P/E4+P/E5) / 5


STEP #3: EPS வளர்ச்சி விகிதம் கணக்கிடுதல் 

இது என்னவென்றால், கடந்த ஐந்து வருடங்களாக ஒவ்வொரு வருடமும் EPS எந்த விகிதத்தில் வளர்ந்து வருகிறது? என்பதை கணக்கிடுவதாகும்.

EPS வளர்ச்சி விகிதம் = EPS-CAGR = 
(தற்போதைய EPS(EPS-C) / 5 வருடத்துக்கு முன் EPS மதிப்பு (EPS-B5)) ^ (0.25 - 1 ) * 100.


0.25 -> 1/வருட இடைவெளி = 1/(5-1)

STEP #4: எதிர்பார்க்கும் EPS வளர்ச்சி 

STEP #3ல் பெறப்பட்ட EPS வளர்ச்சி விகிதத்தை வைத்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இதே வளர்ச்சி விகிதத்தில் சென்றால் EPS எவ்வளவாக இருக்கும் என்பதை அறியலாம்.

எதிர்பார்க்கும் EPS E-EPS = 
தற்போதைய EPS(EPS-C) * ((1 + EPS வளர்ச்சி விகிதம் (EPS-CAGR)) ^ 5)


STEP #5: எதிர்பார்க்கும் பங்கு விலை 

தற்போது எதிர் பார்க்கும் EPS வளர்ச்சி விகிதம் கிடைத்து விட்டதால், இதனை சராசரி P/Eயுடன் பெருக்கி விட்டால் எதிர்பார்க்கும் பங்கு விலை கிடைத்து விடும்.
எதிர்பார்க்கும் பங்கு விலை  = EMP = சராசரி P/E (Avg P/E) * எதிர்பார்க்கும் EPS (E-EPS)


STEP #6: தற்போதைய பங்கு விலை

இங்கு எதிர்பார்க்கும் பங்கு விலையில் பணவீக்கத்தை கழித்து விட்டால் நமது தற்போதைய பங்கு விலையை பெறலாம். நாம் 8% என்பதை பணவீக்கமாக எடுத்துக் கொள்வோம்.

உண்மையான பங்கு எதிர்பார்ப்பு விலை = R-CMP = 
EMP * (1 - (8/100))^5


STEP #7: பாதுகாப்பு விலை 

முதலில் சொல்லியிருந்தோம். இங்கு புறக்காரணிகள் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. அதனால் 35% என்பதை பாதுகாப்பு விளிம்பாக கருதிக் கொண்டால் நமது பாதுகாப்பான பங்கு விலையைப் பெறலாம்.

SMP (Safety Market Price) = R-CMP* (100-35)/100.

இந்த விலையில் -10% என்பதை கீழ்நிலை விளிம்பாகவும், +10% என்பதை மேல்நிலை விளிம்பாகவும் எடுத்துக் கொண்டு பங்கு விலை சரியான விலையில் உள்ளதா என்பதை கணக்கிடலாம்.

மீண்டும் சொல்கிறோம், சில காரணிகளால் இந்த சூத்திரங்கள் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு பொருந்தாமல் போகலாம். அதனைக் கவனித்துக் கொள்ளுங்கள்.

கொஞ்சம் கஷ்டமாக உள்ளது அல்லவா..அடுத்த பதிவில் உதாரணத்துடன் எழுதுகிறோம்.

"பங்குச்சந்தை ஆரம்பம்" என்ற இந்த தொடரின் அடுத்த பாகத்தை இங்கு காணலாம்.

எமது ஜூலை போர்ட்போலியோ ஜூலை 1ல் வெளிவருகிறது. விருப்பமுடைய நண்பர்கள் muthaleedu@gmail.com என்ற முகவரியில் கொள்ளலாம். கட்டணம் 900 ரூபாய் மட்டுமே.

English Summary:
The valuation methods for finding the stock price by Price-To-Earning values based on discounted price model. This helps to find the correct price of stocks in share market.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்: