ஞாயிறு, 29 ஜனவரி, 2017

எதிர்பார்ப்பு தவறினால் வீழ காத்திருக்கும் சந்தை

கடந்த இரு வாரங்களாக சந்தையில் காளையின் பிடி நன்றாகவே உள்ளது.


மோடி அரசின் ரூபாய் மதிப்பிழப்பு கொள்கையால் அரசுக்கு வருமானம் அதிகமாக வரும்.



அந்த சூழ்நிலையில் தனி நபர் வருமான வரி, கார்பரேட் வரி போன்றவை கணிசமாக குறைக்கபப்டும்.

அப்படிக் குறைக்கப்பட்டால் அது நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதனைத் தான் பிப்ரவரி முதல் தேதியில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் எதிர்பார்த்து இந்திய பங்குச்சந்தை கணிசமாக உயர்ந்து வருகிறது.

இந்த பட்ஜெட் முன்பை விட சில வித்தியாசமான நல்ல விடயங்களைக் கொண்டிருக்கும் என்ற வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை.

ஆனால் அதற்காக சந்தையின் எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யுமா என்பது கடினமானது தான்.

ரூபாய் மதிப்பிழப்பு கொள்கையால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தில் 30% அளவு வங்கிக்கு வராது, அவ்வாறு வராத பணத்தை ரிசர்வ் வங்கி டிவிடெண்டாக அரசுக்கு வழங்கலாம் எதிர்பார்க்கப்பட்டது என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கிட்டத்தட்ட 90% பணமும் திருப்பி வந்து விட்ட சூழ்நிலையில் அரசு அதனை சொல்லவும் மெல்லவும் தெரியாமல் தவித்து வருகிறது.

இனி வங்கிக்கு வந்த பணத்தை எது கருப்பு பணம் எது நல்ல பணம் என்று தேடித் தான் கண்டு பிடிக்க வேண்டும்.

அந்த வருமானத்திற்கு வரி போட்டு வருமானத்தை பெருக்க வேண்டிய சூழ்நிலை.

அதே நேரத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து அரசின் செலவுகளை, அந்நிய செலாவணியை கூட்டலாம் என்று மறு பக்கத்தில் எதிர்மறை விளைவுகளும் உள்ளன.

இந்த எதிர்மறை விளைவுகளை இன்னும் சந்தை கண்டு கொண்டதாக தெரியவில்லை.

இந்த பட்ஜெட் மற்ற பட்ஜெட்களை விட தோராயமாக பத்து சதவீத அளவு நன்றாக இருக்க முடியும். அதற்கு மேல் ஒரே அடியாக மேலே தூக்கி வைக்குமளவு வசதி இருக்காது என்றே தோன்றுகிறது.

ஓவர் எதிர்பார்ப்பில் மட்டும் ஏறிய சந்தை மீண்டும் இறங்க வாய்ப்புகள் அதிகளவு உள்ளன.

அதனால் காத்து இருந்து பங்குகளை வாங்குங்கள்!


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக