வெள்ளி, 11 அக்டோபர், 2019

Liquid Funds முதலீடு பாதுகாப்பானதா?

நண்பர் ஒருவர் Liquid Funds நிதியில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா? என்று கேட்டு இருந்தார்.

அதனை பற்றி கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.



தற்போது நம்மிடம் இருக்கும் முதலீடு சூழ்நிலை என்பது வித்தியாசமானது.

இந்தியாவில் இது வரை பார்த்து இராத நிலையாக கூட இருக்கலாம்.

பங்குகளில் முதலீடு செய்தால் கொட்டும் அருவி போல் வீழ்கின்றன.

வங்கிகளில் FDயில் வைத்தால் வட்டி குறைவு. போதா குறைக்கு கூட்டுறவு வங்கிகளே திவாலாகி வருகின்றன.

LIC முதலீடுகள் மீது கூட தற்போது சந்தேகம் வைக்கப்படுகிறது.


ஏனென்றால், எல்லா முதலீடுகளிடம் உள்ள பணமும் ஒரு இறுதி கட்டத்தில் பங்குசந்தையில் இருக்கும் நிறுவனங்களிடமே வந்து சேர்க்கிறது.

அவை திவாலாகும் போது அந்த முதலீடுகளும் பாதிக்கப்படுகிறது.

அந்த சூழ்நிலையில் இன்னொரு வாய்ப்பு என்று பார்க்கப்படுவது Liquid Funds.

ம்யூச்சல் பன்ட்களில் இருக்கும் ஒரு வகை தான்  Liquid Funds.

ஆனால் முழுக்க நிலையான வட்டி கொடுக்கும் கடன் பத்திரங்களில் தான் முதலீடு செய்யப்படுகிறது.

உதாரணத்திற்கு L&T நிறுவனம் தங்களுக்கு நிதி தேவை என்றால் Commericial Papers மூலம் சந்தையில் நிதி திரட்டுவார்கள்.

அவற்றிற்கு ஒரு நிலையான வட்டி வழங்கப்படும்.

இந்த வட்டி விகிதம் கிரெடிட் ஏஜென்சி கொடுக்கும் தர வரிசையை பொருத்து மாறுபடும்.

AAA+ போன்ற தரங்களை கொண்டிருக்கும் பான்ட் குறைவான வட்டியையும் BBBக்கு கீழே செல்லும் பான்ட்கள் அதிக வட்டியையும் கொடுப்பது இயல்பு.

ஆனால் அண்மை காலமாக இந்த தர வரிசையைக் கொடுக்கும் நிறுவனங்களே குழப்பத்தில் இருப்பது போல் தெரிகிறது. அல்லது அங்கும் மோசடிகள் அதிகமாகி விட்டது என்று சொல்லலாம்.

ILFS, DHFL போன்ற நிறுவனங்களின் பத்திரங்களுக்கு வட்டியைக் கொடுக்க முடியாத நிலைக்கு செல்லும் வரை அவை நல்ல தரத்திலே இருந்தன.

அதன் பிறகு தான் தர வரிசைகள் மாற்றப்பட்டன. ஒரு வருடத்தில் Junk நிலைக்கு கூட வந்து விட்டன.

Liquid Funds என்பது இது போல் பல நிறுவனங்களின் பத்திரங்களின் கூட்டுக் கலவை தான்.

அதில் ஒரு நிறுவனம் வட்டியை கொடுக்க முடியாமல் போய் விட்டாலும் மொத்த Liquid Fundம் பாதிக்கப்படும்.

அதனால் தான் அண்மையில் சில Liquid Funds NAV மதிப்பு ஒரே நாளில் 7% வரை வீழ்ந்தது.

அதனால் தியரி படி Liquid Funds என்பது பாதுகாப்பானது, நிலையான வட்டி என்று சொல்லப்பட்டாலும் சூழ்நிலைகள் சாதகமாக இல்லாத நிலையில் அவை பூஜ்ஜியத்திற்கும் செல்லலாம்.

அதிலும் இந்த சூழ்நிலையில் நிறுவனங்கள் கடன் பத்திரங்கள் வெளியிடும் நிறுவனங்கள் பல வேகமாக திவாலாகி NCLT கோர்ட்டிற்கு செல்கின்றன.

அப்படி செல்லும் போது நிறுவனத்தின் சொத்துக்களை விற்று தான் இந்த பண்டிற்கு திருப்பி தர வேண்டியிருக்கும்.

அதனால் Liquid Funds முதலீட்டினை தற்போது தவிர்க்கலாம்.

பார்க்க:
DHFL சரிவால் அகல பாதாளத்தில் ம்யூச்சல் பண்ட்கள்



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

4 கருத்துகள்:

  1. நல்ல அருமையான நிதிப் பாடம்

    பதிலளிநீக்கு
  2. Nice. Also write an article about Gilt funds. Because they are 100% government bonds. Only carry interest risk

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் சொல்வது போல் Liquid funds-ஐ தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நான் நினைக்கிறேன் ;ஏன் என்றால் தற்போது SEBI-யின் guidance படி 30 நாள்களில் Maturity-ஆக கூடிய papers தான் வைத்திருக்க வேண்டும் ; மேலும் Liquid funds-ல் T-Bills தான் அதிகம் இருக்கும் ; மேலும் ஒரு Sector-ல் 20% மேல் முதலீடு செய்ய கூடாது ; cash and cash equal-ஆக 20% வைத்து இருக்க வேண்டும் ; இந்த மாதிரி புது guidelines இருக்கும் போது தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

    பதிலளிநீக்கு