புதன், 2 அக்டோபர், 2019

நம்பிக்கை இல்லா சமூகம்

நண்பர்கள் நிறைய பேர் IRCTC ஐபிஒவை வாங்கலாமா? என்று கேட்டு இருந்தார்கள்.

தற்போது நிறைய எழுதுவதற்கு தலைப்புகள் ஏகப்பட்ட வந்து கொண்டு தான் இருக்கின்றன.ஆனால் சொந்த ஊர் நாகர்கோவிலுக்கு வந்திருப்பதால் சில வேலைகள் காரணமாக அமைதியில் இருந்தோம்.

ஒரே வரியில், IRCTC ஐபிஒவை வாங்கலாம் என்று பரிந்துரை செய்கிறோம்.

இந்தியன் ரயில்வேயின் எதிர்காலமே IRCTCவை நம்பி தான் இருக்கிறது.

அதே போல் நிர்ணயித்த பங்கு விலையும் மலிவானது.


Grey Marketடில் ஏற்கனவே 50% அதிகமாக பங்கு விற்று வருகிறது. லிஸ்ட் செய்யும் போது ஒன்றிற்கு இரண்டு மடங்கு லாபம் கிடைத்தாலும் ஆச்சர்யமில்லை.

கடுமையான போட்டியில் ஐபிஒ பங்குகள் கிடைக்க வாழ்த்துக்கள்!

கடந்த இரு நாட்களாக சந்தையில் புள்ளிகள் அடி வாங்கி கொண்டிருக்கிறது.

எல்லாம் வங்கிகளில் நடந்த பிராடு வேலைகள் தான்.

PMC வங்கியில் மொத்த கடனில் 70% பங்கு HDIL என்ற ஒரே நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது. அந்த நிறுவனம் ஏப்பம் விட்டு விட்டது.

20,000 போலி கணக்குகளை உருவாக்கி அதில் கடன் இருப்பது போல் காட்டி செய்துள்ளார்கள்.

RBI பெரிய கடன்களை மட்டும் தான் பார்க்கும் என்ற கணக்கில் உருவாக்கப்பட்ட ஏற்பாடு இது.

மோசடி செய்தவர்கள் வாழ்க! ஒரு கூட்டுறவு வங்கியில் சிறுக சிறுக சேமித்து வைத்தவர்களின் வயித்தெரிச்சலை கொட்டுவதற்கு ...

எப்படி மோசடி செய்யலாம் என்பதில் இருக்கும் அக்கறையை வளர்வதில் காட்டி இருந்தால் வளர காலம் எடுத்து இருக்கலாம். ஆனால் அந்த வளர்ச்சி நிலைத்தாவது நின்று இருக்கும்.

நிதி ஆயாக் தலைவர் அண்மையில் இவ்வாறு சொல்லி இருந்தார்.

எழுபது வருடங்களில் இல்லாத அளவு ஒருத்தரை ஒருத்தர் நம்ப முடியாத நிலையில் இருக்கிறோம் என்பது தான் மையக் கருத்து.

அது உண்மை தான்.

ஊரில் இருக்கும் போது தெரிந்தவர்கள் செய்வதே தெரிகிறது.

ஒரு பக்கம் ஒருவர் பத்து லட்சம் கிராமப்புற வங்கியில் டெபாசிட் செய்கிறார். இன்னொருவர் பிள்ளைகளின் கல்விக்கு பத்து லட்சம் வரை கடன் வாங்கி விட்டு நோட்டீஸ் வரும் போது வேலை கிடைக்கவில்லை என்று சொல்லி விட வேண்டியது தான் என்று சொல்கிறார்.

ஏதோ ஒரு வகையில் இந்த டெபாசிட் பத்து லட்சம் தான் அவருக்கு சென்று இருக்கும்.

கடன் வாங்கியவர் கட்டாவிட்டால் வங்கி எப்படி டெபாசிட்டை திருப்பி கொடுக்கும்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தான் இந்த கூத்து.

போன தடவை ஊருக்கு வரும் போது செய்தி தாள்களில் அதிக அளவு தங்க நகை ஏலம் விளம்பரம். இந்த தடவை சொத்து ஏலம் விளம்பரங்கள் தான் அதிகம்.

அநேகமாக ஒரு குறுகிய காலத்தில் சொத்துகள் விலையில் தாறுமாறாக சரிவுகள் கூட ஏற்படலாம்.

அதே போல் தான் லக்ஷ்மி விலாஸ் வங்கியில் டைரக்டர்களே மோசடிக்கு துணை.

இந்தியா புல்ஸ் பற்றி ஏற்கனவே எழுதி இருந்தோம். நல்ல வரவேற்பு பெற்ற அந்த கட்டுரையை நீதிமன்ற உத்தரவிற்கு இணங்க நீக்கி விட்டோம்.

கட்டுரை எழுதிய ஒரு வாரத்தில் இந்தியா புல்ஸ் பங்கு நாற்பது சதவீத சரிவு. அதில் முதலீடு செய்து இருந்தால் கோர்ட்டில் நமக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பில்லை.

பணத்தை வங்கியில் வைத்து இருந்தால் வருமா? வராதா? என்ற சந்தேகம்.

வீட்டில் வைத்து இருந்தால் திருடன் மீது சந்தேகம்.

தங்கமாக மாற்றி லாக்கரில் வைத்து இருந்தால் வங்கி க்யாராண்டி கிடையாது.

சொத்துக்களை வாங்கினால் ரெஜிஸ்டர் ஆபிஸ் ஆவணங்கள் மீது சந்தேகம்.

யாரை நம்புவது?

இப்பொழுது சொல்லுங்கள். நம்மிடம் கூட அதிக அளவு காசு இருந்து அமெரிக்காவில் அதிக பாதுகாப்பு கிடைத்தால் பணம் அங்கே தான் செல்லும்

அது தான் நடந்து கொண்டிருக்கிறது.

வளர்ச்சி தேக்கத்திற்கு ஆளுவோர் மீது குறை இருந்தாலும், நெறிப்படுத்த முடியாத சமூகம் திருந்தாத வரை குறை சொல்லி கொண்டே அலைய வெண்டியது தான்.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

3 கருத்துகள்:

 1. படித்து பயன் பெறுகிறேன்
  வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 2. ஒருத்தன ஏமாத்துனதான் இன்னொரு்ததன் பிழைக்க முடியும் என்பது காலம் காலமாய் சொல்லப்படும் தத்துவம். ஒருவனின் விழ்ச்சியில்தான் இன்னொருவனின் வளர்ச்சி இருக்கிறது..

  பதிலளிநீக்கு
 3. no. no need to cheat to one by another. both can grow jointly like bullock cart, or train on the two trail..etc.

  one should feel and behave honestly, then total society will behave ultimately..

  பதிலளிநீக்கு