முந்தைய பதிவின் தொடர்ச்சி..
முந்தைய பதிவில் MUTUAL FUND வரை பார்த்தோம். இனி பங்கு சந்தையில் எவ்வாறு முதலீடு செய்வது என்று பார்போம்.இது மிகவும் RISK ஆனது. கொஞ்சம் திட்டமிட்டு செயல்பட்டால் நம்முடைய முதலீட்டின் மதிப்பை கணிசமாக உயர்த்திவிடும்
அதற்கு முன் அடிப்படை விதியான "ஒரே கூடையில் அணைத்து முட்டைகளையும் போடுவதை" தவிர்க்க வேண்டும். அதாவது ஒரே பங்கில் மட்டும் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். அதனால் எதிர்பாராத சில பங்கு இழப்புகள் மற்ற பங்குகளின் லாபத்தில் சமன் பெற்று விடும்.
English Summary:
Dividing Investments helps to reduce the risks. Investments can be divided based on equity, fixed income, real estate, Gold etc.
தொடரும்...

- அதிகபட்சம் 15 பங்குகளுக்குள் முதலீடு செய்தால் கண்காணிப்பது எளிது.
- முதலீடு செய்யும் பங்குகள் ஒன்றுக்கொன்று சாராத தொழில்களில் இருந்தால் நல்ல முறையில் சமன் பெற்றிருக்கும்.
- முதலீடு செய்யும் நிறுவனங்கள் சந்தை அடிப்படியில் பெரியது ( LARGE CAP), நடுரகம் (MID CAP), சிறியது(SMALL CAP) என்று பிரித்தல் நல்லது. LARGE:MID:SMALL = 60:25:15 என்ற விகிதத்தில் இருந்தால் சராசரியாக 20~25% வருட லாபம் பெறுவது எளிது.
- பொதுவாக வங்கி, மென்பொருள் பங்குகள் அதிக ஏற்ற, இறக்கங்களை கொண்டிருக்கும்.
- நுகர்வோர், உணவு போன்ற தினசரி சேவை சார்ந்த பங்குகள் சராசரியான வளர்ச்சியை உறுதியாக தரும்.
மேற்கொண்ட குறிப்புகள் பங்குசந்தையின் அடிப்படைகளில் சில. ஆனால் தகுதியான பங்குகளை தேர்ந்தெடுப்பது என்பது மிக கடினம். வாரன் பப்பட் முதல் சிறு முதலீட்டார்கள் வரை ஒவ்வொருவரும் வெவ்வேறு முறைகளை அடிப்படையாகக் கொண்டு முதலீடு செய்கிறார்கள்.
இதில் முக்கியமான இரண்டு 1. FUNDAMENTAL ANALYSIS 2. TECHNICAL ANALYSIS.
இதில் FUNDAMENTAL ANALYSIS என்பது நிறுவனங்களின் பொருளாதார நிலையைஅடிப்படையாக வைத்து ஆய்வு செய்யப்படும். நீண்ட கால முதலேடு செய்பவர்கள் இதனை அடிப்படையாக வைத்து முதலீடு செய்வார்கள்.
TECHNICAL ANALYSIS என்பது பங்குசந்தையின் ஏற்ற, இறக்கங்களை அடிப்படையாக வைத்து ஆய்வு செய்யப்படும். குறைந்த கால முதலீடு செய்பவர்களுக்கு ஏற்றது.
English Summary:
Dividing Investments helps to reduce the risks. Investments can be divided based on equity, fixed income, real estate, Gold etc.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக