பங்குசந்தைகள் மும்பையை மையமாக வைத்து செயல்படுவதால் இன்று மகராஷ்டிரா சட்டசபை தேர்தலை முன்னிட்டு இந்திய பங்குசந்தைக்கு விடுமுறை.
நாளை பல விளைவுகளையும் சந்தையில் காண முடியும்.
கடந்த வாரத்தின் கடைசி இறுதி இரண்டு நாட்களிலும் BREXIT என்பது சந்தையில் எதிரொலித்தது.
ஐரோப்பியன் யூனியனில் இருந்து விலகுவதற்கு பிரிட்டன் பிரதமர் ஒரு புதிய டீலை ஏற்றுக் கொண்டதாக அறிவித்தார்.
அதனால் இந்திய சந்தையும் நேர்மறையாக மேலே சென்றது.
ஒரு வித்தியாசமாக FIIகளிடம் வாங்கும் முயற்சியை பார்க்க முடிந்தது.
அதே நேரத்தில் பிரிட்டன் பிரதமர் ஏற்றுக் கொண்டாலும் பிரிடன் நாடாளுமன்றத்திலும் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
அதற்கான வாக்கெடுப்பு கடந்த சனியன்று பிரிட்டன் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. அதில் இந்த ஒப்பந்தம் தோல்வி அடைந்து விட்டது.
அதன் விளைவு நாளை சந்தை திறக்கும் போது கூட எதிரொலிக்கலாம்.
ஆனால் இந்த வாக்கெடுப்பு தோல்வியின் வித்தியாசம் கடந்த முறையை விட சுருங்கி உள்ளது என்பது இன்னொரு சாதகமான விடயம்.
என்னவாக இருந்தாலும், பிரிட்டன் அக்டோபர் 31 அன்று ஐரோப்பியன் யூனியனில் இருந்து வெளியேறி விட வேண்டும்.
அவ்வாறு ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறினால் அது பிரிட்டனுக்கு தான் அதிக அளவு நஷ்டம்.
அதனால் இவ்வளவு சிக்கலையும் வைத்துக் கொண்டு தான் சந்தை தனது ஓவர் ஆக்டிங்கை வெளிப்படுத்தியது.
சரி. BREXIT பிரச்சினை தீர்க்கப்பட்டால் இந்திய பொருளாதாரம் உயருமா? என்றால் சில டாட்டா குழும நிறுவனங்களை தவிர்த்து பெரிய மாறுதல் ஏற்பட வாய்ப்பில்லை.
நமக்கு தற்போதுள்ள பிரச்சினை என்னவென்று பார்த்தால் அமெரிக்காவும் இல்லை, சீனாவும் இல்லை, பிரிட்டனும் இல்லை.
இவை எல்லாமே சரிவிற்கு ஒரு பக்கவாட்டு காரணிகள் தான்.
இந்தியாவில் ஏன் விற்பனை குறைந்து வருகிறது? என்பது தான்.
இது வரை பல நிறுவனங்கள் தங்கள் புதிய காலாண்டு நிதி அறிக்கையை வெளியிட்டு வருகின்றன.
அதில் லாபம் சராசரியாக 12% அளவு கூடியுள்ளது என்று காட்டப்பட்டுள்ளது. எப்படி என்றால் கார்பரேட் வரிக் குறைப்பால் இவை நிதி அறிக்கையில் எதிரொலித்துள்ளது.
அதே நேரத்தில் வருமானம் பெரிதளவு கூடவில்லை. வெறும் 5% வளர்ச்சி தான்.
அப்படி என்றால் இன்னும் டிமேண்ட் கூடவில்லை என்று தான் அர்த்தம்.
சந்தை தற்போது பெரிதும் நம்பி இருப்பது தீபாவளி விற்பனையை தான்.
கடந்த வாரம் ஓசூரில் சென்னை சில்க்ஸ் சென்று இருந்தோம். கடந்த முறை ஒப்பிடும் போது பெரிதளவு கூட்டம் காணப்படவில்லை.
அதே போல் பட்டாசு விற்பனையில் கூட ஒரு மந்தத்தை பார்க்க முடிந்தது.
இதுவெல்லாம் ஒரு மாதிரி தான். இந்த மாத இறுதியில் வெளிவரும் ஆட்டோ விற்பனை நிலவரம் ஓரளவு நிலைமையை உணர்த்தி விடும்.
அதிலும் தொய்வு இருப்பின் உயர்வுகள் உச்சத்தில் இருப்பது கஷ்டம் தான்.

Sir , What will be your expectation the currency stability of EUR INR when BREXIT happened ?
பதிலளிநீக்கு