ஞாயிறு, 14 மே, 2017

ஸ்டீல் நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய வாய்ப்பு

கடந்த இரு வாரங்களாக எமது ஸ்டார்ட் அப் மற்றும் முதலீடு தள போர்ட்போலியோ வேலைகள் கொஞ்சம் அதிகமாக இருந்ததால் எழுத முடியவில்லை. மன்னிக்க!


இடையில் முன்பு போல் மீண்டும் போர்ட்போலியோ பரிந்துரைகளை கொடுக்க முடியவில்லை. செபியின் விதி முறைகள் காரணமாக தனிப்பட்ட முறையில் மட்டும் வேண்டுகோள் விடுப்போருக்கு கொடுத்து வந்தோம்.



தற்போது NSEயின் தேர்வு சான்றிதழில் தேறி விட்டதால் இனி மீண்டும் போர்ட்போலியோ சேவையை கொடுக்க எண்ணுகிறோம்.

தற்போதைய உச்ச சந்தையில் பங்குகளை இனங்காணுவது மிகவும் கடினமாக உள்ளது.

ஒரு பக்கம் சந்தை இன்னும் மேலே செல்லும் என்று கணிப்பாளர்கள் சொல்லிக் கொண்டு இருந்தாலும் ஓவராகத் தான் செல்கிறதோ என்ற அச்சம் இருக்கத் தான் செய்கிறது.

அதனால் தான் தற்போது கொடுத்து வரும் போர்ட்போலியோ பரிந்துரைகளில் கூட பங்கு பரிந்துரை விலைகளை ஐந்து சதவீத அளவாவது குறைத்து தான் கொடுக்கிறோம்.

மிகவும் கவனமாக முதலீடு செய்ய வேண்டிய தருணமிது. சந்தையில் தற்போது வரும் பரிந்துரைகளை பார்த்தால் எவரும் சலனத்துடன் இறங்கி விட வாய்ப்புகள் அதிகமாகத் தான் உள்ளது.

இந்த நிலையில் ஸ்டீல் துறை சார்ந்த நல்ல பங்குகளை வாங்கலாம் என்று பரிந்துரை செய்கிறோம்.

உலக அளவில் ஸ்டீல் விலை இறங்கியதால் இந்திய உலோக நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

சீனாவில் இருந்து மிக மலிவு விலைக்கு ஸ்டீல் இறக்குமதி செய்யப்பட இந்திய ஸ்டீல் நிறுவனங்கள் கடுமையான கடனில் சிக்கி கொண்டன.

இதனால் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ஸ்டீல் இறக்குமதி செய்வதற்கு Anti-Dumping என்ற பெயரில் இறக்குமதி வரி அதிகமாக விதிக்கப்பட்டது. இது போக, கடந்த ஒரு வருடத்தில் உலக அளவில் ஸ்டீல் விலையும் கூடியது.

இதனால் தான் கடந்த ஒரு வருடத்தில் ஸ்டீல் நிறுவன பங்குகள் மற்ற துறைகளை காட்டிலும் நல்ல திறனை காட்டி வந்தது.

தற்போது இந்த Anti-Dumping இறக்குமதி வரி மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் ஸ்டீல் விலைகள் இன்னும் கூடும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் சூழ்நிலையில் இந்த முடிவு ஸ்டீல் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு சாதகமான ஒன்றாகும்.

அதனால் உச்ச சந்தையில் பங்குகளை தேடித் பிடிக்க கஷ்டப்படுபவர்கள் ஸ்டீல் பங்குகளையும் கவனிக்க!

தொடர்பான பதிவுகள்:
முதலீடு போர்ட்போலியோ சேவை 


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக