புதன், 16 அக்டோபர், 2013

HDFC வங்கியின் லாபம் 27% உயர்ந்தது

எமது போர்ட் போலியோவில் HDFC Bank பங்கினைப் பரிந்துரை செய்து இருந்தோம்.

அதற்கான தொடர்பு இங்கே.
பங்கு ஒரு பார்வை: HDFC வங்கி

HDFC வங்கியின் இரண்டாவது காலாண்டு ( 2013, 2Q ) நிதி முடிவுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

அதிலிருந்து சில முக்கிய குறிப்புகள்:

  • வங்கியின் இரண்டாவது காலாண்டு ( 2013, 2Q ) நிகர லாபம் கடந்த வருடத்தை விட 27 சதவீதம் உயர்ந்து உள்ளது.
  • வங்கி வாராக் கடன் இந்த காலாண்டில் அதிகரித்துள்ளது  கடந்த காலாண்டை ஒப்பிடுகையில் 15% அதிகரித்துள்ளது. (1.04% -> 1.09%)
  • கடந்த வருடத்தை விட வட்டியில் கிடைக்கும் வருமானம் 15% அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த காலாண்டை விட 4% குறைந்துள்ளது.
  • இதர வருமானங்களான  நாணய பரிமாற்றம், கட்டணங்கள், டிமாட் மூலம் கிடைக்கும் வருமானங்கள் 25% அதிகரித்துள்ளது..
  • HDFC Securities பங்குகளை 25% வாங்கியுள்ளது.




மொத்தத்தில் நிகர லாபம் 27% அதிகரித்துள்ளது.

சந்தை எதிர்பார்த்ததை விட நிகர லாபம் அதிகரித்துள்ளது. ஆனால் வாராக் கடன் மற்றும் வட்டி வருமானம் சிறிது ஏமாற்றம் அளித்துள்ளது. இருந்தாலும் தற்போதைய நிலையில் மற்ற வங்கிகளை விட நல்ல நிலையில் உள்ளது.

நாம் நமது போர்ட் போலியோவில் இந்த பங்கை தொடரலாம் என்றே நினைக்கிறேன்.

தொடர்புடைய பதிவுகள்:
7% லாபத்தில் நமது போர்ட் போலியோ

சில கடினத்தன்மைகள் காரணமாக இனி எமது பதிவுகள் நமது சுய பக்கங்களில் மட்டுமே வெளியிடப்படும்.

அதனால் எமது முகநூல்(Facebook) பக்கங்களில் இணைந்திட வேண்டுகிறேன். 'Like' செய்தால் மட்டும் போதும். எமது பதிவுகள் எழுதிய உடன் உங்கள் முகநூல் பக்கங்களில் வெளியாகும்.

முகநூல் (Facebook)

முகநூல் குழுமம் (Facebook Group):

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்: