புதன், 3 ஜனவரி, 2018

BITCOIN நாணயத்தை எப்படி வாங்கலாம்? (4)

எமது பிட்காயின் தொடருக்கு இவ்வளவு வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. நண்பர்களுக்கு மிக்க நன்றி!


கடந்த மூன்று பாகங்களாக BITCOIN நாணயத்தின் அவசிய தேவை ஏன் வந்தது?BITCOIN நாணயம் எவ்வாறு செயல்படுகிறது?முதலீடு செய்யலாமா? என்பது பற்றி எழுதி இருந்தோம். அதனை படித்த பின் இங்கு வருக..



அடுத்து பிட்காயின் நாணயத்தை எப்படி வாங்கலாம்? என்பது தொடர்பாக எழுதுவோம் என்று கூறி இருந்தோம்.

ஆனால் இடையில் BITCOIN நாணயத்தின் மதிப்பு பல மடங்கு கூடி விட்டதால் இது முதலீடு செய்ய தகுந்த நேரமில்லை என்று கருதினோம்.

அதனால் தான் தவறான வழிகாட்டுதல் கூடாது என்று காலதாமதம் ஏற்படுத்தி இருந்தோம்.

இந்த இடைப்பட்ட காலத்தில் BITCOIN நாணயத்தை பாதிக்கும் அளவு பல அரசியல் குறுக்கீடுகளும் ஏற்படுத்தப்பட்டன.

நாம் முன்பே சொன்னவாறு, நாணயம் என்பது ஒரு நாட்டிற்கு சொந்தமானதாகவே பார்க்கப்படுகிறது. எல்லோரும் பிட்காயின் போன்ற CRYPTOCURRNECY முறைகளை பயன்படுத்த ஆரம்பித்தால் நாடுகள் சார்ந்த அரசுகளுக்கு ஒரு பெரிய பலவீனமானதாக மாறி விடும்.

அதனால் முடிந்தவரை, முட்டுக்கட்டைகள் போட ஆரம்பித்து விட்டார்கள்.

தென்கொரியா அரசு தங்கள் நாட்டில் உள்ள BITCOIN எக்ஸ்சேஞ்களை மூட சொல்லி விட்டது. இந்திய அரசோ பிட்காயின் நாணயத்தில் முதலீடு செய்தவர்களை வரி என்ற பெயரில் நோண்ட ஆரம்பித்து விட்டது.

இதனால் வந்த பதற்றத்தில் 20,000 டாலர் என்ற உச்சத்தில் இருந்து பிட்காயின் 15,000 என்ற நிலைக்கு வந்து விட்டது.

ஆனாலும் 2017ம் வருட தொடக்கத்தில் 1000 டாலர் என்று இருந்த பிட்காயின் பதினைந்து மடங்கு கூடியுள்ள நிலையில் உள்ளது.

இதனால் இன்னும் மலிவான மதிப்பில் வரவில்லை என்றே கருதலாம்.

செய்திகளின் அடிப்படையில் பார்த்தால், 10,000 டாலருக்கு கீழே வர அதிக வாய்ப்புகள் உள்ளன.

அதனால் அதுவே முதலீடு செய்ய தகுந்த தருணம் போல் தெரிகிறது.

அடுத்து, பிட்காயினை எப்படி வாங்கலாம்? என்பதையும் பார்போம்.

பிட்காயினை பரிமாறிக் கொள்வதற்காகவே Wallet முறை கொண்ட சில எக்ஸ்சேஞ்கள் உள்ளன. இங்கு பிட்காயின் மட்டுமல்லாமல் eritherium போன்ற பிற க்ரிப்டோ நாணயங்களையும் வாங்க முடியும்.

இங்கு நமது ரூபாய், டாலர் போன்ற பல நாட்டு நாணயங்களையும் பிட்காயினுக்கு மாற்றி விடலாம்.

அதற்கு நமது வங்கி கணக்கு விவரங்கள், PAN, முகவரி தொடர்பான ஆவணங்களின் நகல்களை ஸ்கேன் செய்து Upload செய்ய வேண்டும்.

அவர்கள் சரி பார்த்த பின்னர், நமது வங்கி கணக்கில் இருந்து ரூபாயை மாற்றிக் கொள்ளலாம். அதன் பிறகு அன்றைய மதிப்பில் பிட்காயின் எவ்வளவு உள்ளதோ அந்த விகிதத்தில் வாங்கி வரவு வைக்கலாம்.

அவ்வாறு வரவு வைத்த பின்னர், பிட்காயினை ஏற்றுக் கொள்ளும் இணைய தளங்களில் பொருட்கள் வாங்கி கொள்ளலாம். மற்றவர்களுக்கும் அனுப்பிக் கொடுக்கலாம்.

அவ்வாறு நம்மிடம் உள்ள பிட்காயினை மற்றவர்களுக்கு மாற்றும் போது இதனை கவனிக்க வேண்டும்.

கணினி முறையில் சொல்வதென்றால், ஒவ்வொருவருக்கும் Public Key, Private Key என்று தரப்பட்டு இருக்கும்.

அதில் Public Key என்பது அனுப்புவதற்கான முகவரி. Private Key என்பது நாம் மற்றவருக்கு அனுப்புவதென்றால் தரப்பட்டு இருக்கும் ரகசிய குறியீடு.

இன்னும் புரியும் மொழியில் சொல்வதெனால் வங்கியில் மற்றவர் நமக்கு பணம் தருவதென்றால் நமது வங்கி கணக்கு எண்ணை கொடுப்போம். அது தான் இங்கு  Public Key.

அதே நேரத்தில் நாம் மற்றவருக்கு அனுப்பவதென்றால் நம்மிடம் ஒரு ரகசிய பாஸ்வோர்ட் இருக்கும். அது தான் இங்கு Private Key.

தற்போது பிட்காயின் பெரிய அளவில் பிரபலமாகி விட்டதால் அதிக அளவு எக்ஸ்சேஞ்கள் கொண்ட தளங்களும் முளைத்து விட்டன.

ஆனால் அவற்றில் போதுமான இணைய பாதுகாப்பு வசதி இல்லாததால் திருடர்களால் ஹேக் செய்யப்பட நிகழ்வுகளும் நடந்து உள்ளன.

அதனால் இந்த எக்ஸ்சேஞ்கள் கொண்ட தளங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும்.

அடுத்து, அருண் ஜேட்லியின் கடந்த சில பேட்டிகளை பார்த்தால் இந்திய அரசு பிட்காயின் மீது கான்டாக இருப்பது கண்கூடாக தெரிகிறது. அதனால் இந்தியாவை சார்ந்து இயங்கும் தளங்களுக்கு பெரிய அளவில் தொல்லை கொடுக்க கூட வாய்ப்பு உள்ளது.

அதனால் மத்திய அரசின் தொல்லையில் இருந்து தப்பிப்பதற்கு உலக அளவில் ஏற்கனவே பிரபலமான, பாதுகாப்பான தளங்களை நாடுவது நல்லது.

இந்த காரணத்தினால் நாமும் உலக அளவில் பெரிய, எளிதாக இருக்கும் CoinBase என்ற எக்ஸ்சேஞ்சையே பரிந்துரை செய்கிறோம்.

இணைய விமர்சனங்களும் நன்றாகவே உள்ளது.

முதல் முறையாக 100$ அளவு பிட்காயினை வாங்கினால் 10$ அளவு பிட்காயின் சலுகையாக கொடுக்கிறார்கள். இணைப்பு இங்கே உள்ளது.

https://www.coinbase.com

அதே நேரத்தில் இந்தியாவில் வாங்குவதற்கு இந்த தளம் அனுமதிக்கவில்லை. அதனால் மாற்று வழியாக www.unocoin.com வழியாகவும் வாங்கலாம்.

தொடரின் இறுதியாக, எதிர்கால கணினி உலகில்  BITCOIN பிரபலமாகுகிறதோ, இல்லையோ ஏதேனும் ஒரு CRYPTOCURRNECY பிரபலமாக அதிக வாய்ப்புகள் உள்ளது.

பொது மக்களால் பொதுவில் இயங்கும் ஒரு நாணயம் என்பது காலத்தின் கட்டாயம் என்று கூட சொல்லலாம். அதனை ஒரு நாட்டு அரசு மட்டும் எளிதில் தடை செய்து விட முடியாது.

முன்பு நாம் வெளிநாட்டில் இருக்கும் போது எப்பொழுது ரூபாய் மதிப்பு குறையும், அனுப்பலாம் என்று காத்திருப்போம். நாணய மாற்றிலும் ஏதாவது லாபம் கிடைக்குமா? என்ற ஆசையும் ஒரு காரணம்.

அது போன்ற , NRIகளுக்கு பிட்காயின் ஒரு நல்ல வாய்ப்பு என்று கூறிக் கொள்ளலாம்.

அதே நேரத்தில் வாரன் பப்பட்டின் மேற்கோள் படி, நல்ல பொருளின் மதிப்பு வீழும் போது வாங்க வேண்டும், உச்சத்தில் விற்க வேண்டும்.

அந்த வகையில் பிட்காயின் வாங்கும் சூழ்நிலை இன்னும் கனியவில்லை என்றே கருதலாம். பத்தாயிரம் வரும் வரை காத்திருப்பது நல்லது!

பிட்காயின் என்பது ஒரு கற்பனை நாணயம். தடங்கல் ஏற்படின் அதன் மதிப்பு பூஜ்யத்திற்கு கூட செல்லலாம்.

அதனால் அளவுக்கு மிஞ்சி அதிக அளவிலும் முதலீடு செய்ய வேண்டாம்!

தொடர்பான பதிவுகள் :




« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

4 கருத்துகள்: