புதன், 31 மே, 2017

மோசமான ஜிடிபி தரவுகளால் கரடியின் பார்வையில் பங்குச்சந்தை

கடந்த ஒரு வாரமாக சில வேலைப் பளு இருந்ததால் பதிவுகள் எழுத முடியவில்லை.


இது போக, காளையின் பிடியில் இருக்கும் சந்தை கீழே வருவதற்கான வாய்ப்புகள் காண முடியவில்லை.



சந்தையில் பலர் தொடர்ந்து நிப்டியானது 10,000 புள்ளிகளை இரண்டு, மூன்று மாதங்களில் தொடும் என்று அனுமானம் சொல்லி வந்தனர்.

ஆனால் அதற்கு தகுந்தவாறு நிறுவனங்களின் நிதி முடிவுகள் இல்லாததால் மனதில் ஒரு குழப்பம் இருந்தது.

அதனால் தான் தெளிவு கிடைக்கும் வரை காத்து இருக்கலாம் என்று விட்டு விட்டோம்.

ஆனால் இன்று இரவு கிடைத்த ஒரு செய்தி நாளை சந்தையில் பெரிய அளவில் திருத்தங்கள் இருக்கும் என்பதை காட்டுகிறது என்று சொல்லலாம்.

மோடியின் ரூபாய் ஒழிப்பு நிகழ்வு நடந்த பிறகு அதிக அளவில் தற்காலிக பொருளாதார தாக்கம் ஏற்படும் என்று தால் பலர் கருதினர்,

ஆனால் கடந்த டிசம்பர் முடிய காலாண்டு நிதி ஆண்டில் வெளிவந்த ஜிடிபி தரவு ஏழு சதவீத வளர்ச்சி காட்டியது. அதனால் ரூபாய் ஒழிப்பு பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்த வில்லை என்றே கருத ஆரம்பித்தனர்.

ஆனாலும் நவம்பர் மாதத்தில் வந்த ரூபாய் ஒழிப்பு நடவடிக்கை டிசம்பர் காலாண்டில் எவ்வளவு முழுமையாக தாக்கத்தை ஏற்படுத்த முடியும்? என்ற சந்தேகமும் இருந்து வந்தது.

அதனால் அடுத்த மார்ச் மாத காலாண்டு நிதி முடிவுகள் ஒரு தெளிவை கொடுக்கும் என்று சந்தை நம்பியது.

அந்த ஜிடிபி தரவுகள் தான் இன்று வெளிவந்தது.

அதன் படி, ஏழு சதவீதற்கும் மேல் எதிர்பார்க்கப்பட்ட ஜிடிபி வளர்ச்சி 6.1%க்குள் சுருங்கி விட்டது.

விவசாய துறையை தவிர மீதி அணைத்து துறைகளும் குறைந்த வளர்ச்சியைத் தான் காட்டி உள்ளன.

இது பெரிய அளவில் நாளைய சந்தை நிகழ்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று தான் கருதுகிறோம்.

மிக நீண்ட நாட்களாக காளையின் பிடியில் இருந்த சந்தையில் பங்குகளை வாங்கும் வாய்ப்புகள் நழுவி போய் இருக்கலாம்.

நாம் முன்பே சொன்னவாறு ரூபாய் ஒழிப்பின் தாக்கம் என்பது ஒரு தற்காலிகம் தான். இரண்டு, மூன்று காலாண்டுகளில் மீண்டும் நேர்மறையான பொருளாதார நிகழ்வுகளை காணும் வாய்ப்பு உள்ளது.

அதனால் தற்போது கரடி கொடுக்கும் பெரிய அளவிலான திருத்தம் பங்குகளை வாங்குபவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு.

இந்த வாய்ப்புகளில் நாமும் இந்த வார இறுதியில் (ஜூன் 4) முழு போர்ட்போலியோ, மினி போர்ட்போலியோ, பென்னி போர்ட்போலியோ போன்றவற்றை பரிந்துரை செய்கிறோம்.

விருப்பம் உள்ளவர்கள் மேலும் விவரங்களை கீழே உள்ள இணைப்பில் பெற்று கொள்ளலாம்.
முதலீடு கட்டண போர்ட்போலியோ சேவை

அதே நேரத்தில் பிறிதொரு வழியாக எமது பரிந்துரைகளை இலவசமாக பெறலாம்.

எமது முதலீடு தளம் வாயிலாக, முப்பது ஆண்டுகள் டீமேட் சேவையில் சிறப்பான  அனுபவம் கொண்ட Angel Broking நிறுவனத்தில் டிமேட் கணக்கு திறந்தால் கீழே உள்ள பலன்களை பெறலாம்.

  • 1300 ரூபாய் மதிப்புடைய  முழு போர்ட்போலியோ இலவசமாக வழங்கப்படும்.
  • அதன் பிறகு வாங்குதல், விற்றல், சராசரி செய்தல் போன்ற பரிந்துரைகள் வாட்ஸ்ஆப் வழியாக இலவசமாக பகிரப்படும்.
  • குறுகிய  கால முதலீட்டிற்கு ஏற்ற Futures & Options  பரிந்துரைகள் வாட்ஸ்ஆப் வழியாக இலவசமாக பகிரப்படும்.
  • சந்தையில்  ஒப்பிடுகையில் குறைவான  Brokerage கட்டணம்.
  • அனுபவம் இல்லாதவர்களுக்கு பங்குசந்தை தொடர்பான டிப்ஸ்.


வெளிப்படைத் தன்மைக்காக எமது பங்குச்சந்தை அங்கீகரிக்கப்பட்ட விவரங்களை பகிர்கிறோம்.

தற்பொழுது நாம் NSE, BSEயின் அங்கீகரிக்கப்பட்ட சப் புரோக்கர்.
BSE ID: AP0106120163737,
NSE ID: AP0397146941

மேலும் செபியால் வழங்கப்படும் கீழே உள்ள சான்றிதழில் தேர்ச்சி அடைந்ததன் மூலம் பங்குச்சந்தையில் "Principal" என்ற அங்கீகாரமும் கிடைத்துள்ளது என்பதை மகிழ்வுடன் பகிர்கிறோம்.



எம்மிடம் டிமேட் கணக்கு திறக்க  விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள படிவத்தை முழுமை செய்யவும். சந்தேகம் இருப்பின் muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.




Powered byEMF Survey

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக