செவ்வாய், 9 ஜனவரி, 2018

Apollo Micro Systems IPOவை வாங்கலாமா?

புது வருடத்தின் முதல் ஐபிஒவாக நாளை Apollo Micro Systems என்ற இந்த நிறுவனத்தின் ஐபிஒ வெளிவரவுள்ளது.


Apollo Micro Systems நிறுவனமானது இந்திய பொதுத்துறை பாதுகாப்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் ஒரு தனியார் நிறுவனம்.DRDO, BHEL போன்ற அரசு நிறுவனங்கள் இதன் முதன்மையான வாடிக்கையாளர்கள்.

பாதுகாப்பு துறையில் ஏவப்படும் ராக்கெட், ஏவுகணைகள் போன்றவற்றிற்கு தேவையான எலெக்ட்ரானிக்ஸ் உபகரணங்களை தயாரித்து வருகிறது.

இதனை IP என்று அழைக்கப்படும் சிப்களை தயாரித்து வருவதால் இவை கண்டுபிடிப்புகளுக்கு ஒத்த உரிமத்தை பெற்றன.

அதனால் போட்டியாளர்கள் என்பது மிகக் குறைவு.


கடந்த ஐந்து வருடங்களில் நிறுவனத்தின் லாபம் ஐந்து மடங்காக கூடியுள்ளது. அதே போல் லாபம் ஆறு மடங்குகளாக அதிகரித்து உள்ளது.

அந்த வகையில் நல்ல வளர்ச்சியைக் கொடுத்து வரும் நிறுவனம் என்று சொல்லலாம்.

இவையெல்லாம் இந்த நிறுவனத்தின் சாதகமான அம்சங்கள்.

இனி மறு பக்கத்தையும் பார்ப்போம்.

நிறுவனத்தின் லாபத்தோடு ஒப்பிடுகையில் P/E மதிப்பு 30க்கு அருகில் வருகிறது.

அதே நேரத்தில் இதே துறையில் சந்தையில் இருக்கும் Astra Microwave நிறுவனத்தின் P/E மதிப்பு 20க்குள் தான் உள்ளது.

அதனால் பங்கு மதிப்பு உச்ச விலையிலே நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று கருதலாம்.

கடந்த காலாண்டில்  Astra Microwave நிறுவனத்தின் கான்பிரன்ஸ் கால் தொடர்பில் இருந்தோம்.

அப்பொழுது திரும்ப, திரும்ப அதன் ப்ரோம்ட்டர்கள் சொல்லியது மத்திய அரசு DRDOவிற்கு ஒதுக்கும் பட்ஜெட் குறைவாகவே உள்ளது என்பது.

கிட்டத்தட்ட அதே சூழ்நிலை இந்த நிறுவனத்திலும் நீடிக்கும் என்று கருதுகிறோம்.

அதிலும் இந்த வருடத்தில் தேர்தல் பட்ஜெட் என்பதால் பாதுகாப்பு ஒதுக்கீடு என்பது குறைவாகவே இருக்கும்.

அதனால் இதே வளர்ச்சியை எதிர்பார்க்கலாமா? என்பது சந்தேகமே!

அதிகபட்ச பங்கு விலை, சாதகமில்லாத சூழ்நிலைகள் என்பது போன்ற காரணங்களால் இந்த ஐபிஒவை தவிர்ப்பது நல்லது!

ஐபிஒ மட்டும் விண்ணப்பிக்க தக்க, செபி விதி முறைகள் படி கட்டணமில்லாத BSDA டிமேட் கணக்கு திறப்பின் எம்மை தொடர்பு கொள்க..

மேலும் விவரங்களை இங்கு காணலாம்
கட்டணமே இல்லாமல் டிமேட் கணக்கு திறக்க எளிய வழி

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக