பொதுவாக பங்குகளில் முதலீடு செய்பவர்கள் டிவிடெண்ட் தொடர்பாக பெரிது கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை.
இந்திய நிறுவனங்கள் மேலை நிறுவனங்களை போல் பெரிதளவு டிவிடெண்ட் கொடுக்காததும் இதற்கு ஒரு காரணம்.
ஆனாலும் சில வளர்ச்சியடைந்த நிறுவனங்கள் வருடத்திற்கு பங்கு மதிப்பில் இரண்டு முதல் ஐந்து சதவீதம் வரை டிவிடெண்ட் கொடுக்கத் தான் செய்கின்றன.
அந்த டிவிடெண்ட்கள் சில மூன்றாவது தரப்பட்ட நிறுவனம் மூலம் தான் விநியோகிக்கப்படுகின்றன.
இந்த மூன்றாவது நிறுவனங்களில் ஒன்றான Sharepro தற்போது டிவிடெண்ட்டை கொடுத்ததில் முறைகேடு செய்துள்ளது.
இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் பங்குதாரர்களில் வங்கி கணக்கிற்கு டிவிடெண்ட்டை கொடுக்காமல் தங்கள் வங்கி கணக்கிற்கு திருப்பி அனுப்பி உள்ளனர்.
Britannia, Asian Paints, Aptech என்று பிரபல நிறுவனங்கள் தான் இந்த நிறுவனத்தின் மோசடியில் சிக்கியுள்ளன.
பிரிட்டானியா நிறுவனத்தில் மட்டும் 20 கோடி ரூபாய் அளவு டிவிடெண்ட் மோசடி நடைபெற்றதாக தெரிய வந்துள்ளது.
இதனால் முதலீடு செய்த பிறகு Dividend Ex-Date, Record Date போன்றவற்றை கவனமாக பார்த்து கண்காணிப்பது மிக அவசியம்.
இதற்கு முன்பு போனஸ் பங்கு, டிவிடெண்ட் போன்றவை எமது கணக்கில் வராமல் போன அனுபவமும் உண்டு. அதன் பிறகு விசாரித்தால் கொடுப்பார்கள்.
இப்பொழுது தான் தவறு எங்கு நடந்திருக்கும் என்று அனுமானிக்க முடிகிறது.
செபி இத்தகைய நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் தான் முதலீட்டாளர்களுக்கு இந்திய பங்குச்சந்தை மீது நம்பிக்கை வரும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக