வியாழன், 24 மார்ச், 2016

ரோட்டில் இருந்து கோர்ட்டிற்கு செல்லும் ஓலா, உபெர் குடுமிச் சண்டை

காலம் செல்வதைப் பார்த்தால் கார்பொரேட் நிறுவனங்களும் சூனியம் வைத்தல், திருடி பிழைத்தல் என்ற நிலைக்கு மாறி எப்படியாவது லாபம் சம்பாதித்தால் போதும் என்ற நிலைக்கு மாறி வருவதை பார்க்க முடிகிறது.


இ-காமர்ஸ் நிறுவனங்களின் தில்லாலங்கடி வேலைகள் தோடரும் நிலையில் தற்போது ஓலா கேப்பும்,  உபெர் கேப்பும் நடத்தும் சண்டையை பார்த்தால் தொழில் தர்மம் எங்கே என்ற கேள்வி வரத் தான் செய்கிறது.தற்போது ஓலா கேப் மீது புகாருடன் உபெர் கேப் கோர்ட்டிற்கு சென்றுள்ளது.

ஆனால் புகார் என்னவென்று பார்த்தால் சிறுபிள்ளைத் தனமான வேலையைத் தான் பார்க்க முடிகிறது.

ஓலா கேப்  திருட்டுத் தனமான உபெர் கேப் கணக்குகளை திறந்து,  முக்கியமான நேரங்களில் புக்கிங் செய்து  புக்கிங் செய்து கான்செல் பண்ணி விடுவார்களாம்.

இதனால் பாதி வழி சென்ற வாகன ஓட்டுனர்கள் கான்செல் செய்யப்பட்டு விடுவதால் கட்டணம் எதுவும் பெறாமல் திரும்ப வேண்டும்.

இந்த நிலையை பார்த்து இருபதாயிரம் ஓட்டுனர்கள் உபெர் கேப் வேண்டாம் என்று விலகி விட்டார்களாம்.

இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல.. நான்கு லட்சம் போலிக் கணக்குகள் திறந்து விளையாடி உள்ளார்கள்.

அப்படின்னா, இதற்கென்று முழு நேர வேலை ஆள்கள் போட்டு வேலை செய்து இருப்பார்கள் போல...

இப்படி மொத்தமாக தங்களுக்கு ஐம்பது கோடி ரூபாய் நஷ்டம் வந்துள்ளதாக உபெர் கூறி உள்ளது.

இந்தப் புகார் மட்டும் உண்மையாக இருக்குமெனின், கார்பொரேட் நிறுவனங்களின் தொழில் தர்மம் மீது நம்பிக்கையின்மை தான் ஏற்படும்.

எதற்கெடுத்தாலும் லாபத்தை மட்டும் என்ற நிலையை நோக்கி செல்லும் உலகம் எங்கு சென்று முடியுமோ என்ற ஐயம் வரத் தான் செய்கிறது!

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக