ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

திசை மாறும் பிரச்சினைகள்

இந்தியாவின் தற்போதைய நிலையில் உண்மை பிரச்சினை என்பதே வேறு.


பிஜேபி அரசு அதனை வேறு கோணத்தில் எடுத்து செல்ல ஆரம்பித்து உள்ளது.பாகிஸ்தான் பிரதமர் சிக்கன நடவடிக்கையாக பொது விமானத்தில் பயணித்து தான் அமெரிக்கா சென்று உள்ளார்.

அந்த அளவிற்கு பாகிஸ்தானில் நிதி நெருக்கடி.

இந்த நிலையில் பாகிஸ்தானுடன் மோதுவது என்பது அடி பட்ட பாம்பை அடிப்பது போல் தான்.


ஆனால் இந்தியா முன்பு போல் வலுவாக உள்ளதா? என்றால் அதிலும் சந்தேகம் இருக்கிறது.

மூன்று வருடங்களுக்கு முன்பு இருந்த நிலைமை தற்போது இல்லை.

புதிதாக வேலை வாய்ப்புகள் என்று எதுவுமில்லை.

இந்த நிலையில் ஆட்டோ டீலர்கள் மட்டும் கடந்த மூன்று மாதங்களில் இரண்டு லட்சம் வேலைகளை காலி செய்து உள்ளனர்.

அரசின் வரி வருவாய் பற்றாகுறை கணிசமாக அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

இதே நிலை நீடித்தால் இன்னும் ஒரு வருடத்திற்குள் ஒரு பெரிய ரிசிசன் வர வாய்ப்புகள் உள்ளதை மறுக்க இயலாது.

மொத்தத்தில் சொல்லிக் கொள்ள ஏதுமில்லாத தீர்வுகள் இல்லாத நிலையில் தான் மத்திய அரசு உள்ளது.

கடந்த தேர்தலின் போது புகிமா நிகழ்வை வைத்து வட இந்தியாவில் ஓட்டு வாங்கியது.

அதனால் அதற்கு முந்தைய தேர்தலில் சொல்லப்பட்ட பொருளாதாரம், வளர்ச்சி, புல்லெட் ட்ரைன் போன்றவை காணாமல் போனது.

அதே போல் தான் கடந்த ஒரு வாரமாக ஆயிரக்கணக்கில் காஷ்மீரில் படைகளை குவித்து ஒரு பதற்றத்தை உருவாக்கி உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று அமித் ஷா அவர்கள் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து விட்டார்.

இது வரை காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவிற்கு சர்வதேச அளவில் ஒரு செல்வாக்கு இருந்து வந்தது.

ஆனால் இந்த பிரச்சினையின் தொடக்கப்புள்ளி  இந்தியா என்பதால் தற்போது இந்த ஆதரவு பெருமளவில் குறைய வாய்ப்பு உள்ளது.

இனி வரும் மாதங்களில் மக்கள் வேலை வாய்ப்பு, வளர்ச்சி போன்றவற்றை மறந்து போரை பற்றி பேச வேண்டும் என்று கூட திட்டமிட்டு இருக்கலாம்.

இறுதியில் ரிசிசனுக்கு பிஜேபி காரணமல்ல, போர் தான் காரணம் என்ற மாயை தான் உருவாக்கப்படும்.

பாலாறும், தேனாறும் வரும் என்று நினைத்தால் ரத்தம் தான் கண்ணுக்கு முன் வருகிறது.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

4 கருத்துகள்: