புதன், 31 ஜனவரி, 2018

சரியும் மிட் கேப் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்பு

கடந்த பதிவில் உச்ச சந்தையில் பொறுமை காக்கும் நேரமிது என்று எழுதி இருந்தோம்.


இதற்கு தொடந்து நிப்டியும், சென்செக்ஸ் புள்ளிகளும் மேலே சென்று கொண்டிருந்ததும் ஒரு முக்கிய காரணம்.நிப்டி என்பது அதிக சந்தை மதிப்புடைய 50 நிறுவனங்கள் தான்.

கொஞ்சம் உள்ளே சென்று அலசி பார்த்தால் இந்த ஐம்பது பெரிய நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் மட்டும் தான் அதிகரித்து இருக்கிறது என்பதையும் கவனிக்கலாம்.

ஆனால் அதே நேரத்தில் மிட் கேப் என்று சொல்லப்படும் நடுத்தர நிறுவனங்களின் பங்குகள் அதே வேகத்தில் கூடவில்லை.

கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக மிட் கேப் நிறுவனங்களின் பங்குகள் அசுர வேகத்தில் கூட, பெரிய நிறுவனங்களின் பங்குகள் மேல் செல்லவில்லை.

அதனால் மதிப்பீடலில் ஒரு கட்டத்தில் ப்ளூ சிப் நிறுவனங்கள் மலிவாக கிடைக்க சிறிய நிறுவனங்களின் பங்குகளை அதிக விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தோம்.

இதனால் தான் எமது கடந்த வருட கட்டண சேவை போர்ட்போலியோவில் கூட அதிக அளவில் பெரிய அளவில் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்களையே மலிவான பங்கு மதிப்பில் கொடுத்து இருந்தோம்.

பெரியதோ, சின்னதோ ஒரு முதலீட்டாளனாக நாம் பார்த்தால் எந்த பங்கு மலிவாக கிடைக்கிறதோ, அதுவே நமக்கு நல்லது.

ஆக, பெரிய நிறுவனங்களை தான் வாங்குவேன், அல்லது சிறிய பென்னி பங்குகளை தான் வாங்குவேன் என்று பிடிமானத்தில் இருக்காமல் நேரத்திற்கு தகுந்தவாறு நம்மை மாற்றிக் கொண்டால் பங்குச்சந்தை ஒன்றும் கடினமான விடயமல்ல.

அடுத்து,
இந்த சூழ்நிலையில் தற்போது ஒரு மாற்றம் ஏற்பட்டு வருவதைக் கவனிக்க முடிகிறது.

நிப்டியின் P/E மதிப்பில் 25க்கும் அதிகமாக இருப்பதால், ஊரெல்லாம் சந்தை உச்சத்தில் இருப்பதாக பயந்து இருக்கிறார்கள்.

அதே நேரத்தில் மிட் கேப் பங்குகள் ஐந்து முதல் பத்து சதவீதம் வரை தொடர்ச்சியாக வீழ்ந்து வருகின்றன.

வளர்ந்து வரும் இந்திய சந்தையில் இந்த நடுத்தர நிறுவனங்கள் கூட நாளை ப்ளூ சிப் பங்காக மாறும் வாய்ப்புள்ள பங்குகள் தான்.

சில துறைகளில் சில மிட் கேப் பங்குகள் போட்டியே இல்லாமல் இருப்பதையும் கவனிக்க வேண்டும்.

ஒரு வியாபாரத்தில் போட்டி இல்லாவிட்டால் அதுவே பாதி வெற்றி. இந்த மாதிரியான நிறுவனங்கள் மிட்கேப் பிரிவில் அதிகமாகவே உள்ளன. இந்த பங்குகளை இனங்கண்டு முதலீடு செய்தால் நமது முதலீடும் மடங்குகளில் கூட வாய்ப்பு உள்ளது.

தற்போது சரியான சூழ்நிலை என்பதால் நண்பர்களுக்காக ஒரு மிட் கேப் மினி போர்ட்போலியோவை 900 ரூபாயில் கொடுக்கலாம் என்று இருக்கிறோம். இதில் நான்கு பங்குகள் இருக்கும்.

இந்த வார இறுதியில் போர்ட்போலியோ பகிரப்படும்.

விருப்பமுள்ள நண்பர்கள் muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக