புதன், 30 மார்ச், 2016

சீன டைல்ஸ்க்கு வரி, உற்சாகத்தில் இந்திய நிறுவனங்கள்

சீனா பொருளாதார தேக்கத்தால் ஸ்டீல், தாமிரம் என்று உலோகங்களும் மற்ற  பல பொருட்களும் மலிவு விலையில் இந்தியாவில் வந்து குவிகின்றன.


அதில் டைல்ஸ், மார்பிள்ஸ் போன்றவையும் உள்ளடக்கம்.



ஒரு பக்கம் வாங்கும் நமக்கு நல்லது போன்று தோன்றினாலும், உள்நாட்டு இந்திய நிறுவனங்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும்.

பல நிறுவனங்கள் இழுத்து மூடும் நிலைக்கு கூட தள்ளப்பட்டு உள்ளன.

அதனால் அரசு Anti-Dumbping Duty என்ற பெயரில் இறக்குமதி செய்யப்படும் சில வகைகளுக்கு அதிக வரி விதித்து உள்நாட்டு நிறுவனங்களை காக்க முற்படுகிறது.

ஸ்டீல், காப்பர், ரப்பர் போன்றவைகளுக்கு இந்த வரி ஏற்கனவே விதிக்கப்பட்டது.

தற்போது இந்த வரி டைல்ஸ்க்கும் விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,  ஒரு சதுர மீட்டர் டைல்ஸ்க்கு 1.37 அமெரிக்க டாலர் வரியாக விதிக்கப்பட உள்ளது.

ஆனால் நிறுவனங்கள் ஒரு சதுர மீட்டருக்கு 3 டாலர் வரி விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தன. என்றாலும் தற்போதைய முடிவு மோசமில்லை.

இதனால் இது வரை மலிவாக இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்ட சீன டைல்ஸ் இந்திய நிறுவனங்களை விட இருபது சதவீதம் அதிக விலைக்கு விற்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

மொத்தத்தில் இந்திய டைல்ஸ் நிறுவனங்களுக்கு மிகவும் சாதகமான முடிவு இது.

இதனால் இந்திய சந்தையில் டைல்ஸ் நிறுவன பங்குகளில் ஒரு வித உற்சாக உயர்வை பார்க்க முடிந்தது.

டைல்ஸ் பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய நல்ல தருணம்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக