இந்தியாவில் முதல் முறையாக ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஒரு நிறுவனம் பங்குச்சந்தைக்குள் வருகிறது.
Infibeam என்ற அந்த நிறுவனம் வரும் மார்ச் 21 முதல் சந்தைக்குள் ஐபிஒவாக வெளிவருகிறது.
தற்போது பங்குச்சந்தையில் 450 கோடி ரூபாய் அளவு திரட்டும் நோக்கில் இந்த நிறுவனம் சந்தைக்கு வருகிறது.
இந்த நிதி தனது கார்பொரேட் அலுவலகத்தை கட்டமைக்கவும், விரிவாக்கத்திற்கும் பயன்படுத்தப் போவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
மற்ற இ-காமர்ஸ் நிறுவனங்களைக் காட்டிலும் Infibeam வர்த்தக முறையில் சிறிது வித்தியாசம் உள்ளது.
ப்ளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் B2C என்ற முறையில் நேரடியாக வாடிக்கையாளர்களிடம் விற்கும் ரீடைல் வர்த்தகத்தை பின்பற்றி வருகின்றன.
ஆனால் Infibeam ரீடைல் வர்த்தகத்தையும் பின்பற்றி வருகிறது. அதே நேரத்தில் B2B முறையில் விற்பனையாளர்களுக்கும் ஆன்லைன் ஸ்டோர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இங்கு 70% வர்த்தகம் ரீடைல் முறையிலும், மீதி 30% மொத்த முறையிலும் நடைபெற்று வருகிறது. ஆனால் பெரும்பாலான லாபம் என்பது B2B முறையில் தான் கிடைக்கிறது. ரீடைல் முறையில் லாப மார்ஜின் என்பது ஒரு சதவீதம் அளவே வருகிறது.
அடுத்து, கிட்டத்தட்ட ப்ளிப்கார்ட், ஸ்னேப்டீல் நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்ட போதே இந்த நிறுவனமும் உள்ளது. ஆனால் அந்த அளவிற்கு வேகமாக இந்த நிறுவனம் வளரவில்லை.
அந்த நிறுவனங்கள் அளவு Infibeam விளம்பரம் போன்றவற்றில் அதிகமாக செலவழிக்கவில்லை என்பதை இதற்கு முக்கிய காரணமாக சொல்லலாம். அதனால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் பெரிதளவு விரிவாகவில்லை.
தற்போது அவர்கள் ஒரு பங்கின் விலை என்பதை 360 முதல் 432 வரை நிர்ணயித்துள்ளார்கள்.
கடந்த நிதி ஆண்டு வரை நஷ்டத்தையே கொடுத்து வந்ததால் மதிப்பீடலை P/E முறையில் கணக்கிட முடியாது. விற்பனை அடிப்படையில் பார்த்தால் ஆறு மடங்கிற்கும் அதிகமாக வருகிறது. இது மிக அதிகமாக பங்கு விலையைக் காட்டுகிறது.
அதனால் தான் IPOவிற்கு பொறுப்பு ஏற்றிருந்த வங்கிகள் கூட பின் வாங்கி விட்டன.
இப்படி கூட்டப்பட்ட பங்கு விலையில் நாமும் வாங்குவதை தவிர்க்கலாம். அதே நேரத்தில் நிறுவனத்தின் வளர்ச்சியும் போட்டி அதிக அளவு உள்ளதால் இதே அளவு இருக்குமா என்பதில் சந்தேகம் இருக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக