வியாழன், 26 ஜனவரி, 2017

சேமிப்பு மூலம் வருமான வரி விலக்கு பெறும் நேரம்

மாத ஊதியம் பெறுபவர்கள் குறைவாக வருமான வரி கட்ட வேண்டும் என்றால் அதற்கான சேமிப்பு ஆதாரங்களை காட்ட வேண்டிய நேரமிது.


ஏற்கனவே வருமான வரி தொடர்பாக எழுதிய பதிவுகளை மீண்டும் பகிர்வது இந்த நேரத்தில் உபயோகமாக இருக்கும் என்பதால் தொடர்கிறோம்.தற்போதைய நிலவரப்படி 2,.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் வந்தால் வரி கிடையாது. பெண்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை கூடுதல் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

2.5 முதல் 5 லட்சம் வரை 10% வரி விதிக்கப்படுகிறது.

அடுத்து 5 முதல் 10 லட்சம் வரை 20% வரி விதிக்கப்படுகிறது.


அதற்கு மேல் வரும் வருமானத்திற்கு 30% வரி கட்ட வேண்டும்.

வருமான வரியை எப்படி கணக்கிட வேண்டும் என்பதற்கு எமது முந்தைய பதிவை பார்க்க..
பட்ஜெட்டிற்கு பிறகு வருமான வரி கணக்கிடுவது எப்படி?

ஆனாலும் சில சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் கிட்டத்தட்ட மூன்று லட்சம் வரை வரும் வருமானத்திற்கு வரி விலக்கு பெறலாம்.

இதனால் சராசரியாக ஒவ்வொரு வருடமும் 75 முதல் ஒரு லட்சம் வரை வருமான வரி பலன்களை பெற முடியும்.

அதற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வீட்டுக் கடன் அசல், பிஎப் சேமிப்பு, ELSS ம்யூச்சல் பாண்ட், PPF, ஐந்து வருட பிக்ஸ்ட் டெபாசிட் போன்ற திட்டங்களில் முதலீடு செய்து கணக்கு காட்டிக் கொள்ளலாம்.

இது போக, வீட்டுக் கடன் வட்டியையும் இரண்டு லட்சம் ரூபாய் வரை கணக்கு காட்டிக் கொள்ளலாம்.

ஒரு வருடத்தில் 15 ஆயிரம் வரை மருத்துவ செலவையும் காட்டி பலன் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை பார்க்க..
வருமான வரி விலக்கு பெற என்ன செய்யலாம்?

இவ்வாறு நாம் காட்டும் சேமிப்புகளை அடிப்படையாக வைத்து பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வரியை கூட்டியோ, குறைத்தோ நமது சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்வார்கள்.

அதன் பிறகு Form 16 என்ற ஒன்றை நிறுவனங்கள் வழங்கும். அதனை வைத்துக் கொண்டு வேறு வருமானம் வந்தால் அதனையும் காட்டி தனியாக வருமான வரிக் கணக்குகளை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அதற்கு CLEARTAX.IN என்ற தளம் பெரிய அளவில் உதவி புரியும்.

மேலும் விவரங்களுக்கு,
வருமான வரியை பதிவு செய்ய ஒரு எளிய வழி
« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக