இந்தியாவில் ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த ஒரு குழுமம் டாடா.
டாடா சன்ஸ் என்ற பெயரில் நூறுக்கும் மேலளவு நிறுவனங்களை நிர்வகித்து வருகிறது.
இந்த நிறுவனங்களில் இருந்து டிவிடென்ட் மூலம் கிடைக்கும் வருமானம் சமூக சேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது என்பது கூடுதல் தகவல்.
ஆனால் முதன்மையான வருமானம் என்று பார்த்தால் TCS மூலமாகத் தான் வருகிறது. கிட்டத்தட்ட 70% அதிலிருந்து தான் வருகிறது.
டாட்டாவின் ஆரம்ப கால நிலையில் பார்த்தால் ஸ்டீல், ஆட்டோ, நுகர்வோர் சந்தை போன்ற்றில் இருந்து கணிசமான வருமானம் கிடைத்து வந்தது.
ஆனால் கடந்த பத்து வருடங்களாக எடுத்த சில தவறான முடிவுகள் இந்த துறையில் இருந்து சொற்ப வருமானத்தைக் கொடுக்குமளவு மாற்றி விட்டது.
தற்போது பதவி ஏற்று இருக்கும் சந்திரசேகர் அவர்கள் கடந்த இரண்டு வருடங்களாக செய்து கொண்டு இருக்கும் முதன்மையான வேலை என்னவென்றால், குழும நிர்வாகத்தை எளிமையாக்குவது என்பது தான்.
உதாரணத்திற்கு Tata Chemicals வீட்டிற்கு தேவைப்படும் Tata Salt உப்பினை தயாரிக்கிறது.
ஆனால் அதனை மார்கெட்டிங் செய்வதற்கு Tata Global Beverages நிறுவனத்தின் தயவு தேவைப்படுகிறது.
அல்லது தனியாக மார்கெட்டிங் செய்தால் இரட்டை செலவாகிறது.
இப்படி பல நிறுவனங்கள் அங்கும் இங்கும் கூட்டு என்பதால் தொய்வும அதிகமாகி விடுகிறது.
இதனால் இருக்கும் நிறுவனங்களை எல்லாம் சேர்த்து மொத்தமாக பத்து நிர்வாக மேலாண்மையில் கொண்டு வர சந்திரசேகர் திட்டமிட்டு உள்ளார்.
அதன்படி, ஏற்கனவே Tata Aerospace and Defence Ltd. என்ற நிறுவனம் இணைத்து உருவாக்கப்பட்டது.
அடுத்து, நுகர்வோர் துறையில் கவனத்தை செலுத்தியுள்ளார்.
டாடா சால்ட், டாடா காபி, டாடா க்ளுகோஸ் போன்ற நுகர்வோர் துறை பொருட்கள் அனைத்தும் Tata Global Beverages நிறுவனத்துடன் இணைக்கப்படுகின்றன.
இனி Tata Consumer Products என்று அழைக்கப்படும்.
ஏற்கனவே Tata Global Beverages நிறுவனம் அதிக அளவில் பண கையிருப்புடன் இருப்பதால் இனி பெரிய அளவில் விரிவாக்கம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.
HUL, Dabur போன்று மிகப்பெரிய அளவில் வளர்ச்சியைக் கொடுப்பதற்கும் வாய்ப்புகள் இந்த பங்கினை முதலீட்டாளர்கள் கவனிக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக