Bombary Stock Exchange (BSE) யின் ஐபிஒ பங்குசந்தைக்கு வெளிவருகிறது.
BSE என்று சொன்னதுமே பங்கு பரிவர்த்தனைகளை செய்யும் ஒரு அரசு அமைப்பு என்று தான் அறிந்திருப்போம்.
ஆனால் அது ஒரு அரசு அமைப்பல்ல. பல வங்கிகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் ஒரு நிறுவனம் தான்.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பழமையான மிகப்பெரிய பங்குச்சந்தை அமைப்பு.
அந்த நிறுவனம் இன்று(ஜனவரி 23) முதல் பங்குச்சந்தையில் நுழைகிறது.
எந்தவொரு பங்கு பரிவர்த்தனை நிறுவனமும் தனது சொந்த மையத்தில் பட்டியலிடப்படக் கூடாது என்பதால் NSE மூலம் சந்தைக்கு வருகிறது.
பங்குச்சந்தையில் பட்டியளிடப்படுவதன் மூலம் 1250 கோடி நிதியை வெளியில் திரட்டுகிறது.
ஒரு பங்கின் விலை 805 முதல் 806 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
806 ரூபாயில் நின்று பார்த்தால் P/E மதிப்பு 2016ம் நிதி ஆண்டு வருமானத்தில் 25க்கு அருகில் வருகிறது. அதே நேரத்தில் இந்த வருட வருமானத்தில் பார்த்தால் 18க்கு அருகில் வருகிறது.
அதனால் பங்கு விலை மலிவான வாங்கும் விலையாக உள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் பார்த்தால் தொடர்ந்து 30க்கு சதவீதத்திற்கு மேல் வருமானம் மற்றும் லாப வளர்ச்சியை பெற்றுள்ளது.
Particulars | For the year/period ended (in Rs. Million) | |||||
---|---|---|---|---|---|---|
30-Jun-16 | 31-Mar-16 | 31-Mar-15 | 31-Mar-14 | 31-Mar-13 | 31-Mar-12 | |
Total Assets | 30,363.5 | 29,176.7 | 28,758.0 | 25,923.0 | 27,273.6 | 27,915.7 |
Total Revenue | 1,424.4 | 5,158.9 | 4,391.8 | 3,328.3 | 3,389.1 | 4,028.0 |
Profit After Tax (PAT) | 454.3 | 1,319.1 | 756.5 | 747.7 | 398.2 | 1,116.0 |
இந்திய பங்கு பரிவர்த்தனைகளில் BSE என்பது ஒரு ப்ராண்டாகவே உள்ளது என்பதும் சாதகமான விடயம்.
மற்ற வளர்ச்சி அடைந்த நாடுகளில் 15% மக்கள் டிமேட் கணக்குகள் வைத்து இருக்கும் சூழ்நிலையில் இந்தியாவில் 5% மட்டுமே டிமேட் வைத்துள்ளார்கள்.
தற்போதைய இளைய தலைமுறை பிக்ஸ்ட் டெபாசிட்டை மட்டும் நம்பி இராமல் பங்கு முதலீடுகளிலும் ஆர்வம் காட்டத் தொடங்கி உள்ளதும் இந்த நிறுவனத்திற்கு சாதகமான விடயம்.
ஆனால் NSE கொடுக்கும் கடுமையான போட்டியையும் கருத்தில் கொண்டுள்ளது.
இருந்தாலும் நம்பிக்கை, நீண்ட வரலாறு, அதிக நிறுவனகள் பட்டியலில் இருப்பது போன்ற காரணங்களை கருத்தில் கொண்டு இந்த பங்கில் முதலீடு செய்யலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக