திங்கள், 21 மார்ச், 2016

மருந்துகள் தடை செய்யப்பட்டதால் அலறும் பர்மா நிறுவனங்கள்

கடந்த வாரம் இந்திய அரசு FDC என்ற பிரிவின் கீழ் வரும் பல மருந்துகளை தடை செய்து விட்டது. இது பங்குச்சந்தையில் மருந்து பங்குகளில் கடுமையான சேதாரத்தை ஏற்படுத்தி விட்டது.


FDC என்றால் fixed dose combination. அதாவது பல மருந்து கலவைகளை ஒன்று சேர்த்து ஒரே மருந்தாக வெளியிடுவது.



தலைவலிக்கும் காய்ச்சலுக்கும் ஒன்று சேர்ந்து மருந்துகள் வந்திருப்பதை பார்த்திருக்கிறோம். அது போல் தான்...

இவை ஒரே மருந்தில் பலவற்றை குணப்படுத்த உதவும் என்றாலும், அதனின் இருக்கும் வீரியம் என்பது உடல் நலத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்க கூடியது.

இதனால் தான் வளர்ந்த நாடுகள் தங்கள் நாட்டில் இந்த மருந்தை ஏற்கனவே தடை செய்து விட்டன.

இதன் தொடர்ச்சியாக தான் நமது அரசு 300க்கும் மேற்பட்ட மருந்துகளை தடை செய்துள்ளது.

ஆனால் இந்த மருந்துகள் பத்தாயிரம் கோடிக்கும் மேற்பட்ட சந்தை மதிப்பைக் கொண்டுள்ளது.

இதனால் உள்நாட்டு மருந்து வியாபரத்தில் ஈடுபடும் மருந்து நிறுவனங்கள் கடுமையான பாதிப்பை அடைய வாய்ப்பு உள்ளது.

இதில் Abbott India, Sun, Pfizer என்று பல பெரிய மருந்து நிறுவனங்கள் தான் அதிக பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த பங்குகள் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 20% வரை வீழ்ச்சி அடைந்துள்ளன.

இதனை எதிர்த்து இந்த நிறுவனங்கள் கோர்ட்டிற்கு சென்றுள்ளன.

குறைந்தபட்சம் ஸ்டே என்று கொடுக்கப்பட்டாலும் அது தற்காலிகமாக இருப்பதற்கே வாய்ப்பு அதிகம் உள்ளது.

ஆனால் என்ன பிரச்சினை என்றால், இந்த மருந்துகள் தடை செய்யப்படும் சூழ்நிலையில் அதனை சமநிலைப்படுத்தும் விதத்தில் மாற்று மருந்துகள் சந்தையில் இன்னும் வரவில்லை.

இரண்டாவது, மருத்துவர்கள் இது வரை இந்த கலப்பு மருந்துகளையே எழுதிக் கொடுத்து வந்துள்ளதால் அதனை சாப்பிட்ட நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இருக்கும். அதே அளவு வீரியமுள்ள மருந்துகளை தான் நமது உடம்பும் எதிர்பார்க்கும்.

இந்த இரண்டும் தற்காலிக பிரச்சனைகள் தான்.  இவைகள் தீர்க்கபப்டும் சூழ்நிலையில் நீண்ட கால நோக்கில் இந்த முடிவு மிகவும் நல்ல முடிவு.

இப்படி ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை மற்ற நிறுவனங்களும் பயன்படுத்த துடிக்கின்றன.

ஆமாம்.  Dabur போன்ற சித்த மருத்துவ துறையிலும் இருக்கும் நிறுவனங்கள் அதிக அளவு சித்த மருந்துகளை வெளியிட முடிவு செய்துள்ளன.  

பங்குச்சந்தையில் மட்டும் தான் பலருக்கு பாதகமாக இருக்கும் எந்த ஒரு முடிவும் மற்ற சிலருக்காவது சாதகமாக அமைகிறது.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக