StockAdvice லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
StockAdvice லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

CreditAccess Grameen IPOவை வாங்கலாமா?

கடந்த வாரம் நாம் பரிந்துரை செய்த HDFC AMC ஐபிஒ 67% அளவு லாபம் கொடுத்திருக்கிறது.


பலன் பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்!

பார்க்க: HDFC AMC IPOவை வாங்கலாமா?




அடுத்து நாளை ஆகஸ்ட் 8 முதல் CreditAccess Grameen நிறுவனத்தின் ஐபிஒ வெளிவரவிருக்கிறது.

இதனை வாங்கலாமா? வேண்டாமா? என்பதை பற்றி பார்ப்போம்.

எப்பொழுதுமே ஊருக்கு செல்லும் போது கிராம அளவில் அதிக அளவு கந்து வட்டி பிரச்சினை இருப்பதைக் காண்பதுண்டு.

வியாழன், 2 ஆகஸ்ட், 2018

ஐந்தாவது வருட முடிவில் REVMUTHAL.COM

நண்பர்களுக்கு,

வணக்கம்!

ஞாயிறு, 29 ஜூலை, 2018

மீண்டும் பலன் தரத் தயாராகும் சுற்றுலாத் துறை

தற்போது சென்செக்ஸ், நிப்டி புள்ளிகளை அடிப்படையாக வைத்து கட்டுரைகளை எழுதுவதை விட முதலீடு பார்வையில் கட்டுரைகள் எழுதுவது எமக்கும் உற்சாகமாக இருக்கிறது.

செவ்வாய், 24 ஜூலை, 2018

HDFC AMC IPOவை வாங்கலாமா?

நாளை ஜூலை 25 முதல் HDFC AMC நிறுவனத்தின் ஐபிஒ வெளிவரவிருக்கிறது.


அதனைப் பற்றி விரிவாக பார்ப்போம்.



HDFC AMC என்பது HDFC குழுமத்தின் ஒரு பிரிவு தான். HDFC Asset Management Company என்பதன் சுருக்கம் தான் இந்த நிறுவனம்.

அதாவது மக்களின் சேமிப்பிற்கு தேவையான ம்யூச்சல் பண்ட், இன்சுரன்ஸ் போன்றவற்றில் நிதி மேலாண்மை செய்து வருகிறது.

இந்த நிறுவனத்தில் Standard Life நிறுவனமும் குறிப்பிட்டத்தக்க பங்குகளைக் கொண்டுள்ளது.

புதன், 20 ஜூன், 2018

RITES IPOவை வாங்கலாமா?

இன்று முதல் RITES நிறுவனத்தின் IPO பங்குசந்தையில் விண்ணப்ப வடிவில் வருகிறது.


இதனை வாங்கலாமா? தவிர்க்கலாமா? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.



RITES நிறுவனம் முழுக்க மத்திய அரசு சார்ந்த நிறுவனம். RITES என்பதன் விரிவாக்கம் Rail India Technical & Economic Services Ltd. என்பதாகும்.

இந்திய அரசின் ரயில்வே துறை தான் இந்த நிறுவனத்தின் ப்ரோமோடர் என்றும் சொல்லலாம்.

ரயில்வேயின் இரட்டை ரயில்பாதை போடுதல், ரயில் பாதை பராமரிப்பு, புதிய ரயில் பாதைகளை உருவாக்குதல், ரயில் மின் கட்டமைப்பு உருவாக்குதல்  போன்றன இந்த நிறுவனத்தின் முக்கிய பணிகள்.

செவ்வாய், 20 மார்ச், 2018

Sandhar Techno IPOவை வாங்கலாமா?

வேகமாக வெளிவரும் IPOக்கள் காரணமாக அது பற்றியே அதிகமாக எழுத வேண்டி உள்ளது.


இதனால் சந்தை நிலவரத்தை கொஞ்சம் அதிகமாக அலசலாம் என்பது பற்றிய கட்டுரையும் தள்ளி போகிறது.

அதனைப் பற்றி நாளை எழுதி விட முயற்சிக்கிறோம்.



இன்று Sandhar Technologies என்ற நிறுவனத்தின் ஐபிஒ வெளியீடை பார்ப்போம்.

நாளை மார்ச் 21 என்பது விண்ணப்பங்களுக்கான கடைசி நாள். ஒரு பங்கின் விலை 332 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தில் இருக்கும் கடன் சுமையைக் குறைப்பதற்காக ஐபிஒ வெளியீட்டின் மூலம் 300 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்துள்ளது.

திங்கள், 19 மார்ச், 2018

HAL IPOவை வாங்கலாமா?

நிதி வருட கடைசி என்பதால் என்னவோ பல ஐபிஒக்கள் கரடியின் பிடியில் இருக்கும் சந்தையில் கூட வரிசையில் நிற்கின்றன.


இந்த ஐபிஒக்களுக்கு தேவையான நிதி ஏற்கனவே இருக்கும் பங்குகளை விற்று கூட பெற முனைவதால் சந்தையின் சரிவிற்கு கூட இவை காரணாமாக உள்ளது என்று சொல்லலாம்.



நாளை, மார்ச் 20 அன்று  HAL IPOவின் கடைசி நாள்.

HAL என்பது Hindustan Aeronautical Ltd என்பதன் சுருக்கம் ஆகும்.

ஹெலிகாப்ட்டர், விமானங்கள் போன்றவை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

பெரும்பாலும் மத்திய அரசே HAL நிறுவனத்திற்கு கிளின்ட்டாக உள்ளது.

வெள்ளி, 16 மார்ச், 2018

Bandhan Bank IPOவை வாங்கலாமா?

பந்தன் வங்கியின் ஐபிஒ வெளிவந்துள்ளது. வரும் திங்கள், மார்ச் 19 என்பது விண்ணப்பங்களுக்கு இறுதி நாளாகும்.


இரண்டு வருடங்களுக்கு முன்பு என்று நினைக்கிறோம்.




ரிலையன்ஸ் போன்ற பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் வங்கி லைசென்ஸ் பெறுவதற்கு போட்டியிட்டு இருந்தார்கள்.

அந்த சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி IDFC, Bandhan Bank என்று இரு வங்கிகளுக்கு மட்டும் அனுமதி அளித்தது.

அதில் பந்தன் வங்கிக்கு அளிமதிக்கப்பட்டதற்கு ஒரு காரணமாக கூறப்பட்டது, வட கிழக்கு இந்தியாவில் வங்கி கட்டமைப்பு இன்னும் பரவலாக இல்லை என்பது தான்.

புதன், 14 மார்ச், 2018

Bharat Dynamics IPOவை வாங்கலாமா?

நேற்றே Bharat Dynamicsவின் IPO விண்ணப்பங்கள் திறக்கப்பட்டு விட்டது. நாளை(15/03/2018) இறுதி வரை இருப்பதால் கடைசி நேரத்தில் பயன் பெறும் பொருட்டு இந்த பதிவினை எழுதுகிறோம்.


நமது குடியரசு தின அணிவகுப்புகளில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆகாஸ் ஏவுகணைகள் போன்றவை பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கும்.

அதனைத் தயாரிக்கும் நிறுவனம் தான் Bharat Dynamics.



இது முழுக்க, அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத் துறை நிறுவனம்.

கடந்த அருண் ஜேட்லியின் பட்ஜெட்டில் பொதுத் துறை நிறுவன பங்குகள் மூலம் எண்பதாயிரம் கோடி அளவு நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டு இருந்தது.

அதில் Bharat Dynamics நிறுவனத்தின் பங்குகளும் உள்ளடங்கும்.

ஞாயிறு, 11 மார்ச், 2018

சரியும் மார்ச் மாதமும் கடந்து போகும்...

கடந்த பதிவு எழுதிய பிறகு பதினைந்து நாட்கள் என்பது ஒரு பெரிய இடைவெளி தான். மன்னிக்கவும்!


இந்த மாதம் எப்படி இருக்கும் என்பதை கடந்த மாத சில பதிவுகளிலே குறிப்பிட்டு இருந்ததால் புதிதாக எழுதுவதற்கு பெரிதளவு இல்லை.



இது போக, எமது தனிப்பட்ட சில வேலைகளும் ஒரு காரணமாக இருந்தது.

இந்த பதிவையும்  எமது தனிப்பட்ட முதலீடு சரிதையில் இருந்தே ஆரம்பிக்கிறோம்.

செவ்வாய், 9 ஜனவரி, 2018

Apollo Micro Systems IPOவை வாங்கலாமா?

புது வருடத்தின் முதல் ஐபிஒவாக நாளை Apollo Micro Systems என்ற இந்த நிறுவனத்தின் ஐபிஒ வெளிவரவுள்ளது.


Apollo Micro Systems நிறுவனமானது இந்திய பொதுத்துறை பாதுகாப்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் ஒரு தனியார் நிறுவனம்.



DRDO, BHEL போன்ற அரசு நிறுவனங்கள் இதன் முதன்மையான வாடிக்கையாளர்கள்.

பாதுகாப்பு துறையில் ஏவப்படும் ராக்கெட், ஏவுகணைகள் போன்றவற்றிற்கு தேவையான எலெக்ட்ரானிக்ஸ் உபகரணங்களை தயாரித்து வருகிறது.

இதனை IP என்று அழைக்கப்படும் சிப்களை தயாரித்து வருவதால் இவை கண்டுபிடிப்புகளுக்கு ஒத்த உரிமத்தை பெற்றன.

அதனால் போட்டியாளர்கள் என்பது மிகக் குறைவு.

செவ்வாய், 5 செப்டம்பர், 2017

Dixon Technologies IPOவை வாங்கலாமா?

கடந்த வாரம் Apex Frozen Foods ஐபிஒவை வாங்க பரிந்துரை செய்து இருந்தோம்.

நேற்று முதல் பட்டியலிடப்பட்ட நாளிலே 20%க்கும் மேல் லாபம் அளித்தது. நமது வாசகர்கள் பயனடைந்து இருப்பார்கள் என்று நம்புகிறோம்.

வாழ்த்துக்கள்!



அடுத்து நாளை, செப்டெம்பர் 06 முதல் Dixon Technologies, Bharat Road Networks என்ற இரண்டு நிறுவனங்களின் ஐபிஒ விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

இதில் Dixon Technologies நிறுவனத்தைப் பற்றி இன்று பார்ப்போம்.

Dixon என்பது ஒரு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம். LED பல்புகள், திரைகள் போன்றவற்றை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றுள்ளது.

Panasonics, Philips போன்ற பெரிய எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களின் மொபைல், தொலைகாட்சி போன்றவற்றிற்கு தேவையான LED திரைகளை காண்ட்ராக்ட் முறையில் செய்து வருகிறது.

இது தவிர, வாஷிங் மெசின் போன்ற வீட்டு உபயோக பொருட்களையும் தயாரித்து வருகிறது.

தற்போது ஐபிஒ மூலம் 600 கோடி ரூபாயை திரட்ட வருகிறது. இதில் பெரும்பகுதி ஏற்கனவே இருக்கும் பெரிய முதலீட்டாளர்கள் வெளியேற ஒரு வாய்ப்பாக கொடுக்கப்படுகிறது.

மீதி கொஞ்சம் நூறு கோடி ரூபாய் அளவு தான் நிறுவன விரிவாக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

ஏற்கனவே இருக்கும் முதலீட்டாளர்கள் வெளியேற விரும்புவதை பெரிய அளவில் எதிர்மறை நிலையாக தான் பார்க்க வேண்டி உள்ளது.

அதே போல், நிறுவனத்தின் பெரும்பாலான வியாபாரம் மொபைல் விற்பனையை சார்ந்தே உள்ளது. அதனால் அவற்றில் வீழ்ச்சி ஏற்படும் போது நிறுவனத்தையும் பாதிக்கலாம்.

கடந்த நான்கு ஆண்டுகளில் வியாபாரம் 1000 கோடியில் இருந்து 2500 கொடியாக உயர்ந்து உள்ளது.

அதே போல் லாபமும் 14 கோடியில் இருந்து 50 கொடியாக உயர்ந்து உள்ளது.

இது ஒரு நல்ல நேர்மறை வளர்ச்சி என்று குறிப்பிடலாம்.

ஆனால் இந்த நிலையில் ஐபிஓவில் குறிப்பிடும் 1760 ரூபாய் பங்கு விலை என்பது நிறுவனத்தின் P/E மதிப்பை 40க்கு அருகில் கொண்டு செல்கிறது.

இந்த மதிப்பு கொஞ்சம் அதிகம். அதனால்  மேலும் பங்கு விலை அதிக அளவில் உயரும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

அதனால் Dixon ஐபிஒவை நண்பர்கள் தவிர்க்கலாம்!

அடுத்து நாளை Bharat Road Networks ஐபிஒ தொடர்பாக சந்திக்கலாம்!

புதன், 21 ஜூன், 2017

ஜூன் மாத முதலீடு போர்ட்போலியோ அறிவிப்பு

நண்பர்களுக்கு,

ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் புதிய மாத போர்ட்போலியோவினை அறிவிக்கிறோம்.

வெள்ளி, 16 ஜூன், 2017

CDSL IPO பங்கை வாங்கலாமா?

வரும் ஜூன் 19 முதல் CDSL நிறுவனத்தின் IPO பங்கு வெளிவருகிறது.

செவ்வாய், 16 மே, 2017

PSP Projects ஐபிஒவை வாங்கலாமா?

இன்று (17-05-2017) முதல் PSP Projects நிறுவனத்தின் ஐபிஒ வெளியிடப்பட இருக்கிறது.

வெள்ளி, 21 ஏப்ரல், 2017

S.Chand IPOவை வாங்கலாமா?

ஏப்ரல் 26 அன்று S Chand நிறுவனத்தின் IPO வெளிவருகிறது.

ஞாயிறு, 26 மார்ச், 2017

வோடாபோன் - ஐடியாவின் சிக்கலான டீல், யாருக்கு லாபம்?

இந்தக் கட்டுரை சில நாட்களுக்கு முன்னரே எழுதப்பட்டிருக்க வேண்டும். சில வேலைப்பளு காரணமாக எழுத முடியவில்லை.

திங்கள், 20 மார்ச், 2017

SANKARA IPOவை வாங்கலாமா?

நேற்று தான் CL Educate IPOவை பற்றி எழுதி இருந்தோம். அந்த IPOவின் மூன்று நாட்கள் விண்ணப்பிக்கும் தேதி முடியும் முன்னரே அடுத்த ஐபிஒ வெளிவந்து விட்டது.

ஞாயிறு, 19 மார்ச், 2017

CL Educate IPOவை வாங்கலாமா?

இன்று முதல் (மார்ச் 20) CL Educate நிறுவனத்தின் ஐபிஒ வெளிவருகிறது.

செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

Avenue Supermarts IPOவை வாங்கலாமா?

நாம் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவை பற்றி எழுதி இருந்தோம். இந்திய பங்குசந்தையில் வாறன் பப்பெட் போன்று நீண்ட கால முதலீட்டில் வெற்றி அடைந்தவர்.

பார்க்க: இவர் தான் இந்தியாவின் வாரன் பஃப்பேட்