Personal finance லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Personal finance லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 22 அக்டோபர், 2014

காப்புரிமை போரில் விழி பிதுங்கும் மொபைல் நிறுவனங்கள்

தமது கண்டுபிடிப்புகளுக்காக பெறும் ஒரு உரிமையே காப்புரிமை என்று அழைக்கப்படுகிறது. இது பல காலங்கள் ஆராய்ச்சிக்காக செலவிட்டதன் பயனை திரும்பி அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது. இதனால் பல புதிய கண்டுபிடிப்புகள் உருவாவதற்கு காப்புரிமை வழிவகுத்தது.

புதன், 23 ஜூலை, 2014

வங்கியில் போடும் பணத்திற்கு உத்தரவாதம் எப்படி கிடைக்கிறது?

கடந்த வார சந்தையில் வங்கி பங்குகள் நல்ல உயர்வைக் கொடுத்தன. ரிசர்வ் வங்கி SLR என்ற விகிதத்தை குறைத்தது தான் இந்த உயர்விற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. அந்த SLR விகிதத்தைப் பற்றி இந்த பதிவில் விவரமாக பார்க்கலாம்.

செவ்வாய், 17 ஜூன், 2014

கிராமப்புறத்தை சேர்ந்தவரா? சூப்பர் பாலிசி இருக்கிறது..

இன்சூரன்ஸ் பாலிசி என்றால் முதலில் நினைவுக்கு வருவது எல்.ஐ.சி தான். அரசின் உத்தரவாதம் இருப்பது முக்கிய காரணம்.

தனியார் நிறுவனம் என்றால், 20 வருடம் கழித்து ஒரு நிறுவனம் இருக்குமா என்ற கேள்விக்குறியில் முதலீடு செய்வது தயக்கமாக இருக்கலாம்.

புதன், 14 மே, 2014

ஓய்விற்கு பயன்படும் எளிய, நிலையான PPF முதலீடு

ஒரே அடியாக பங்குச்சந்தை மேலே சென்றாலும் போரடித்து விடுகிறது. தற்போதைய யூக சந்தையில் நீண்ட கால முதலீட்டாளர்கள் வேடிக்கை மட்டும் தான் பார்க்க வேண்டியுள்ளது.

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

ULIPல் முதலீடு செய்யலாமா?

இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்னாள் மிகவும் பிரபலமான முதலீடு திட்டம் ULIP.

ULIP என்றால் Unit Linked Insurance Plan.


தொடக்கக் காலத்தில் மிக அதிக அளவில் விளம்பரப் படுத்தப்பட்டது. அதாவது இதில் முதலீடு செய்தால் 10 வருடங்கள் கழித்து முதலீடு பத்து மடங்காகும் என்று கூறி முகவர்கள் விளம்பரம் செய்தது இன்னும் நியாபகத்தில் நிற்கிறது.

இப்படித் தவறான தகவல்களைக் கொடுத்ததால் இன்று முதலீட்டாளர்கள் நம்பிக்கையை இழந்து காணப்படுகிறது. அதாவது முதலீடு செய்தவர்கள் கூட ஒரு கட்டத்தில் மொத்தமாக முதலீட்டினை வாபஸ் வாங்கியது பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியது.

ஆனால் இன்றும் இத்தகைய திட்டங்கள் செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. மக்களும் ஏமாற்றப்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள்.

எப்படி என்று விவரமாகப் பார்ப்போம்.

எல்லாம் கலந்த தெளிவில்லாத கலவை 


ULIP என்பது நிரந்தர வருமானம், இன்சூரன்ஸ் மற்றும் பங்குச்சந்தை என்ற மூன்றையும் ஒருங்கிணைத்து வடிவமைக்கப்பட்டது. அதாவது தனித்தனியாக ஒவ்வொரு திட்டங்களிலும் சேராமல் ஒரே திட்டத்தில் மூன்று பயன்களைப் பெறலாம் என்பதே இதன் சிறப்பம்சம்.

வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

வருமான வரி விலக்கு பெற என்ன செய்யலாம்?

இந்த கட்டுரையில் வருமான வரி விலக்கு பெறும் வழி முறைகளைப் பற்றி விவரமாக பார்ப்போம்.


கடந்த பதிவில் வருமான வரியைக் கணக்கிடுவது எப்படி என்று எழுதி இருந்தோம். நல்ல ரெஸ்பான்ஸ். நன்றி!

அந்த கட்டுரையைக் காண இங்கு செல்லவும்.
வருமான வரியைக் கணக்கிடுவது எப்படி?

பொதுவாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வங்கிகளின் காப்பீடு, முதலீடு முகவர்களுக்கு கொண்டாட்டம் தான். அவசர கோலத்தில் ஏதாவது ஒரு முதலீடு செய்து வரியை சேமிக்கலாம் என்று நிறைய பேர் இந்த திட்டங்களில் சேருவார்கள். அப்புறம் தான் அதில் உள்ள எதிர்மறைகள் தெரிய வரும்.


எமக்கும் சில அனுபவங்கள் உண்டு. ஆரம்ப காலங்களில் சில முகவர்களிடம் வரி சேமிக்க சில முதலீடுகள் செய்து ஏமாற்றம் அடைந்தது உண்டு. அதில் ஒன்று ULIP Insurance என்ற திட்டம். அதன் பிறகு தான் தெரிந்தது. இதனை விட FDல் அதிக பலன் உள்ளது. இதனைப் பற்றி தனியாக கட்டுரை எழுதுகிறோம்.

இந்த பதிவில் வரியைக் குறைப்பதற்காக உள்ள வழிமுறைகளை விரிவாக பார்ப்போம்.

புதன், 25 டிசம்பர், 2013

வீட்டுக் கடன் அலைச்சலைக் குறைக்க ஒரு எளிய வழி

பல நேரங்களில் வங்கிக் கடன்கள் வாங்கும் போது அதிக அளவு அலைச்சல் ஏற்படுகிறது. இந்தக் கணனியுகத்தில் சில smart வழிகள் உள்ளன. அதனைப் பற்றி இந்த கட்டுரையில் விரிவாகப் பகிர்கிறோம்.

வெள்ளி, 20 டிசம்பர், 2013

SBI, HDFC வீட்டுக்கடன் வட்டி குறைக்கப்பட்டுள்ளது

இந்த மாதத்தில் RBI வங்கிகளுக்கான Repo Rate, Reverse Repo Rate என்று எதிலும் மாற்றம் செய்யவில்லை.

புதன், 4 டிசம்பர், 2013

வீட்டு கடன் வட்டியை அதிகரித்த HDFC வங்கி

HDFC வங்கியில் வீட்டு கடன் திட்டமிடுபவர்களுக்காக இந்த பகிர்வு. HDFC வங்கி தனது வீட்டுக் கடன் வட்டியை 0.10% அதிகப்படுத்தி உள்ளது.

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

நிலையான வருமானம் பெற ஒரு வழி..Debt Funds

சில நண்பர்கள் நிலையான வருமானம் வர சில வழிகளைக் கூறுமாறு பின்னூட்டம்  இட்டிருந்தார்கள். இப்படி ரிஸ்க் இல்லாமல் ரஸ்க் சாப்பிட விரும்பவர்களுக்காக இந்த பதிவு.

வழக்கமாக நிலையான வருமானம் என்றால் நமக்கு தெரிந்தது Fixed Deopsit. அது தவிர சில முதலீடுகள் உள்ளன. அதிலொன்று நிறுவனங்கள் வழங்கும் "Tax Free Debt Fund" முதலீடுகள்.

சனி, 19 அக்டோபர், 2013

உங்க PF கணக்கில காசு இருக்குதா? சீக்கிரம் போய் பாருங்க..

நேற்று இரவு ஒரு வட இந்திய நண்பர் ஹிந்தி செய்தித்தாளில் வந்த PF கணக்கில் நடந்த ஊழலைப் பற்றி சொன்னார்.

அந்த  செய்தியின் சுருங்கிய சாராம்சம் இது தான்.

மொத்தமுள்ள 8.15 கோடி PF கணக்குகளில் 30 சதவீத, அதாவது  2.5 கோடி கணக்குகளில் பணம் எதிர்மறை இருப்பைக் காட்டியுள்ளது.

வியாழன், 17 அக்டோபர், 2013

ரியல் எஸ்டேட்... விலை வீழ்ச்சி அபாயம்! ஓர் அதிரடி ரிப்போர்ட்

இது விகடனில் வந்த ஒரு மிக நல்ல கட்டுரை.

நன்றி விகடன் மற்றும் கட்டுரை ஆசிரியர் சரவணன் அவர்களுக்கு.
மூலம்ரியல் எஸ்டேட் விலை வீழ்ச்சி அபாயம்

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

EPF Pension உண்மையாகவே பயனுள்ளதா?

தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் மாத சம்பளத்தில் 12% PFக்கு பிடித்தம் செய்யபடுகிறது. அதே போல் நிறுவனங்களும் 12% பங்களிப்பு வழங்குகின்றன.

இதில் பகுதி (12%+3.67%) வருங்கால வைப்பு நிதி(PF)க்கும் பகுதி(8.33%) ஓய்வூதியம்(Pension) என்று செல்கிறது.

வியாழன், 11 ஜூலை, 2013

முதலீடை எப்படி பிரிக்கலாம் ? - 5

முந்தைய பதிவின் தொடர்ச்சி..

முந்தைய பதிவில் MUTUAL FUND வரை பார்த்தோம். இனி பங்கு சந்தையில் எவ்வாறு முதலீடு செய்வது என்று பார்போம்.இது மிகவும் RISK ஆனது. கொஞ்சம் திட்டமிட்டு செயல்பட்டால் நம்முடைய முதலீட்டின் மதிப்பை கணிசமாக உயர்த்திவிடும் 

அதற்கு முன் அடிப்படை விதியான "ஒரே கூடையில் அணைத்து முட்டைகளையும் போடுவதை" தவிர்க்க வேண்டும். அதாவது ஒரே பங்கில் மட்டும் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். அதனால் எதிர்பாராத சில பங்கு இழப்புகள் மற்ற பங்குகளின் லாபத்தில் சமன் பெற்று விடும்.

புதன், 10 ஜூலை, 2013

அதிக பயன் தரும் SBI MAXGAIN வீட்டுக்கடன்

வீட்டுக்கடனை விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு SBI MAXGAIN ஒரு நல்ல தேர்வு. 

வெள்ளி, 28 ஜூன், 2013

முதலீடை எப்படி பிரிக்கலாம் ? - 4

முந்தைய பதிவின் தொடர்ச்சி..



மேல் உள்ள படத்தில் உள்ளவாறு ஒரு பகுதியினை பங்கு சார்ந்தவற்றில் முதலீடு செய்யுங்கள்.

பங்குச்சந்தை சார்ந்த முதலீடை இரண்டு வகையாக பிரிக்கலாம் 
1. Mutual Fund.
2. Direct to Stocks

வியாழன், 27 ஜூன், 2013

முதலீடை எப்படி பிரிக்கலாம் ? - 3

முந்தைய பதிவின் தொடர்ச்சி..

இந்த பதிவில் RISK அதிகமுள்ள பங்குசந்தையை பார்க்கலாம்.

பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் அது என்ன என்று தெரிந்து கொள்வது மிக அவசியமாகிறது.

வியாழன், 20 ஜூன், 2013

சில நீண்ட கால வைப்பு முதலீடுகள் (FD)

தற்போதைய நிலவரத்தில்இந்த வங்கிகள் சிறந்த வட்டி விகிதங்கள் அளிக்கின்றன.

ஞாயிறு, 16 ஜூன், 2013

முதலீடை எப்படி பிரிக்கலாம் ? - 2

முந்தைய பதிவின் தொடர்ச்சி..
அதாவது உங்களிடம் 30 லட்சம் ரூபாய் இருப்பின் இவ்வாறு முதலீடு செய்யலாம்.

வியாழன், 13 ஜூன், 2013

முதலீடை எப்படி பிரிக்கலாம் ? - 1


நமக்கு பெரும்பாலும் தெரிந்த ஒரே முதலீடு நீண்ட கால வைப்பு என்ற Fixed Deposit தான். எங்க அப்பா காலத்துல அவருக்கு சம்பளம் அதிகபட்சம் 3500 தான். அதனால் பண புழக்கம் ரொம்ப குறைவாக இருந்தது. அவங்க மீதி இருக்கிற 5~10% வருமானத்தை RD, FD என்று சேமித்தார்கள்.