வியாழன், 13 ஜூன், 2013

முதலீடை எப்படி பிரிக்கலாம் ? - 1


நமக்கு பெரும்பாலும் தெரிந்த ஒரே முதலீடு நீண்ட கால வைப்பு என்ற Fixed Deposit தான். எங்க அப்பா காலத்துல அவருக்கு சம்பளம் அதிகபட்சம் 3500 தான். அதனால் பண புழக்கம் ரொம்ப குறைவாக இருந்தது. அவங்க மீதி இருக்கிற 5~10% வருமானத்தை RD, FD என்று சேமித்தார்கள்.


ஆனால் இப்ப ரொம்ப நிலைமை மாறி விட்டது. குறைந்தது 20~30% வருமானம் என்பது சேமிப்பாக மாறி விட்டது. ஆனால் வேலை பாதுகாப்பு என்பது குறுகி விட்டது. எதிர்பார்ப்பு அதிகமாகி விட்டதால் குறைந்த காலத்தில் அதிக லாபம் என்பதும் தவிர்க்க முடியதாகி விட்டது.


நாம் FDல் போட்டால் அதிகபட்சம் 8~9 % வட்டி தருவார்கள். அதை வட்டி என்று சொல்லாமல் தற்போதைய பண வீக்கத்தை போட்டு தருகிறார்கள் என்று சொல்லலாம். 10/15 வருடம் பிறகு இதை கொண்டு இப்ப வாங்குறதுல 10% கூட வாங்க முடியாது. அதனால் குறைத்து 20% லாபம் (return) எதிர் பார்க்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். நாம் சரியான முறையில் திட்டமிட்டால் அதனை அடைவது ஒன்றும் அவ்வளவு கடினமல்ல.

உதரணத்துக்கு நம்மிடம் 30 லட்சம் இருப்பதாக எடுத்து கொள்வோம். அதனை FDல் 10 வருடம் போட்டால் 65 லட்சம் கிடைக்கும்.

ஆனால் கீழுள்ளவாறு HIGH RISK, RISK, NO RISK என்று பிரித்து போட்டால் குறைந்த பட்சம் 20% வருமானம்  என்று எடுத்தாலும் 1 கோடி 40 லட்சம் கிடைக்கும்.

இதனை அடுத்த பதிவில் விபரமாக விளக்குகிறேன்.


தொடர்ச்சியான பதிவு:
முதலீடை எப்படி பிரிக்கலாம் ? - 2

English Summary:
Dividing Investments helps to reduce the risks. Investments can be divided based on equity, fixed income, real estate, Gold etc.
« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்:

  1. முதலீடை என்ன முறையில் பிரித்துப் போட்டால் அதிக லாபம் கிடைக்கும் என்று ‌சொல்லிவிட்டு, விரிவான விளக்கத்துக்கு வெயிட் பண்ணச் சொல்லிட்டீங்களே... அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயத்துக்காக ஆவலோட காத்திருக்கேன்!

    பதிலளிநீக்கு
  2. தங்கள் வருகைக்கு நன்றி பால கணேஷ்!

    வேலை பளுவின் காரணமாக தொடர முடியவில்லை! ஓரிரு நாளில் தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு