OtherInvestment லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
OtherInvestment லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

ரியல் எஸ்டேட் REIT பங்குகளில் முதலீடு செய்யலாமா?

கடந்த வருடமே  REIT வழியில் நிறைய ஐபிஓக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அது பற்றி நிறைய சந்தேகங்கள் வந்து கொண்டிருப்பதால் எழுதுகிறோம்.

REIT என்பது Real Estate Investment Trust என்பதன் சுருக்கம்.

கடந்த 2019ம் ஆண்டு ரியல் எஸ்டேட்டில் நிலவி வரும் மந்த நிலையை போக்குவதற்காக REIT கொள்கை மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.


கடந்த ஐந்து ஆண்டுகளாக ரியல் எஸ்டேட்டில் Liquidity என்பது மிகவும் சுருங்கி போனது. எதிர்பார்த்த அளவு மாநகரங்களில் பிளாட்கள் விற்கவில்லை. இதனால் பணப்புழக்கம் குறைந்து பல அபார்ட்மெண்ட் ப்ராஜெக்ட்கள் அந்தரத்தில் தான் நிற்கின்றன. இதே நிலை தான் கம்ர்சியல் ப்ரொஜெக்ட்களிலும் நீடிக்கிறது.

ரியல் எஸ்டேட் மக்கள் வாங்க முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அதன் விலை தான். 


வெள்ளி, 31 ஜூலை, 2020

தங்கம் விலை ஏன் உயர்கிறது?

கடந்த மூன்று மாதங்களாக தங்கத்தின் விலை உயர்வதை பார்த்தால் பாமர மக்கள் தங்கம் வாங்குவது என்பது எட்டா கனி தான்.

ஏன் இப்படி உயர்கிறது என்று தெரிந்து கொள்வது என்பதும் இந்த சூழ்நிலையில் அவசியமாகிறது.



தங்கத்தை பொறுத்தவரை, அட்சய  திருதி அன்று கூடும். தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் கூடும். முஹூர்த்த தினங்கள் இல்லாத ஆடி போன்ற மாதங்களில் குறையும் என்பது தான் பாமர சூழ்நிலையில் உள்ள பேச்சு வழக்குகள்.

அப்படி பார்த்தால் இந்த வருட ஆடி மாதம் தங்கம் விலை குறைந்து இருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக பல சதவீதங்கள் கணிசமாக கூடியுள்ளது.

உலக அளவில் தங்கம் 2 லட்சம் டன் அளவு தங்கம் தரைக்கு மேல் புழங்கி கொண்டிருக்கிறது. அதில் 20,000 டன் அளவு தங்கம் தான் இந்தியாவில் நகைகளாக இருக்கிறது. அதனால் நமது பங்களிப்பு என்பது உலக அளவில் இன்னும் குறைவு தான்.

செவ்வாய், 7 ஜூலை, 2020

Kisan Credit Card - விவசாய கடன்களுக்கு மாற்று வழி

கிராமப்புறங்களில் தங்க நகைகளுக்கான விவசாய கடன் என்பது பிரபலமான ஒன்று.

தங்க நகையை ஈடாக வைத்து எளிதில் விவசாய கடன் பெற்றுக் கொள்ள முடிந்தது. இதற்கான வட்டியில் பகுதியை மத்திய அரசு மானியமாக வங்கிகளுக்கு அளித்து வந்தது. இதனால் வட்டியும் 4% என்ற அளவிலே இருந்தது. 



அதிக பட்சம் மூன்று லட்சம் வரை கடனாக பெற்று கொள்ளலாம். ஒரு வருடத்திற்குள் திருப்பி செலுத்திக் கொள்ள வேண்டும்.

ஆனால் அண்மையில் மத்திய அரசு இந்த கடனுக்கான மானியத்தை நீக்கி விட்டது. இதனால் வட்டி என்பது வழக்கமான கடன் போல மீண்டும் 8~9% அளவிற்கு சென்று விட்டது.

சனி, 23 மே, 2020

EMI தவிர்ப்பது யாருக்கு லாபம்?

கொரோனா வந்த பிறகு ரிசர்வ் வங்கி கடன்களில் EMI கட்டுபவர்களுக்கு ஒரு கரிசனம் காட்டியது. அதாவது மூன்று மாதங்கள் EMI கட்டுவதை தவிர்க்கலாம்.

தற்போதும் நிலைமையில் முன்னேற்றம் இல்லாததால் மீண்டும் மூன்று மாதங்களுக்கு நீட்டி உள்ளது.



நேற்றைய RBI கூட்டத்தில் கவர்னர் அறிவித்துள்ளார்.

முன்பை விட நிறைய நண்பர்கள் பயன்படுத்துவார்கள் என்று இனி எதிர்பார்க்கப்படுகிறது.

அரசானது கொரோனா காலத்தில் நிறுவனங்கள் கட்டாயம் ஊதியம் கொடுக்க வேண்டும் என்ற அரசாணையை திரும்ப பெற்று விட்டது. அதனால் வரும் மாதங்களில் நிறுவனங்கள் நெருக்கடி இல்லாமலே ஆட்குறைப்பு செய்யவும் வாய்ப்பு உள்ளது.

அந்த சூழ்நிலையில் நண்பர்கள் இந்த  EMI தவிர்ப்பு லாபமா? என்பதை தெரிந்து கொள்வதும் அவசியமாகிறது.

வியாழன், 5 ஜூலை, 2018

பாலிசி போடும் மக்களும், நாமம் போடும் அரசும்

நமக்கு இன்சுரன்ஸ் பாலிசி என்றாலே முன் வருவது LIC தான்.


அரசு நிறுவனமான LICயில் போட்ட பணத்திற்கு என்றுமே பாதுகாப்பு இருக்கும் என்ற ஒரு நம்பிக்கையும் இதற்கு காரணம்.




ஆனால் அரசு வங்கிகள் நலிந்த பிறகு எல்ஐசியை ஒரு பகடை காயாகத் தான் மத்திய அரசுகள் பயன்படுத்தி வருகின்றன.

நஷ்டத்தில் ஓடும் மத்திய அரசு நிறுவன பங்குகளை வாங்க ஆட்கள் இல்லையா? உடனே எல்ஐசியிடம் ஒப்படைத்து விடு.

அரசிடம் 24% பங்குகள் வைத்து இருக்க வேண்டும் என்ற கொள்கையால் நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியாவை வாங்க யாரும் வரவில்லை.

திங்கள், 11 ஜூன், 2018

RERA: அபார்ட்மென்ட் வாங்குமுன் அவசியம் கவனிக்க ...

நகர்ப்புறங்களில் அபார்ட்மென்ட் வாங்கும் போது இருக்கும் முக்கிய பிரச்சினை விற்பவரை எப்படி நம்புவது? என்பது தான்.


பங்குச்சந்தை அளவிற்கு இந்திய ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை படுத்தப்படாததால் பெரிய அளவில் ஏமாற்றங்கள் இருந்து வந்தது.



பல மடங்கு சம்பாதிப்பதில் இருக்கும் ஆர்வம் அதே அளவு தரத்துடன் இருக்க வேண்டும் என்பதில் ரியல் எஸ்டேட் விற்பவர்களுக்கு ஆர்வம் மிகவும் குறைவாக தான் இருந்தது.

அது தான் மொத்தமாக ரியல் எஸ்டேட் வீழ்ச்சிக்கும் கூட காரணமாக அமைந்தது என்று கூட சொல்லலாம்.

வியாழன், 28 டிசம்பர், 2017

இன்சுரன்ஸ் நிறுவனங்களின் தந்திர ஏமாற்று வேலைகள்

வேலைக்காரன், அருவி படங்களை பார்த்த தாக்கமோ என்னவோ தெரியவில்லை. சிந்தனைகள் நடப்பு வாழ்வியலை நோக்கித் தான் அதிகமாக செல்கிறது.


வேலைக்காரன் படத்தில் சிவ கார்த்திகேயனின் அம்மா புதிதாக Water Purifier மாத தவணையில் வாங்கி இருப்பார்கள். அங்கிருந்து தான் கதை மாற ஆரம்பிக்கும்.



நிறுவனங்கள் தங்கள் இஷ்டத்திற்கு டார்கெட் இலக்கு வைத்துக் கொள்ள, மார்கெட்டிங் வேலை பார்ப்பவர்கள் எப்படியாவது ஏமாற்றி பொருளை வாங்க வைப்பார்கள் என்பதை உணர வைக்கும் காட்சி அது.

அது பொருட்களுக்கு மட்டுமல்லாமல், நிதி தொடர்பான முதலீடு திட்டங்களிலும் அதிகமாகவே தொடர்கிறது.

புதன், 20 டிசம்பர், 2017

வங்கியில் போடும் பணத்திற்கு எவ்வளவு உத்தரவாதம்?

வங்கி வைப்பு திட்டங்கள் தொடர்பாக அரசு திட்டங்கள் புதிய அணுகுமுறையைக் கொண்டு வரவுள்ளது. இதனால் வைப்பு நிதி பற்றி தற்போது பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.


பல நண்பர்களிடம் இருந்து இது தொடர்பாக எழுதுமாறு மின் அஞ்சல்கள் வந்தன. அவ்வாறு வராவிட்டாலும் கூட இது தொடர்பாக எழுதுவது என்பது எமது கடமையே. அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த விடயம்.



பணமாக வைத்து இருப்பது என்றால் இந்தியர்கள் அதிகம் விரும்புவது Fixed Deposit என்று சொல்லப்படும் வைப்பு நிதிகள் தான்.

ஒரு பக்கம் வட்டி விகிதங்கள் குறைந்தாலும், இன்னும் பலர் நம்பிக்கையுடன் வைத்து இருப்பது இங்கே தான்.

அதற்கு காரணம் இந்திராகாந்தி வங்கிகளை நாட்டுடமையாக்கிய பிறகு மக்களுக்கு வங்கிகள் மீது ஏற்பட்ட ஒரு அபரிமிதமான நம்பிக்கை என்று கூட சொல்லலாம்.

திங்கள், 24 ஏப்ரல், 2017

அதிக வட்டி தரும் அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம்

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை கணிசமாக குறைத்து வருகிறது.


பொதுவாக வளர்ச்சி அதிகரிக்கும் என்ற சூழ்நிலையில் வைப்பு வட்டி விகிதம் குறைந்து அதன் முதலீடுகள் பங்குச்சந்தை, தங்கம், ரியல் எஸ்டேட் போன்றவற்றிற்கு திருப்பி விடுவது இயற்கை. அது தான் தற்போது நடந்து வருகிறது.



இன்னும் வட்டி விகிதங்கள் குறைய கூட வாய்ப்பு உள்ளது. அதனால் வட்டி ஆறு சதவீதத்திற்கும் கீழ் சென்றால் கூட ஆச்சர்யம் இல்லை.

ஆனால் மாதந்தோறும் வட்டியை பெற்று அன்றாட செலவுகளுக்கு பயன்படுத்து வருபவர்களுக்கு இந்த வட்டிக் குறைப்பு என்பது மிகவும் கஷ்டமான நிலையை ஏற்படுத்தி விடுகிறது.

திங்கள், 27 பிப்ரவரி, 2017

மத்திய அரசின் தங்க முதலீட்டு திட்டத்தில் ஒரு வாய்ப்பு

(இந்த கட்டுரை 10-07-2020 அன்று மீள் பதிவு செய்யப்பட்டது.)

தங்கத்தை நகைகளாக வாங்கினால் செய்கூலி, சேதாரம் போன்றவற்றிற்கு கணிசமாக செலவழிக்க வேண்டி வரும். இதற்கு மட்டும் 15 முதல் 20% வரை தேவையில்லாமல் போக வாய்ப்பு உண்டு.

தங்கத்தை முதலீடாக கருதுபவர்களுக்கு இந்த செய்கூலி, சேதாரம் என்பது தேவையில்லாத செலவுகள் தான்.



அதனை தவிர்ப்பதற்கு மத்திய அரசே தங்க பத்திரங்களை வெளியிட்டு வருகிறது. இதற்கு Sovereign Gold Bonds என்று பெயர்.

இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் போது அன்றைய சந்தை விலையைக் காட்டிலும் 50 ரூபாய் குறைவாக தங்கத்தை பத்திரங்களாக வாங்கி கொள்ளலாம்.  தங்க விலை ஏற, ஏற இந்த முதலீட்டு பத்திரங்களின் மதிப்பும் கூடி விடும்.

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

குழந்தைகளின் படிப்பிற்கு ஏற்றதொரு LIC பாலிசி

ஒவ்வொருவரும் அன்றாட தேவைகளுக்கு அடுத்து அதிக முக்கியத்துவம் கொடுப்பது குழந்தைகளின் எதிர்கால நலன் தான்.



முன்னர் பெண் குழந்தைகள் என்றால் திருமண செலவு, ஆண் என்றால் படிப்பு செலவு என்பது அதி முக்கியத்துவம் பெற்று இருந்தது. ஆனால் தற்போது இரு பாலருக்கும் படிப்பு செலவும் முக்கியத் துவம் பெருகிறது.



பணவீக்கம் என்பது இங்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. இன்று மேற்படிப்புக்கு வருடத்திற்கு ஒரு  லட்ச ரூபாய் ஆகிறது என்று வைத்துக் கொள்வோம். இன்னும் இருபது வருடங்கள் கழித்து சராசரியாக 8% பணவீக்கம் இருப்பின் ஐந்து லட்ச ரூபாய் வருடத்திற்கு ஆக வேண்டி வரலாம். அதற்கும் நாம் தயார் படுத்திக்க கொள்ள வேண்டும்

அதே நேரத்தில் இன்றைய விலைவாசி மிகுந்த உலகில் செலவு போக சேமிப்பு என்பதே சொற்பம் தான் மிஞ்சுகிறது. அதுவும் முறையாக பராமரிக்கப்படா விட்டால் ஏதேனும் வழியில் செலவாகி விடும். அதற்கு நாம் இன்சூரன்ஸ் பாலிசிகளை நாடுவது சரியானதாக இருக்கும்.

செவ்வாய், 10 ஜனவரி, 2017

மானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு

ரூபாய் ஒழிப்பு நடவடிககைகளால் நொந்து போய் இருக்கும் ரியல் எஸ்டேட்  துறை ஆறுதலுக்க்காக பிரதம மந்திரி மோடி அவர்கள் இந்த வருட புத்தாண்டு நிகழ்வாக வீட்டுக் கடன்களுக்கான வட்டியில் அரசு மானியம் என்று ஒரு திட்டத்தை அறிவித்தார். அதன் பெயர் Pradhan Mantri Awas Yojana 2017 (PMAY).


இந்த திட்டமானது குறைந்த பட்ஜெட்டில் வீடு வாங்கும் மக்களுக்கு அதிக பலனைத் தரவல்லது.

அதனைப் பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.



இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே, குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுப்பது தான். இதில் மூன்று லட்சத்திற்கு குறைவாக வருமானம் பெறுபவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்றும், ஆறு லட்சத்திற்கு குறைவாக வருமானம் பெறுபவர்கள் குறைந்த வருமானம் பெறுபவர்கள் என்றும் அழைக்கப்படுபவர்.


இந்த திட்டம் சொந்த வீடு இல்லாத மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் தீட்டப்பற்ற திட்டம். அதனால்   தங்களுக்கோ, அல்லது உடனடியான குடும்ப உறவுகளான மனைவி, மணமாகாத மக்கள் பெயரிலோ எந்த வித வீடும் வைத்து இருக்க கூடாது என்பது முக்கிய நிபந்தனை.

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

குழந்தைகள் ம்யூச்சல் பண்ட்களை எப்படி பயன்படுத்துவது?

குழந்தை பிறந்துள்ளது என்று அறிந்தவுடனே நண்பர்கள், உறவினர்களுக்கு தெரிகிறதோ இல்லையோ எல்ஐசி ஏஜென்ட்களுக்கு முன்பே தெரிந்து விடுகிறது. எப்படி அறிகிறார்கள் என்றே கண்டு பிடிக்க முடியவில்லை.


இருந்தாலும் அந்த நண்பர் சரியான நேரத்தில் குழந்தைகள் தேவைக்கு பொருளாதார திட்டமிடுதலை ஆரம்பிக்க வேண்டும் என்பதை நியாபகப்படுத்தி விட்டார். அதற்கு நன்றி சொல்ல வேண்டும்!



எம்மைப் பொறுத்தவரை எல்ஐசி பாலிசியும் தேவை தான். ஆனால் அதனை மட்டும் முழுமையாக நம்பி இருக்க வேண்டும் என்பதில் கொஞ்சம் மாறுபாடு உள்ளது.

குழந்தைகளுக்கு என்று திட்டமிடும் போது இரண்டு வகையாக திட்டமிட வேண்டி உள்ளது.

திங்கள், 25 ஜனவரி, 2016

தங்கத்தை வெளியே கொண்டு வர படாத பாடு படும் மத்திய அரசு

கடந்த நவம்பரில் வீட்டில் உறங்கும் தங்கத்தை வெளியே கொண்டு வர மத்திய அரசு சில திட்டங்களைக் கொண்டு வந்தது.


அது போல், மேலும் தங்கத்தை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதைத் தடுக்க சில முதலீட்டு பத்திரத் திட்டங்களைக் கொண்டு வந்தது. அது ஓரளவு வெற்றியும் பெற்றது என்று சொல்லலாம்.



ஆனால் வீட்டில் இருக்கும் தங்கத்தை உருக்கி வங்கியில் வைத்து வட்டி பெற்றுக் கொள்ளுங்கள் என்ற மற்றொரு திட்டம் பெரிதளவு வெற்றி பெறவில்லை.

அதற்கு இருக்கக்கூடிய நகைகளை உருக்கி வங்கியில் கொடுக்க வேண்டும் என்பது நமது ஊர் பெண்களின் செண்டிமெண்டை பாதிக்கும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

புதன், 13 ஜனவரி, 2016

வரி சேமிப்பதற்காக எல்.ஐ.சி கொண்டு வரும் இன்சுரன்ஸ் திட்டங்கள்

எம்மிடம் ஒரு நண்பர் நீண்ட நாள் நோக்கில் சில தனியார் நிறுவனங்களின் திட்டங்களைக் குறிப்பிட்டு இணையலாமா? என்று கேட்டு இருந்தார்.


இன்சுரன்ஸ் திட்டங்களைப் பொறுத்த வரை எல்.ஐ.சி ஒரு அரசு நிறுவனமாக இருப்பதால் பாதுகாப்பு அதிகம். இன்னும் அதன் சேவைகள் தனியார் நிறுவனத்துடன் போட்டி போடும் அளவு உள்ளது.



தற்போதைய சூழ்நிலையில் பல தனியார் நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களுடன் வெகு வேகமாக இணைக்கப்படுகின்றன.

இது தவிர இருபது, முப்பது வருடங்கள் என்று திட்டங்களில் முதலீடு செய்யும் போது அப்பொழுது அந்த நிறுவனங்கள் இருக்கிறதா? அல்லது எந்த பெயரில் இயங்குகின்றன என்பன போன்ற நடைமுறை சிக்கல்கள் அதிகமாகவே உள்ளன.

வெள்ளி, 27 நவம்பர், 2015

வரிக்கான வருமானம் வராவிட்டாலும் பதிவு செய்ய வேண்டுமா?

பொதுவாக வருமான வரி கட்டிய பிறகு அதற்கான முழு விவரங்களை ரிடர்ன் ஆவணமாக பதிவு செய்வது வழக்கம்.


எதிர்காலத்தில் வருமானம் மற்றும் வரி கட்டியதற்கான ஆதராமாக இந்த ரிடர்ன் படிவங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.



ஆனால் சில சமயங்களில் நமது வருமானம் வருமான வரி வரம்பிற்குள் வராவிட்டாலும் பதிவு செய்ய வேண்டுமா? என்ற சந்தேகம் வரலாம்.

வருமான வரி சட்டங்கள் படி, நாம் வருமான வரி வரம்பிற்குள் வராவிட்டால் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. அதாவது தற்போது 2.5 லட்சத்திற்கு கீழ் வருடத்திற்கு வருமானம் வந்தால் பதிவு செய்ய வேண்டாம்.

செவ்வாய், 17 நவம்பர், 2015

வெளிநாட்டு இந்தியர்கள் வீட்டுக் கடன் பெறுவது எப்படி?

பலரும் வெளிநாடு சென்று வேலை பார்ப்பதன் முக்கிய நோக்கம் ஊரில் வீடு கட்டுவது என்பதும் ஒரு முக்கிய காரணமாக இருக்கும்.


ஆனால் நாம் வெளிநாடு சென்று இருக்கும் போது இருபது லட்ச லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடுகள் ஐந்து வருடம் கழித்து திரும்பி வரும் போது ஐம்பது லட்சமாக மாறி இருக்கும்.



அந்த சமயத்தில் நாம் சம்பாதித்து வைத்த தொகையை வீட்டு மதிப்புடன் பார்த்தால் மீண்டும் ஒரு ஐந்து ஆண்டுகள் வேலை செய்தால் தான் அவ்வளவு சம்பாதிக்க முடியும்.

இப்படியே கால தாமதம் ஆகி இறுதியில் ஒரு வீடு கட்டுவது ஒரு கனவாகி விடும்.

முதலீடுகளின் மதிப்பு காலத்துடன் சேர்ந்து கணிசமாக கூடுகிறது. ஆனால் நமது சம்பளம் அந்த அளவு கூடுவதில்லை என்பது தான் இங்கு ஒளிந்து இருக்கும் விடயம்.

புதன், 4 நவம்பர், 2015

தங்கத்திற்கு வட்டி தரும் அரசு பத்திரங்களை பயன்படுத்துவது எப்படி?

இன்று பிரதமர் மோடி அவர்கள் தங்க பத்திரங்கள் மற்றும் தங்க நாணயங்கள் தொடர்பான திட்டத்தினை தொடங்கி வைக்கிறார்.


இந்த திட்டம் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டாலும் திட்டமிடுதல் மற்றும் ரிசர்வ் வங்கி ஒப்புதல் பெறுதல் போன்ற காரணங்களால் தற்போது நடைமுறைக்கு வருகிறது.



இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் வீட்டில் பயன்படாமல் இருக்கும் தங்கத்தை முதலீடு முறைக்கு கொண்டு வருதல் மற்றும் தங்கத்தை உலோகமாக வாங்கி வைப்பதை குறைப்பதும் ஆகும்.

இதனால் தங்க இறக்குமதி குறைந்து பெருமளவு அந்நிய செலாவணி மிச்சமாகலாம் என்பது அரசின் கணிப்பு.

பங்குச்சந்தையில் புழங்கும் தங்க ETF போன்ற பத்திரங்களை போல் அரசும் தங்க பத்திரங்களை வெளியிட உள்ளது.

புதன், 28 அக்டோபர், 2015

வரி சலுகை பெற உதவும் REC கடன் பத்திரங்கள்

அதிக பாதுகாப்பான முதலீடை தேடுபவர்களுக்கு நிறுவனங்கள் வழங்கும் கடன் பத்திரங்களும் ஒரு நல்ல வாய்ப்பு என்று ஏற்கனவே எழுதி இருந்தோம்.

பார்க்க: பதற்றமான சந்தை நிலவரத்தில் பாதுகாப்பு தரும் பாண்ட்கள்


அந்த வரிசையில் NTPC, PFC போன்ற அரசு நிறுவனங்களின் பத்திரங்களையும் பரிந்துரை செய்து இருந்தோம்.



பொதுவாக இந்த கடன் பத்திரங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தான் வெளியிடப்படுவதுண்டு. அதனால் மேலே சொன்ன கடன் பத்திரங்களை தவறியவர்கள் REC கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.

REC என்பதன விரிவாக்கம் Rural Electrification Corporation. இது ஒரு மத்திய அரசு நிறுவனம். கிராமப்புறங்களுக்கு மின்சார விரிவாக்கம் தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகிறது. நிதி நிலைமையும் நன்றாக உள்ளது.

வியாழன், 22 அக்டோபர், 2015

வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் அபராதம் தவிர்க்க சில டிப்ஸ்

கிட்டத்தட்ட நாம் அனைவருமே இந்த பிரச்சினையை சந்தித்து இருக்கலாம்.


வங்கி கணக்குகளில் குறைந்த பட்ச தொகை இல்லாவிட்டால் நாம் போட்டு வைத்து இருந்த தொகையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும். ஒரு கட்டத்தில் நெகடிவ் பேலன்ஸ் தொகைக்கும் சென்று விடும். ஆமாம். அபராதமாக பிடித்து விடுவார்கள்.



ஆர்பிஐ இந்த மினிமம் பேலன்ஸ் தொடர்பாக எந்த பொது விதி முறையும் வைத்து இருப்பதில்லை.

அதனால் வங்கிகளுக்கிடையே இந்த மினிமம் பேலன்ஸ் தொகையும் அபராதமும் மாறுபடுகிறது.

அரசு வங்கிகள் என்றால் குறைந்த தொகை வைத்துக் கொண்டால் போதும். தற்போது ஆயிரம் ரூபாய் மினிமம் வைத்துக் கொண்டால் போதும்.