இந்த வருட பட்ஜெட்டில் அருண் ஜெட்லி சில வித்தியாச வரி விதிப்புகளைக் கொண்டு வந்தார்.
அதில் பி.எப் தொடர்பான வரி விதிப்பு அவசர கோலத்தில் வடிவமைக்கப்பட்டு கடுமையான எதிர்ப்பு காரணமாக பின் வாங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பங்குச்சந்தை நிறுவனங்களால் வழங்கப்படும் டிவிடென்ட்டுக்கும் வரி விதிக்கப்பட்டது.
டிவிடென்ட்டை பொறுத்த வரை அதனை வழங்கும் நிறுவனங்கள் ஏற்கனவே Dividend Distribution Tax என்ற பெயரில் வரியை செலுத்தி தான் நமக்கு வழங்குகின்றன.
இந்த Dividend Distribution Tax என்பது இந்த நிதி ஆண்டு வரை 12% என்று தான் இருந்தது. அடுத்த நிதி ஆண்டில் 15% என்று உயர்த்தப்பட உள்ளது.
இப்படி நிறுவனங்களும் வரி செலுத்த மறுபக்கம் டிவிடென்ட்டை வாங்குபவர்களுக்கும் அரசு வரி விதித்துள்ளது.
அதனால் கிட்டத்தட்ட இரட்டை வரி விதிப்பு என்றே கருதிக் கொள்ளலாம்.
ஒருவர் பத்து லட்சத்திற்கு மேல் டிவிடென்ட் வருமானம் பெற்றால் அதற்கு அவர் வரி செலுத்த வேண்டும் என்று இந்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
இந்த இரண்டு புதிய விதி முறைகள் காரணமாக ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் அதிக அளவில் டிவிடென்ட்டை மார்ச் மாதத்திற்குள் கொடுக்க முனைந்துள்ளன.
அதனால் தான் நமது போர்ட்போலியோவில் இருக்கும் பல நிறுவனங்கள் இந்த மாதத்தில் அதிக டிவிடென்ட்டை காணலாம்.
அமெரிக்கா போன்ற நாடுகளில் Dividend Yield என்பது பங்கு விலையில் ஐந்து முதல் பத்து சதவீதம் வரை இருப்பதைக் காணலாம்.
ஆனால் இந்தியாவில் Dividend Yield ஒரு சதவீதத்திற்குள் மட்டும் கொடுத்து வருகிறார்கள்.
அதற்கும் உலை வைக்கும் விதமாக இந்த புதிய வரி விதிப்பு இருக்க போகிறது.
இப்ப தான் பங்குச்சந்தைக்குள் மக்கள் வர ஆரம்பித்து உள்ளார்கள். அதனை ஊக்கம் செய்யாமல் அரசு இப்படி வரி விதிப்புகளை செய்வது தேவையில்லாதது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக