வெள்ளி, 11 அக்டோபர், 2013

தஞ்சாவூரை சேர்ந்த ஒரு இளம் சாதனைத் தமிழர்

"The Weekend Leader" பத்திரிக்கை மூலமாக 23 வயது ஒரு இளம் சாதனை தமிழரைப் பற்றி அறிய முடிந்தது. அவர் தஞ்சாவூரை சேர்ந்த பிரபாகரன் என்ற இளம் உயிர் தொழில்நுட்ப (Bio-Technology) விஞ்ஞானி.

அதன் பின் அவரிடம் மேலும் தகவல்கள் அறிவதற்காக தொடர்பு கொண்டோம். அவரைப் பற்றிய கட்டுரைகள் தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என்று பலவேறு மொழிகளில் வந்திருப்பதை பகிர்ந்து கொண்டார்.

அவரைப் பற்றி இங்கு எழுதுவது நமக்கு பயனாகவும், அவருக்கு உற்சாகமாகவும் இருக்கும்.


பிரபாகரன்
அவரைப் பற்றி நாம் ஒரு அறிமுகம் செய்வதற்கு பதிலாக இந்த
செய்தியை தமிழாக்கம் செய்தால் அதுவே நன்றாக இருக்கும். அதனை இந்த பதிவில் பகிர்கிறோம்.

அடுத்த பதிவில் அவர் தனிப்பட்ட முறையில் பகிர்ந்த கருத்துக்களை பேட்டி வடிவில் கொடுக்கிறோம். அவர் தனது பேட்டியில் ஒரு நிறுவனம் தொடங்க இந்தியாவில் உள்ள சவால்களைப் பற்றி நிறைய கூறி இருந்தார்.

"The Weekend Leader"  செய்தியின் தமிழாக்கம்
Driving mosquitoes away without harming people, Hermo set to create history.

எஸ் பிரபாகரன் , தமிழ் நாட்டில் தஞ்சாவூர் நகரத்தை சேர்ந்த ஒரு இளம் உயிர் தொழில்நுட்ப விஞ்ஞானி. இன்று கொசுவை விரட்ட பயன்படுத்தப்படும் இரசாயன கிரீம்கள் , திரவ ஆவி பொருள்கள் , மற்றும் சுருள்களுக்கு மாற்றாக 'Hermo' என்ற பெயரில் ஒரு மூலிகை கொசு தடுப்பான் பொருளைக் கண்டுபிடித்துள்ளார்.

Hermo , என்பது இயற்கையான மூலிகை சாற்றைக் கொண்ட ஒரு திரவம். இதனை உடம்பில் தெளித்து கொள்வதன் மூலம் கொசு தொல்லையினைக் கட்டுப்படுத்தலாம்.

இந்த புதிய உற்பத்தி பொருள் சநதையில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. 100 மில்லி பாட்டில் 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டில் திருச்சி , தஞ்சாவூர் , சென்னை , கோயம்புத்தூர் , திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் போன்ற ஆறு மாவட்டங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

'Hermo' முற்றிலும் பாதுகாப்பான , ஒவ்வாமை மற்றும் நச்சு இல்லாத ஒரு தயாரிப்பு என்று சான்றிதழ் பெற்றுள்ளது . சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளுக்கு இதனை பரிந்துரைத்து வருகின்றனர் என்கிறார் பிரபாகரன்.

பிரபாகரன் தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் கடந்த வருடம் உயிர் தொழில் நுட்பவியல் படிப்பை முடித்தார்.

ஒவ்வொரு 100 மில்லி Hermo பாட்டிலும் cymbopogan citrates ( எலுமிச்சை புல் ) 6ml , cymbopogon martini ( rosha புல் ) 1.5 மில்லி , azadirachta indica ( வேம்பு ) 2ml , ocimum sanctum மற்றும் ( துளசி ) 0.5 மில்லி என்ற விகிதத்தில் கொண்டிருக்கிறது .

பிரபாகரனின் ஆராய்ச்சிப் பணி இரண்டாம் ஆண்டு படிக்கும் போதே PMU மற்றும் இந்திய அறிவியல் & தொழில்நுட்ப கழகத்துடன் இணைந்து தொடங்கியது.

அனாலும் அவர் கல்லூரி கல்வியில் போராடி. பள்ளியில் முதலிடத்தை பிடிப்பது மிகவும் கடினமாக இருந்தது. பள்ளியில் தமிழ் வழியில் படித்து அவர் முதலில் வந்தாலும். கல்லூரியில் ஆங்கில வழி படிப்பில் மிகவும் கஷ்டப்பட்டார்

"நான் என் கிராமத்தில் ஒரு அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்தேன். ஆங்கிலம் கற்றுக் கொள்வது மிகவும் கடினமாக இருந்தது."

"அதனால் என் கல்லூரி முதல் ஆண்டில் 4 பாடங்களில் தோல்வியும்,
இரண்டாவது ஆண்டில் 2 தோல்வியும் அடைந்திருந்தேன். இதனால் வெறுத்து போய் தற்கொலை பற்றியும் சிந்தித்தேன் " என்று பிரபாகரன் நினைவு கூர்ந்தார் .

எனினும் , அவர் வாழ்க்கையில் ஒரு வியத்தகு திருப்புமுனை திடீரென எதேச்சையாக வகுப்பில் பேசிக் கொண்டிருக்கும் போது வந்தது .

"இனி வரும் அறிவியல் திருவிழாவை ஒட்டி எங்கள் துறை தலைவர் மாணவர்களிடம் திட்ட யோசனைகள் எதிர்பார்ப்பதாக கூறி இருந்தார். நான் ஒரு தோழியுடன் அந்த நேரத்தில் வேறு பேசிக் கொண்டிருந்தேன் .

" திடீரென்று பேராசிரியர் என்னை பார்த்து சத்தம் போட்டு  எல்லோரும் பரிந்துரைகளைக் கொடுக்கும் போது நான் என்ன செய்து கொண்டிருகிறேன் என்று கேட்டார் .

"அப்பொழுது நான் அவள் கையில்  உட்கார்ந்து இருந்த கொசுவைப் பார்த்தவுடன் மூலிகை கொசு தடுப்பான் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறினேன்

"எனது பேராசிரியர் , ஈ.வெ.ரா அவர்கள் அதை பெரிதாக எடுத்து கொண்டு அந்த திட்டத்தில் வேலை செய்ய வைத்தார். நாங்கள் யூக்கலிப்டஸ் இலைகள் மற்றும் இதர மூலிகைகளில் இருந்து எடுத்த சாற்றில் ஒரு மூல உருவாக்கம் செய்தோம். "

"கோயம்புத்தூர் அறிவியல் விழாவில் பார்வையாளர்களுக்கு ஒரு பாக்கெட் 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அந்த நேரத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகமாக இருந்ததால் பொது மக்கள் ஆர்வமாக வாங்கினார்கள்.

பிரபாகரன் இந்த பொருளின் தேவையை உணர்ந்து , அதை மேலும் உற்பத்தி செய்ய முனைந்தார். பெரியார் பல்கலைகழகம் ஆய்வக வசதிகள் மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டுதலை ஏற்படுத்தி கொடுத்தது.

விரைவில் அவரால் ஒரு வணிக ரீதியாக சாத்தியமான தயாரிப்பு பொருளை உருவாக்க முடிந்தது .

இந்தி செய்தி
"Hermo என்பது ஒரு புதிய தயாரிப்பு ஆகும். இது மூலிகைகளை அடிப்படையாகக் கொண்டது, அது வேலை செய்ய மின் சக்தி தேவைப்படுவதில்லை , மற்றும் புகையும் வெளிவிடுவதில்லை . சரியான நேரத்தில் வெளி வந்துள்ளதால் சந்தையில் நன்றாக செயல்படும்" என்று PMU தலைமை நிர்வாக அதிகாரி A.P.அருணா கூறுகிறார் .

PMU துணை வேந்தர் , N ராமச்சந்திரன் அவர்கள் பல்கலைக்கழக மாணவர்களை  PURA  திட்டத்தின் அடிப்படையில்  தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கு நாங்கள் ஊக்குவிக்கிறோம் என்கிறார் .

"நாங்கள் எங்கள் மாணவர்களை உள்ளூர் வளங்களை பயன்படுத்தி சூழ்நிலையை பாதிக்காத பொருள்களை தயாரிக்க ஊக்குவிக்கிறோம். மேலும் கிராமப்புற பகுதிகளில் தங்கள் நிறுவனங்களை அமைக்கவும் ஊக்குவிக்கிறோம் . இது தொழில் முனைவோர் மற்றும் கிராம மக்கள்  இருவருக்கும் பயனளிக்கும் வகையில் அமையும்" என்று அவர் கூறுகிறார் .

இதற்கிடையில் , Hermo தேவை மெதுவாக அதிகரித்துக்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 1000-1500 பாட்டில்கள் விற்பனையாகி வருகிறது.

பிரபாகரன் ஒரு நிறுவனம் தயாரிப்பு மார்க்கெட்டிங் உரிமைகளை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. மேலும் ஒவ்வொரு மாதமும் அவரிடம் நேரடியாக 20000 பாட்டில்கள் வாங்குவதற்கும் ஆர்வம் காட்டியது என்கிறார் .

தனது நிறுவனம் ஏற்கனவே 4 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி உள்ளது. அவர் மேலும் 2020ல் குறைந்தது 4 நாடுகளில் தம்மால் 50,000 வேலைகள் உருவாக்க முடியும் என்று நம்புகிறார்.

அவர் மென்மேலும் வளர 'முதலீடு' தளம் தமிழன் என்ற முறையில் வாழ்த்துகிறது!

English Summary:
The young Tamil guy shines with his biotechnology innovations on facial, mosquito killers.

தொடர்புடைய பதிவுகள்:
இவர் தான் பணக் கடவுள் - வாரன் பஃபட்
இவர் தான் இந்தியாவின் வாரன் பஃப்பேட் 
அமெரிக்க டாலர் எப்படி உலக பொது நாணயமானது?


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

6 கருத்துகள்:

  1. உங்களுக்காக, தமிழ் மனம் வோட்டு + 1

    பதிலளிநீக்கு
  2. காப்புரிமைக்கு பரிந்துரை செய்யலாம்... இல்லையேல் இதையும் ஏதாதவது அமெரிக்க நிறுவனம் ஆட்டைய போட்டுடும்....

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் சொல்வதும் சரியே! தங்கள் கருத்துகளுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. தமிழர்க்கெல்லாம் பெருமை சேர்த்த அவரை பாராட்டுவோம்.

    பதிலளிநீக்கு