இந்திய பங்குச்சந்தையை பார்த்தால் கடந்த ஆறு, ஏழு காலாண்டுகளாக நிறுவனங்களின் நிதி முடிவுகள் சொதப்பியே வந்திருந்தன.
இதனால் முப்பதாயிரம் சென்செக்ஸ் புள்ளிகள் வரை சென்ற சந்தை மீண்டும் படு சரிவிற்கு சென்றது.
ஆனால் இந்த காலாண்டு முடிவுகள் ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது என்று சொல்லலாம்.
சென்செக்ஸ் முதல் நூறு நிறுவனங்களின் விற்பனை சராசரியாக 5% கூடி உள்ளது. அதே நேரத்தில் சர்வதேச நிலை காரணமாக மந்தமாக இருக்கும் எண்ணெய், உலோக நிறுவனங்களை தவிர்த்து பார்த்தால் 11% விற்பனை கூடி உள்ளது.
இந்த புள்ளி விவரங்கள் உள்நாட்டு பொருளாதார நிலவரத்தில் ஒரு நல்ல முன்னேற்றத்தை காட்டுகிறது என்றே கருதலாம்.
இன்னும் சிறு, குறு அமைப்பிலான நிறுவனங்கள் இதே அளவிலான முன்னேற்றத்தை காட்டவில்லை. ஆனால் இந்த நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களை சார்ந்து இயங்கி வருவதால் வரும் காலாண்டுகளில் மிட், ஸ்மால் கேப் நிறுவனங்களும் ஜொலிக்கும் என்று நினைக்கிறோம்.
பல ஆண்டுகளாக சொதப்பி வந்த கட்டுமானத்துறையில் L&T நல்ல அறிக்கையைக் கொடுத்துள்ளது. அதே நேரத்தில் ஸ்டீல் நிறுவனங்களில் டாடா ஸ்டீல், மின் துறையில் டாடா பவர் போன்றவையும் நல்ல முடிவுகளோடு வந்துள்ளன.
இப்படி ரியல் எஸ்டேட் தவிர மற்ற துறைகளில் ஒரு நல்ல வளர்ச்சியைக் காண முடிகிறது.
இந்திய ஜிடிபி வளர்ச்சி, தொழில்துறை தரவுகள் போன்றவையும் சாதகமாக இருக்கும் பட்சத்தில் நம்பி இந்திய சந்தையில் இறங்கலாம் என்றே தோன்றுகிறது.
ஒரு அமைப்பின் அறிக்கை படி, அடுத்த 18 மாதங்களில் 40% அளவு சென்செக்ஸ் உயரும் என்று சொல்லி இருந்தார்கள்.
அந்த அளவிற்கு அதிகபட்ச எதிர்பார்ப்பு வைக்காவிட்டாலும் 32,000 சென்செக்ஸ் புள்ளிகள் என்பதை இலக்காக வைத்தால் அடைவது ஒன்றும் பெரிய கடினமல்ல.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக