சனி, 18 மே, 2019

நாளை Exit Poll முடிவுகள், உண்மையாகுமா?

நாளையுடன் கடைசி கட்ட பாராளுமன்ற தேர்தல் முடிவடைகிறது.


தேர்தல் ஆணைய விதிப்படி தேர்தல் நடக்கும் போது கருத்து கணிப்புகளை சொல்லக்கூடாது என்பதால் நாளை மாலை பல டிவிக்கள் Exit Poll கருத்துக் கணிப்புகளை வெளியிடுகின்றன.



இதில் ஒன்றை பார்த்தால்,

கருத்துக் கணிப்புகளை  பொது வெளியில் வெளியிடக் கூடாது என்பது தான் விதி முறை.

கருத்துக் கணிப்புகள் நடத்தும் நிறுவனங்களிடம் நாளை நடக்கும் 60 தொகுதிகளைத் தவிர்த்து மற்ற தொகுதிகளுக்கான கணிப்புகள் தற்போது கூட கையில் இருக்கத் தான் செய்கிறது.


பொது வெளியில் இந்த தகவல்களை வெளியிடாமல் தனிப்பட்ட முறையில் முதலீட்டு நிறுவனங்களிடம் தந்து இருக்க கூட வாய்ப்புகள் இருக்கிறது.

அதனால் தான் முதலில் ஏறிய சந்தை அடுத்த ஒரு ஒன்பது நாட்களில் தொடுத்து ஏற்றத்தின் பெரும் பகுதியை இழந்து இருந்ததையும் ஒரு சந்தேகக் கண்ணோடு தான் பார்க்க முடிகிறது.

அந்த சந்தேகம் உண்மை என்றால், சந்தை ஏற்கனவே தன்னை தயார் படுத்திக் கொண்டது. அதனால் தற்போதைய சந்தையில் இருந்து மேலோ, கீழோ ஒரு ஐந்து சதவீத அளவிற்கு மாற்றங்களை பார்க்கலாம்.

அடுத்து  Exit Poll முடிவுகள் எவ்வவளவு தூரம் உண்மையாக இருந்தது என்று பார்த்தால் பெரும்பாலான சமயங்களில் பாராளுமன்ற தேர்தலில் மாறுபட்டதாகவே இருந்துள்ளது.

கீழே உள்ள தரவுகள் இணையத்தில் பெறப்பட்டது.



அதில் கடந்த மூன்று நாடாளுமன்ற தேர்தலில்களிலும் சீட் வித்தியாசம் என்பது பெருமளவிலே இருந்தது. அதிலும் இரண்டு தேர்தலில்களில் முடிவுகளே மாறி இருந்தன.

அதனால்  Exit Poll முடிவுகள் படி, சந்தை நடனமாடினாலும் மே 23 முடிவுகள் என்பது தான் உண்மை.

அது வரை Aggressive Positions எடுக்காமல் இருப்பது நல்லது.

அதே நேரம் பல நேரங்களில் தேர்தல் முடிந்த ஒரு வாரத்திற்கு பின் சந்தை பதற்றங்கள் தணிந்து நிலை பெற்று விடுகிறது.

அதன் பிறகு புதிய அரசின் நிதிக் கொள்கைள் போன்றவை நன்றாக இருக்கும் பட்சத்தில் அடுத்த ஆறு மாதங்களில் அதிக அளவில் ரிடர்னை கொடுத்துள்ளது.

அதனால் முதலீடு முறையில் பார்த்தால் முதலீடு செய்து விட்டு எதையும் கண்டு விடாமல் இருப்பது நல்லது.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக