புதன், 17 மே, 2017

InvIT Fund IPO பற்றிய விரிவான விளக்கம்

இன்று IndiaGrid InvIT IPO வெளியீட்டிற்கு வருகிறது. இந்த ஐபிஒவிற்கும் நிறுவனங்களின் ஐபிஒவிற்கும் பெரிய அளவில் வித்தியாசங்கள் உள்ளன.


அதனைப் பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.InvIT என்பது Investment Infrastructure Trust என்பதன் சுருக்கம் தான்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மோடி அரசு ரியல் எஸ்டேட் துறைக்கும் கட்டுமான துறைக்கும் பண்ட் மூலம் நிதி திரட்டிக் கொள்ளலாம் என்று அனுமதி அளித்தது.

அதன் பிற்பாடு தான் தற்போது IRB மற்றும் India Grid போன்ற நிறுவனங்கள் இந்த பண்ட்களை ஐபிஒ மூலம் கொண்டு வந்து நிதி திரட்டிக் கொள்கின்றன.

இதில் IRB என்பது நெடுஞ்சாலை கட்டுமானத் துறையிலும், India Grid என்பது மின் கட்டுமான துறையிலும் இருக்கின்றன.

இந்த கட்டுமான நிறுவனங்கள் அதிக அளவில் கடன் நிலையைக் கொண்டிருப்பதால் வங்கி கடன்களுக்கு சென்றால் அதிக வட்டிக் கொடுக்க வேண்டி வரும்.

அதற்கு பதிலாக இவ்வாறு பொது மக்களிடம் நிதி திரட்டி கிடைக்கும் லாபத்தை எல்லோரும் பகிர்ந்து கொள்ளலாம் என்பது தான் இந்த திட்டம்.

ஆனால் இவ்வாறு திரட்டப்படும் நிதியில் 80% பகுதி ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட ப்ராஜெக்ட்களில் தான் முதலீடு செய்ய வேண்டும் என்பது ஒரு அரசின் ஒரு முக்கிய விதி முறை.

உதாரணத்திற்கு ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட நெடுஞ்சாலையின் சுங்க கட்டணம் லாபம் இங்கு டிவிடென்ட் முறையில் திருப்பி விடப்படும்.

இதனால் ரிஸ்க் என்பது மிகவும் குறைவு.

இவ்வாறு திரட்டப்படும் நிதி எங்கெல்லாம் முதலீடு செய்யப்படுகிறதோ அதில் கிடைக்கும் லாபத்தின் 90%மும் டிவிடென்ட் முறையில் முதலீட்டாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறு கிடைக்கப்படும் டிவிடென்ட்களுக்கு வரி கிடையாது.

உத்தேசமாக இந்த நிதிகளில் செய்யப்படும் முதலீடுகளுக்கு 8 முதல் 12% வரை வருட லாபம் கிடைக்கலாம்.

வங்கிகளின் வட்டி குறைந்து வரும் சூழ்நிலையில் இந்த ரிஸ்க் குறைவான லாபம் முக்கியத்துவம் பெறுகிறது. அதனால் தான் IRB நிறுவனத்தின் நிதி வெளியீடு எட்டு மடங்குகளுக்கும் மேலான வரவேற்பை பெற்றது.

இந்த நிதிகளில் குறைந்த பட்சம் பத்து லட்சம் தொகையாவது முதலீடு செய்ய வேண்டும். அதனால் நம்மைப் போல் சிறு முதலீட்டாளர்களுக்கு கடினம் தான். இந்த பத்து லட்சமும் மியூச்சல் பண்டில் இருப்பது போல் சிறு யூனிட்களாக பிரிக்கப்படும்.

வழக்கமான ஐபிஒவிற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்று அதிக மெயில்கள் வந்ததால் இந்த பதிவினை பகிர்கிறோம். மேலும் கேள்விகள் இருப்பின் muthaleedu@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக