திங்கள், 14 அக்டோபர், 2013

7% லாபத்தில் நமது போர்ட் போலியோ

நமது போர்ட் போலியோவின் தற்போதைய நிலை விவரம் கீழே உள்ளது.

தற்பொழுது போர்ட் போலியோ 7% லாபத்தில் இயங்கி வருகிறது.

அதாவது கீழ்க்கண்டவாறு ஒதுக்கீடு செய்து 1,35,500 ரூபாய் முதலீடு செய்து இருந்தால் 9500 ரூபாய் லாபம் அடைந்து இன்றைக்கு 1,45,000 ரூபாயாக இருந்து இருக்கும்.


7% லாபத்தில் போர்ட் போலியோ


நமது பங்குகளை பற்றிய சில குறிப்புகள்:

ASHAPURA, ASTRA, FINOLEX, Abbott பங்குகள்:

மூன்றாம் காலாண்டு நிதி நிலை அறிக்கைக்காக காத்து இருக்கிறோம்.

Mahindra பங்கு:

இன்னும் எதிர் பார்த்த அளவு மேலே செல்ல வில்லை. வாகனத் துறையின் சில நல்ல செய்திகள் காரணமாக அடுத்த காலாண்டில் உயரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

BRITAANIA:

ஒரு மாதத்தில் 18% லாபம் கொடுத்துள்ளது. நமது இலக்கு இதுவல்ல என்பதால் இன்னும் பொறுமையாக இருக்கலாம்.

HDFC BANK:

இரண்டு  மாதத்தில் 10% லாபம் கொடுத்துள்ளது. வங்கி பங்குகள் இன்னும் சூடு பிடிக்கவில்லை என்பதால் நிதி நிலை முடிவுகளுக்கு பின் நல்ல உயர வாய்ப்புள்ளது.


இன்னும் மென்பொருள், பெட்ரோல் துறைகளின் பங்கு பரிந்துரை செய்ய வேண்டி உள்ளது. ஏற்கனவே HCL Technologies(Rs.1100), AEGIS Logistics(Rs.130) போன்ற பங்குகளை பரிந்துரைக்க நினைத்து இருந்தோம்.

எமது நேரமின்மை காரணமாக அந்த பதிவுகளை எழுத முடிய வில்லை. ஆனால் தற்போது பங்குகள் 10% வரை உயர்ந்து விட்டன. அதனால் நான் மட்டுமே இந்த லாபத்தை தற்போது அனுபவிக்க வேண்டியுள்ளது:).

இன்னும் நமக்கு நேரம் உள்ளது. அதனால் சந்தை சரிவுகளின் போது கொஞ்சம் கொஞ்சமாக இந்த பங்குகளை வாங்கிப் போடுங்கள்.

விரிவான பதிவுகளை விரைவில் எழுதுகிறோம்.

எமது பதிவுகளை எளிதில் பெற விரும்புவோர் வலது பக்கமுள்ள "எம்மைத் தொடர" பகுதியில் ஏதேனும் ஒன்றை தொடரவும். தங்கள் மின்னஞ்சலை பகிர்ந்தால் அதிலும் நமது பதிவுகள் விவரம் அனுப்பப்படும்.

இனி விளம்பரப்படுத்துவதை விட கட்டுரை எழுதுவதில் மட்டும் கவனம் செலுத்தலாம் என்று நினைக்கிறேன்.

பரிந்துரைத்த பங்குககளைப் பற்றிய விரிவான பதிவுகள்:

40 காலாண்டுகளாக 30% லாபம் ஈட்டும் HDFC வங்கி
டிராக்டர் விற்பனையால் மேலே வந்த மகிந்திரா




« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

6 கருத்துகள்: