புதன், 2 அக்டோபர், 2013

இவர் தான் பணக் கடவுள் - வாரன் பஃபட்

பங்குச் சந்தை என்றாலே சூதாட்டம் என்று பலர் ஒதுங்கிய காலத்தில்., இல்லை அது ஒரு அறிவியல் பூர்வமான முதலீடு என்று சொல்லி, அதை நிருபித்து பணமும் சம்பாதித்து காட்டியவர் வாரன் பஃபட்.

இவர் தான் இருபதாம் நூற்றாண்டின் பணக் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். 100 டாலரில் முதலீடை ஆரம்பித்து இன்று பல பில்லியன் டாலர்களுக்கு சொந்தக்காரராக உள்ளார்.



நாம் எமது ஒரு பதிவில் பங்குகளின் விலையை கண்டுபிடிப்பது எப்படி? என்று ஒரு எழுதி இருந்தோம். மதிப்பு முதலீடு(Value Investing) என்ற அந்த சூத்திரத்திற்கு சொந்தக்காரர் தான் பஃபட் அவர்கள்.

இங்கு பார்க்க,
பங்குகளின் சரியான விலையை கண்டுபிடிப்பது எப்படி?

பங்குச்சந்தையின் ரகசியங்களை அவ்வளவு எளிதாக பாமரருக்கும் புரியும் வகையில் விளக்கியவர்.

அவரது சுயவரலாறு பலருக்கு பாடமாக இருக்கலாம் என்பதால் இங்கு பகிர்கிறோம்.

பஃபட் அவர்கள் 1930ல் அமெரிக்காவின் ஒமாஹா என்ற இடத்தில பிறந்தார். அவரது தந்தை பங்கு முதலீட்டுடன்  அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். சிறு வயதிலிலே பஃபட் பணம் சம்பாதிக்கவும், அதனை சேமிக்கவும் அதீத ஈடுபாடு காட்டினார். இளவயதில் வீடு வீடாக சென்று பத்திரிக்கைகள், கோகோ-கோலா போன்ற பொருட்களை விற்று வந்தார்.

அத்துடன் தனது தாத்தா நடத்தி வந்த கடையில் வேலை பார்த்து சம்பாதித்தும் வந்தார். தன்னுடைய 14 வயதில் முதல் வருமான வரியைக் கட்டினார். எனக்கெல்லாம் அந்த வயதில் வருமான வரி என்றால் என்ன என்று கூட தெரியாது.
தன்னுடைய பதினோரு வயதில் "Cite Service" என்ற நிறுவனத்தின் பங்குகளை 38$க்கு வாங்கினார். அது 27$ க்கு சென்று மீண்டும் 40$ வந்த போது விற்று விட்டார். ஆனால் அதே பங்கு 200$ க்கு செல்ல இவருக்கு பெரிய ஏமாற்றம். அப்பொழுது தான் பங்கு முதலீட்டின் அடிப்படையானது 'பொறுமை' என்பதை உணர்ந்து கொண்டார்.

1947ல் தன்னுடைய பள்ளி வாழ்க்கையை முடித்த பிறகு விருப்பமில்லாமல் அவரது தந்தை வற்புறுத்தலால் கல்லூரி சென்றார். அந்த சமயத்தில் பங்கு வர்த்தகம், பகுதி நேர வேலை என்று 5000$ சம்பாதித்து இருந்தார். அதனால் அவரது மனம் மேலும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதிலே ஆர்வமாக இருந்தது.

அங்கு இளநிலை படிப்பை முடித்த பிறகு ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் மேலாண்மை படிப்பிற்காக விண்ணப்பித்தார். ஆனால் இவரது குறைவான வயதைக் காட்டி இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இந்த சமயத்தில் பென் கிரகாம் என்ற பங்கு முதலீட்டாரை சந்திக்கிறார். இவர் தான் பஃபட்டின் குருவாக கருதப்படுகிறார். அவர் எழுதிய 'Security Analysis' மற்றும் 'The Intelligent Investor' புத்தகங்களை படித்து பங்கு அடிப்படைகளை நன்கு கற்று கொள்கிறார். இந்த புத்தகங்கள் தாம் "பங்கு மதிப்பீடு" அடிப்படையில் வந்த முதல் புத்தகங்கள்.

பென்னுடன் இணைத்து சில காலம் பணி புரிகிறார். பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக "Berkshire Hathaway" என்ற பெயரில் நிறுவனம் ஆரம்பித்து சுயமாக வர்த்தகம் செய்கிறார்.

அடுத்த ஐந்து வருடங்களில் மட்டும் அவரது பங்கு மதிப்பு 251% அதிகரித்தது. ஆனால் அதே காலக்கட்டத்தில் அமெரிக்க பங்குச்சந்தை 74% மட்டுமே அதிகரித்தது. இதிலிருந்து ஒன்றைப் புரிந்து கொள்ளலாம். பங்குகள் முழுமையாக பங்குச்சந்தையை சார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை. நல்ல நிறுவனங்களின் பங்குகள் நீண்ட காலப் பார்வையில் ஏற்றம் கண்டே வருகின்றன.

பதிவு மிகப் பெரிதாகி விட்டது. அதனால் இரண்டாக பிரித்துள்ளோம்.

தொடர்ச்சியைப் பார்க்க இங்கு அழுத்தவும்.
இவர் தான் பணக் கடவுள் - வாரன் பஃபட் (2)

English Summary:
The success story of warren buffet who made huge success on stock investment using value investing techniques.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக