புதன், 10 ஜூலை, 2019

வலுவில்லாமல் சரியும் சந்தை, என்ன செய்வது?

நண்பர்கள் பலர் முன்பு போல் எமது பங்கு பரிந்துரை போர்ட்போலியோ சேவை ஏன் கொடுப்பதில்லை? என்று கேட்டு இருந்தனர்.


கடந்த ஒன்பது மாதாங்களுக்கு மேலாக முற்றிலும் நிறுத்தி வைத்து இருந்தோம்.



காரணம் இது தான்.

இந்திய சந்தை ஒரு அடிப்படை இல்லாத சந்தையாக மாறி வருவது போல் ஒரு சந்தேகம் இருந்து வந்தது.

எமது பங்குச்சந்தை அனுபவத்தில் இந்த அளவிற்கு நிறுவனங்கள் திவாலானதை கண்டதில்லை.


தினமும் கடன் பத்திரங்களுக்கு ஏதாவது ஒரு நிறுவனமாவது வட்டியை திருப்பி கொடுக்க முடியவில்லை என்று செய்திகள் வருகிறது.

இதில் Cox & Kings நிறுவனமானது தங்களது பேலன்ஸ் சீட்டில் 1500 கோடி ரூபாய்க்கு மேல் இருப்பு இருப்பதாக கூறி இருந்தார்கள்.

ஆனால் 100 கோடி அளவிற்கு வட்டி கட்ட முடியாமல் இருக்கிறார்கள்.

அப்படியானால் நிதி நிலை அறிக்கை பொய்யா? அதை கொடுத்த ஆடிட்டர்கள் நம்பிக்கை எங்கே? என்று பல கேள்விகள் வருகின்றன.

இந்த மாதிரியான சந்தை வீழ்ச்சி மோடி வெற்றி பெற்றாலும் வரும் என்று தான் நாமும் எழுதி இருக்கிறோம்.

அடிப்படைகள் முன்பு அரசியல் கவர்ச்சிகள் எடுபடாது. வேலை வாய்ப்பை பெருக்காமல் மோடியின் ஜாலங்கள் பலிக்க போவதில்லை.

தேர்தலுக்கு முன்பு இருந்த 11400 புள்ளிகளை தொடும் நிலைக்கு நிபிட்டி சென்று விட்டது.

இன்னும் வீழ்ச்சி இருக்குமா? என்றால் ஒரு ஐந்து சதவீதமாவது வீழ வாய்ப்பு உள்ளது.

ஆனால் தற்போதைய நிலைக்கு நிபிட்டி OverSold என்ற நிலைக்கு சென்று விட்டதால் ஒரு சிறிய எழுச்சி இருக்கும்.

அதை பயன்படுத்தி நிலையில்லாத பங்குகளில் இருந்து வெளியேறி விடுங்கள்.

மீண்டும் ஒரு சரிவு வரும் போது அந்த பங்குகள் தான் துவைத்து எடுக்கப்படும்.

இந்த நிலையில் பங்குசந்தையில் முதலீடு செய்யலாமா? என்ற கேள்வி எழலாம்.

வாய்ப்பு இல்லாமல் இல்லை. நல்ல நிறுவனங்களின் பங்குகளும் அதிக அளவில் வீழ்ந்து இருப்பதால் சல்லடை போட்டு தேடி முதலீடு செய்ய வேண்டும்.

நாமும் ஒரு ரிஸ்க் இல்லாத போர்ட்போலியோவை கொடுக்கலாம் என்று நினைக்கிறோம்.

அதன்படி, பென்னி பங்குகள் ஏதும் இல்லாத மதிப்பீடல் மட்டும் அடிப்படையில் நம்பிக்கையான நிறுவனங்கள் மட்டும் தருகிறோம்.

Valuation அடிப்படையில் என்பதால் பெரிய அளவு லாபம் எதிர்பார்க்க வேண்டாம். வருடத்திற்கு 12% முதல் 15% என்ற அளவிற்கு மட்டும் எதிர்பார்க்கலாம்.

மூன்று வருடங்கள் குறைந்தது வைப்பது நல்லது. அப்படியானால் மூன்று வருடத்தில் 50% அளவு மதிப்பு உயர்ந்து இருக்கும்.

8 பங்குகள் 1600 ரூபாய்க்கு பரிந்துரை செய்யப்படும். 4 பங்குகள் 900 ரூபாய்க்கு பரிந்துரை செய்யப்படும்.

தேவைப்படின், muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக