எமது கடந்த சில பதிவுகளை பார்க்கும் போது ஒரு வித எதிர்மறை நிலைத்தன்மையை கண்டு இருக்கலாம்.
ஒரு விதமாக இலை மறை காயாக சந்தையின் தன்மையை உணர்த்த பயன்பட்டிருக்கும் என்று நம்புகிறோம்.
கடந்த ஒரு மாத காலமாக பார்த்தால் சந்தையில் ஒரு வித நிசப்தத்தை பார்க்க முடிகிறது.
அரசிடம் இருந்து எந்த வித கவர்ச்சி அறிவிப்புகளும் காணோம்.
பட்ஜெட்டும் ஒரு உப்பு சப்பில்லாத பட்ஜெட் என்பதோடு மட்டுமில்லாமல் ஏகப்பட்ட புதிய வரிகளையும் கொண்டிருந்தது.
போனால் போகட்டும் என்று விட்டு விட்டார்கள் போலிருக்கிறது.
பொருளாதாரத்தின் முதுகெலும்பான விவசாயம் மழை பொலிவு குறைவாக இருக்கும் என்ற காரணத்தால் மந்தமாக இருக்கிறது.
அதிக அளவில் வேலை வாய்ப்புகளை அளிக்கும் ஆட்டோ உற்பத்தி துறை புதிய விதி முறைகள், நுகர்வோர் ஈடுபாடின்மை போன்ற காரணங்களால் மந்தமாக இருக்கிறது.
கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேல் இதே நிலை தான்.
மக்களோ, பொருட்களை வாங்கவா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள்.
இது சோப்பு முதல் கார் வரை எதிரொலிப்பதை இந்த காலாண்டில் வரும் நிதி அறிக்கைகளில் தெரிகிறது.
நிதி நிலை அறிக்கை கொடுக்கும் எந்த சிஇஒவும் அடுத்த காலாண்டில் நாங்கள் ஓகோவென்று இருப்போம் என்று சொல்லவில்லை.
வரலாற்றிலே HDFC வங்கியின் நிதி அறிக்கையை பார்த்தால் 20%க்கும் குறைவாக வளர்ச்சி சென்றதில்லை. ஆனால் இந்த முறை லோன் கொடுத்ததில் so so என்றதொரு 17% வளர்ச்சியை காட்டி உள்ளார்கள். அடுத்தும் மந்த நிலையை எதிர்பார்ப்பதாக சொல்லியுள்ளார்கள்.
தினசரி ஒரு நிறுவனம் திவாலாகி வருவது ட்ரென்ட்டாகி வருகிறது.
அவர்களுக்கு கொடுக்கும் கடனை நினைத்து வங்கிகள் பங்கு அடி வாங்குகிறது.
NPA பிரச்சினை ஓய்ந்து விடும் என்று நாம் நினைத்து கொண்டிருந்தால் இனி தான் மெயின் பிட்சர் என்பது போல் தான் இருக்கிறது சந்தை நிலைமை.
2008 பொருளாதார தேக்கதுடன் இருந்த அனுபவத்தில் சொல்கிறோம்.
அப்பொழுது உலக சந்தைகள் திவாலாகி கொண்டிருந்தது. இந்திய சந்தை வலுவாக இருந்தது. அதனால் மீட்சியும் வேகமாக இருந்தது.
இப்போழது உலக சந்தைகள் அடி வாங்கி கொண்டிருக்கிறது. ஆனால் இந்திய சந்தை திவாலாகி கொண்டிருக்கிறது.
எதிர்பார்த்ததை விட வேகமான அடிக்கு தயார்படுத்தி கொள்ளுங்கள்!
பணத்தை பணமாக வைத்துக் கொள்ளவும்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக