என்ன தான் அரசியல் கவர்ச்சிகள் உருவாக்கப்பட்டாலும், மக்களின் வாங்கும் வசதி கூடவில்லை. நிருவனங்களும் பெரிய அளவில் வளர்ச்சி காணவில்லை. வேலை வாய்ப்புகளும் இல்லை.
இதனால் தான் மோடியின் பெரிய வெற்றியை கூட சந்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் சந்தை அதிகம் எதிர்பார்த்து இருந்தது நிர்மலா சீதாராமனின் இன்றைய பட்ஜெட் தான்.
ஏற்கனவே தேர்தலுக்கு முன்பு ப்யூஸ் கோயல் ஒரு தேர்தல் கவர்ச்சி பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டதால் நிர்மலா அவர்களுக்கு பெரிதளவு வேலை இல்லாமல் பொய் விட்டது.
சந்தை எதிர்பார்த்த அளவிற்கு பெரிதாக ஒன்றும் இல்லை.
முன்பு இந்த பொருளுக்கு வரி விதிப்பு என்று பட்ஜெட் செய்தியில் போடுவார்கள்.
ஆனால் இவை எல்லாமே GST கவுன்சிலுக்கு மாற்றப்பட்ட பிறகு அந்த செய்திளுக்கு அவசியம் இல்லாமல் பொய் விட்டது.
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது, அதை பரிந்துரை செய்துள்ளார்கள் என்பது மட்டும் தான் ஒரு புதிய செய்தியாக கருதலாம்.
இது தவிர, தங்கத்திற்கு அதிக இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. அந்நிய செலாவணிக்காக இந்த முடிவை எடுத்து இருக்கலாம்.
இது தவிர, கீழ்மட்ட வளர்ச்சியில் இருக்கும் ஆட்டோ நிறுவனங்களின் 28% வரியைக் கூட குறைத்து இருக்கலாம்.
அதற்கு பதிலாக பெட்ரோல், டீசலுக்கு அதிக வரி விதித்தது எதிர் வினையை தான் தரப்போகிறது.
GST வரியை இரண்டு கட்டங்களாக மட்டும் மாற்றலாம் என்று ஜெட்லி கூறி இருந்தார். அதுவும் இல்லாமல் பொய் விட்டது.
பிசிராந்தையாரின், 'யானை புகுந்த நிலம் போல் மன்னன் வரி விதிக்க கூடாது' என்பதை உதாரணமாக கூறி இருந்தார்.
ஆனால் வரிகள் தான் அதிகமாக இருந்தது. குறைப்பு என்று எதுவுமில்லை.
மொத்தத்தில் பொருளாதார சீர்திருத்தம் தொடர்பானதோ, அல்லது வளர்ச்சியை நோக்கியோ இந்த பட்ஜெட் இல்லை.
எனது மனைவியிடம் ஒரு நூறு ரூபாயை கொடுத்து இதற்குள் செலவு செய்க என்று கூறினால் எப்படி செய்வார்களோ, அதே போல் தான் நிர்மலா சீதாராமன் செய்துள்ளார்.
பட்ஜெட்டிற்கான எதிர்பார்ப்பும் இனி வருங்காலங்களில் குறைய வாய்ப்புள்ளது.
இப்படியொரு பட்ஜெட்டிற்கு பிரிட்டிஷ் காலத்தில் இருந்தது போல் ஊழியர்களை அடைத்து வைத்து பரம ரகசியம் காட்ட வேண்டிய அவசியமில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக