இன்று இந்திய பொது தேர்தல் முடிவுகள் வெளிவந்து விட்டன.
காங்கிரஸ் வெற்றி பெறும் சூழ்நிலையில் உள்ள 95 தொகுதிகளில் 60 தொகுதிகள் தமிழ்நாடு, கேரளாவிற்குள்ளே வந்து விடுகின்றன.
அப்படி என்றால், மற்ற இந்திய பகுதிகளில் தோல்வியிலும் மட்டமான தோல்வி என்று சொல்லலாம்.
இவ்வாறு காங்கிரஸ் வலுவில்லாத வரை பபிஜேபியின் வெற்றியும் தவிர்க்க முடியாத ஒன்றே.
பிஜேபி கூட்டணி 350 இடங்களுக்கும் மேல் வெற்றி. தனித்தே ஆட்சி அமைக்கும் சூழ்நிலை கூட...
இதைத் தான் பங்குசந்தையும் எதிர்பார்த்தது.
ஆனால் நாம் முன்பு எழுதியவாறு பெரிய முதலீட்டு தலைகள் முடிவுகளின் கணிப்பை முன்பே ஆராய்ந்து தயாராகி விட்டது போல் தெரிகிறது.
அதனால் தான் சந்தை பெரிய அளவில் மேலே செல்லவில்லை. இறுதியில் சிறிய எதிர்மறையில் தான் முடிந்தது.
இது போக, எதிர்கட்சிகள் சொல்வது போல் வெறும் தேசபக்தி போன்ற கோஷங்கள் உணர்ச்சியை தூண்ட தான் உதவும்.
வளர்ச்சி என்பதன் தாக்கம் கடந்த ஐந்து ஆண்டுகளிலும் உணரப்படவே இல்லை.
ஏதோ ஒன்று. தொங்கு பார்லிமென்ட் இல்லாமல் ஒரு நிலையான அரசு அமைந்ததில் சந்தை உட்பட அணைத்து பொருளாதார நிலைகளுக்கும் மகிழ்ச்சி தான்.
கடந்த ஆட்சியில் ஒரு போகஸ் என்பது குறைவாக தான் இருந்தது. அங்கும் இங்கும் டைவர்ட் செய்து பிஸியாக வைத்து இருந்தார்கள்.
காங்கிரஸ் ஆட்சியை விட கடந்த பிஜேபி ஆட்சியில் வேலைவாய்ப்பு, GDP வளர்ச்சி போன்றவை குறைவு தான்.
அது போல் இல்லாமல் வங்கிகள் கடன் கொடுக்க பணமில்லாத சூழ்நிலை, ஆட்டோ வாகன விற்பனை போன்றவையும் குறைவு தான்.
அதன் தாக்கம் தான் தற்போதைய சந்தையில் ஒரு உற்சாமில்லாத நிலையைக் கொடுத்துள்ளது.
இதே நேரத்தில் ஒரு நிலையில்லாத அரசு அமைந்து இருந்தால் இதை விட நிலைமை மோசமாக இருந்து இருக்கும்.
அதற்கு இது பரவாயில்லை என்று அடுத்தக் கட்டத்திற்கு நகர வேண்டிய தருணமிது.
இனி புதிய மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் என்ன என்று உற்று பார்த்து விட்டு தான் சந்தை அடுத்த கட்டத்திற்கு நகரும்.
இதே வேளையில் நிப்டியில் பெரிய அளவில் உயர்வை காண முடியாது.
நிப்டியில் உள்ள பெரிய நிறுவனங்களின் பங்குகள் அதிக அளவில் உயர்ந்து விட்டதால் இனி கவனம் நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களை நோக்கி நகரும்.
அவற்றில் கணிசமான உயர்வை பார்க்கலாம்.
எவ்வாறாக இருந்தாலும், கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் பதற்றத்தை கொடுத்து வந்த ஒரு நிகழ்வின் முடிவுகள் வந்து விட்டதால் இனி அடுத்த கட்டத்திற்கு ஆசுவாசமாக நகருவோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக