ஏற்கனவே SIS நிறுவன ஐபிஒவை வாங்குமாறு பரிந்துரை செய்து இருந்தோம்.
இந்த நிலையில் நேற்று முதல் Cochin Shipyard நிறுவனத்தின் ஐபிஒ விண்ணப்பங்கள் வாங்கப்படுகின்றன.
தாமதமான பதிவு தான் என்றாலும், நாளை வரை வின்னப்பக்கலாம் என்பதால் இந்த ஐபிஒ தொடர்பான பதிவை தொடர்கிறோம்.
கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி துறைமுகத்தில் கப்பல் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனம் தான் Cochin Shipyard.
இது மட்டுமல்லாமல் கப்பல் பழுது பார்த்தல் போன்ற பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
இது ஒரு மத்திய அரசு நிறுவனம் ஆகும். தனியார் மற்றும் இதர அரசு கப்பல் கழக நிறுவனங்களை விட குறைவான கடன் மற்றும் நல்ல நிதி நிலையைக் கொண்டுள்ளது.
தொடர்ந்து மத்திய அரசிற்கு நல்ல நிலையில் டிவிடென்ட்டை வழங்கி வந்துள்ளது.
கொச்சி அரபிக் கடலில் ஐரோப்பா செல்லும் கப்பல்கள் பாதையில் இருப்பதால் அதிக அளவில் வியாபாரம் பெருக வாய்ப்பு உள்ளது.
3000 கோடிக்கு மேல் ஏற்கனவே ஆர்டர் புக்கை கொண்டுள்ளது. அதிக அளவில் மேலும் பாதுகாப்பு துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டு வருவதால் மேலும் பல ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஒரு பங்கின் உச்ச விலை 432 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சில்லறை முதலீட்டாளர்களுக்காக 21 ரூபாய் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதனால் 411 ரூபாய் செலுத்தினால் போதும். ஐந்து சதவீத லாபம் இங்கே ஏற்கனவே ஊர்ஜிதப்படுத்தபடுகிறது. ஒரு லாட்டிற்கு தேவையான முதலீட்டு தொகை 12330.
பங்குச்சந்தையில் ஏற்கனவே இதே துறையில் இருக்கும் நிறுவனங்கள் நஷ்டத்தை கொடுத்து வரும் சூழ்நிலையில் இந்த நிறுவனம் தொடர்ந்து லாபத்தைக் கொடுத்து வருகிறது.
பங்கின் விலை 432 ரூபாயில் வைத்து பார்த்தாலும், P/E மதிப்பு 18க்கு அருகில் வருகிறது. இது நல்ல மதிப்பீடலில் வருவதால் Cochin Shipyard ஐபிஒவை பரிந்துரை செய்கிறோம்.
எம்மிடம் Angel Broking டிமேட் சேவையில் இணைந்தவர்கள் ஐபிஒ பங்கில் விண்ணப்பிக்க சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ளவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக