நமது போர்ட்போலியோ நன்றாக சென்று கொண்டு இருப்பதில் மகிழ்ச்சி. குறைந்தது 8% லாபம் கொடுத்து இருக்கும் என்று நம்புகிறேன். விரைவில் அதனை பகிர்கிறோம்.
எமது முந்தைய ஒரு பதிவில் HCL Technologies பங்கினைப் பரிந்துரைத்து இருந்தோம். நேரம் இல்லாததால் விரிவாக எழுத முடியவில்லை. அதற்கான விரிவான பதிவே இது.
முந்தைய பதிவு இங்கே:
HCL Technologies பங்கினை பரிந்துரைக்கிறோம்
ஏன் பரிந்துரைக்கிறோம்?
- ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட பெயர் வாங்கிய பிராண்ட். பெரிய அளவிலான 540 நுகர்வோர்களுக்கு(Client) சேவை செய்து வருகிறார்கள். இந்திய மென்பொருள் சேவை நிறுவனங்களில் உற்பத்தி சார்ந்த சேவைகளிலும் ஈடுபடும் நிறுவனம்.
- இவர்களது வருமானம் இன்போசிஸ், விப்ரோ நிறுவனங்களை விட பூகோள அடிப்படையில் ஓரளவு நன்றாக பரந்துபட்டு உள்ளது. அதனால் அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சியோ, எழுச்சியோ மிகப் பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்தாது.
- கடந்த மூன்று காலாண்டுகளில் ஏராளமான நுகர்வோர்கள் பெற்றுள்ளனர். அதிலும் கடந்த காலாண்டில் மட்டும் 9 நுகர்வோர்கள் மூலம் பல பில்லியன் டாலர் ப்ராஜெக்ட் பெற்றுள்ளனர். இவை பல ஆண்டுகள் தொடர்ச்சியாக செல்லக் கூடியவை. இனி வரும் நிதியான்டுகளில் இந்த ப்ராஜெக்ட்களின் வருமானம் நன்கு எதிரொலிக்கும்.
- கடந்த நிதியாண்டில் லாபம் 41% வளர்ச்சியும், இந்த காலாண்டில் 31% வளர்ச்சியும் கொடுத்து உள்ளது. கடந்த ஆறு கலாண்டுகலாக 30% அளவுக்கு லாப வளர்ச்சி கொடுத்துள்ளார்கள்.
- ஏற்றுமதியை சார்ந்த நிறுவனமாக இருப்பதால் ரூபாய் மதிப்பு சரிவு நல்ல பலனளிக்கும்.
ரிஸ்க்:
- ஏற்கனவே உள்ள சில நுகர்வோர்கள் வளர்ச்சி HCL நிறுவன வளர்ச்கியை விட குறைவாக உள்ளது. இருந்தாலும் புதிதாக இணைத்த நுகர்வோர்கள் மூலம் இது சரிகட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட கால முதலீட்டில் இந்த பங்கில் முதலீடு செய்யலாம். தற்போது பங்கு 1080 ரூபாய் அளவில் உள்ளது. TCS நிறுவனமும் இதே அளவில் நல்ல திறனாக செயல்படுவதால் அதனையும் பரிசீலிக்கலாம்.
அடுத்த பங்காக பெட்ரோலிய துறையில் AEGIS Logistics என்ற பங்கினைப் பரிந்துரை செய்து இருந்தோம். அதற்கான விரிவான பதிவை விரைவில் எழுதுகிறோம்.
நமது போர்ட் போலியோவால் பயன் பெற்ற நண்பர்கள் பின்னூட்டங்களில் தெரிவித்தால் எமக்கு உற்சாகமாக இருக்கும்.
English Summary:
HCL technologies is recommended for Investment in IT sector.
தொடர்பான பதிவுகள்:
7% லாபத்தில் நமது போர்ட் போலியோ
பங்கு ஒரு பார்வை: Finolex Cables
இந்திய ஊட்டச்சத்து மருந்து சந்தையை பிடிக்கும் Abbott
அண்மைய 'மதிப்பு' பதிவு:
10000 ரூபாய்க்குள் ஆன்டிராய்டு மொபைல்கள் - ஒரு ஒப்பீடு

எல்லாருக்கும் தெரிந்தது போல் இது ஒரு மென்பொருள் நிறுவனம். தென் தமிழகத்தை சார்ந்த சிவ்நாடார் என்ற தமிழரால் நடத்தப்படுகிறது. இந்தியாவின் ஐந்தாவது பெரிய மென்பொருள் நிறுவனம்.
2008ல் பிரிட்டிஷ் நிறுவனமான Axon நிறுவனத்தை வாங்கிக் கொண்டது. அதில் இருந்து 10% வருமானம் வருகிறது.
நிறுவனத்தின் வருமானம் பெரும்பாலான வருமானம் Application services (45%), Infrastructure services(33%) மூலமும் வருகிறது. துறை வாரியாக நிதி மற்றும் உற்பத்தி துறையில் வருகிறது.

பூகோள அடிப்படையில் அமெரிக்கா(56%), ஐரோப்பா(27%) ,ஆசியா(17%) என்று பரவலாக வருமானம் கிடைக்கிறது.
ஏன் பரிந்துரைக்கிறோம்?
- ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட பெயர் வாங்கிய பிராண்ட். பெரிய அளவிலான 540 நுகர்வோர்களுக்கு(Client) சேவை செய்து வருகிறார்கள். இந்திய மென்பொருள் சேவை நிறுவனங்களில் உற்பத்தி சார்ந்த சேவைகளிலும் ஈடுபடும் நிறுவனம்.
- இவர்களது வருமானம் இன்போசிஸ், விப்ரோ நிறுவனங்களை விட பூகோள அடிப்படையில் ஓரளவு நன்றாக பரந்துபட்டு உள்ளது. அதனால் அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சியோ, எழுச்சியோ மிகப் பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்தாது.
- கடந்த மூன்று காலாண்டுகளில் ஏராளமான நுகர்வோர்கள் பெற்றுள்ளனர். அதிலும் கடந்த காலாண்டில் மட்டும் 9 நுகர்வோர்கள் மூலம் பல பில்லியன் டாலர் ப்ராஜெக்ட் பெற்றுள்ளனர். இவை பல ஆண்டுகள் தொடர்ச்சியாக செல்லக் கூடியவை. இனி வரும் நிதியான்டுகளில் இந்த ப்ராஜெக்ட்களின் வருமானம் நன்கு எதிரொலிக்கும்.
- கடந்த நிதியாண்டில் லாபம் 41% வளர்ச்சியும், இந்த காலாண்டில் 31% வளர்ச்சியும் கொடுத்து உள்ளது. கடந்த ஆறு கலாண்டுகலாக 30% அளவுக்கு லாப வளர்ச்சி கொடுத்துள்ளார்கள்.
- ஏற்றுமதியை சார்ந்த நிறுவனமாக இருப்பதால் ரூபாய் மதிப்பு சரிவு நல்ல பலனளிக்கும்.
ரிஸ்க்:
- ஏற்கனவே உள்ள சில நுகர்வோர்கள் வளர்ச்சி HCL நிறுவன வளர்ச்கியை விட குறைவாக உள்ளது. இருந்தாலும் புதிதாக இணைத்த நுகர்வோர்கள் மூலம் இது சரிகட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட கால முதலீட்டில் இந்த பங்கில் முதலீடு செய்யலாம். தற்போது பங்கு 1080 ரூபாய் அளவில் உள்ளது. TCS நிறுவனமும் இதே அளவில் நல்ல திறனாக செயல்படுவதால் அதனையும் பரிசீலிக்கலாம்.
அடுத்த பங்காக பெட்ரோலிய துறையில் AEGIS Logistics என்ற பங்கினைப் பரிந்துரை செய்து இருந்தோம். அதற்கான விரிவான பதிவை விரைவில் எழுதுகிறோம்.
நமது போர்ட் போலியோவால் பயன் பெற்ற நண்பர்கள் பின்னூட்டங்களில் தெரிவித்தால் எமக்கு உற்சாகமாக இருக்கும்.
English Summary:
HCL technologies is recommended for Investment in IT sector.
தொடர்பான பதிவுகள்:
7% லாபத்தில் நமது போர்ட் போலியோ
பங்கு ஒரு பார்வை: Finolex Cables
இந்திய ஊட்டச்சத்து மருந்து சந்தையை பிடிக்கும் Abbott
அண்மைய 'மதிப்பு' பதிவு:
10000 ரூபாய்க்குள் ஆன்டிராய்டு மொபைல்கள் - ஒரு ஒப்பீடு
நல்ல பங்கு இது. நன்றி பாஸ்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
பதிலளிநீக்குSir,
பதிலளிநீக்குPlease include LIC Housing Finance also.This is the one stock Which is giving Continous growth and also looks better valuation.In the coming days this will get a Bankking license to start up with.In my opinion this is the one stock retail investors can look for 3 to 5 years for good Returns.
Bharathidasan.
please tell lnt finace also
பதிலளிநீக்கு