Tuesday, May 21, 2019

Exit Poll முடிவுகளை நம்ப மறுக்கும் சந்தை

கடந்த பதிவில் Exit Poll முடிவுகள் உண்மையாகுமா? என்பது பற்றி எழுதி இருந்தோம்.


அதன் படியே இன்றைய சந்தை 'அப்படி இருந்தால் நன்றாக இருக்கும், ஆனால் இருக்குமா?' என்று கமல்ஹாசன் பாணியில் குழம்பி நிற்கிறது.தந்தி டிவியின் எக்ஸிட் போல் முடிவுகளை பார்த்துக் கொண்டு இருந்தோம்.

தமிழ்நாடு முழுவதும் 12,000 நபர்களிடம் தரவுகளை பெற்றோம் என்று சொல்லி இருந்தார்கள்.

அப்படி என்றால், நாற்பது தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 300 என்ற வீதத்தில் எடுக்கப்பட்டு இருந்தது.

ஒரு தொகுதியில் சராசரியாக பத்து லட்சம் வாக்குகள் இருக்கும் பட்சத்தில் 300 என்பது மிக குறைவே.


தந்தி டிவியாவது ஒரு தொகுதிக்கு 300 என்று தமிழ்நாடையாவது முழுமையாக கவர் செய்ய விருப்பப்பட்டு இருப்பார்கள்.

ஆனால் அகில இந்திய அளவில் ஆங்கில செய்தி சானல்கள் எடுக்கும் போது ஒரு தொகுதிக்கு 100 மாதிரிகள் எடுத்து இருந்தால் கூட ஆச்சர்யம் தான்.

இது தான் இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளை பொய்க்க வைக்கும் காரணி என்று கூட சொல்லலாம்.

அதனால் கருத்துக் கணிப்பு என்பது ட்ரேன்ட் என்ன என்பதை சொல்லலாம்.

ஆனால் இத்தனை சீட் வாங்குவார்கள் என்று சொல்லும் போது அதில் அவ்வளவு நம்பிக்கை கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.

எல்லோரும் கருத்துக் கணிப்பு சொல்லி விட்டார்கள்.

நாமும் நமது பங்கிற்கு சொல்கிறோம்.

அநேகமாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 230 முதல் 270 இடங்கள் வரை கிடைக்கலாம் என்று தோன்றுகிறது.

கேள்வி பதில் சொல்லும் Quora தளத்தில் ஒவ்வொரு ஊர் காரர்களும் சொல்லிக் கொண்டதை அடிப்படையாக வைத்து சொன்னது.

இந்த எதிர்பார்ப்பு என்பது சந்தை எதிர்பார்ப்பது போல் பெரிதாக இல்லை. ஆனால் மோசமில்லையும் என்பதால் சந்தை என்ன தான் வீழ்ந்தாலும் மீண்டு வரலாம்.

இது போக, இந்த முறை VVPAT என்னும் சரிபார்ப்பு கருவியும் ஓட்டு  எந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் போது ஒரு தொகுதியில் ஏதேனும் ஒரு வாக்கு சாவடியில் உள்ள ஓட்டுக்கள் VVPAT கருவியில் காகித முறைப்படி எண்ணப்படும். அதனால் முடிவுகள் வருவதற்கு 4 மணி நேரம் கூடுதலாக இருக்கும் என்பது ஒரு உதிரி தகவல்.

அதனால் 23ந் தேதி நாள் முழுவதும் சந்தையில் ஏற்ற, இறக்கங்களை பார்த்துக் கொண்டாலும் ஆச்சர்யமில்லை.


« முந்தைய கட்டுரைAdvt.

Email: muthaleedu@gmail.com


2 comments:

 1. என்ன நடக்கலாம் என்கிற என்னுடைய கணிப்பு:

  எக்ஸிட் போல் பொதுவாக டிரெண்டை underestimate அல்லது overestimate செய்யும். அதனால் உண்மை ரிசல்ட் ட்ரெண்டை அதிகப்படுத்தியோ அல்லது குறைத்தோ இருக்கும்.

  2014 இல் underestimate ஆக இருந்தது. இந்தமுறை ஓவர் எஸ்டிமேட் என்று நினைக்கிறன்.
  ஏனென்றால் ஆளும்கட்சி 2014 இல் கொடுத்த வாக்குறுதிகளில் மக்கள் பெரும்பாலும் ஏமாற்றமே அடைந்தனர். அதிலும் , கிராமப்புறம் , விவசாயிகள் , சிறு வியாபாரிகள் அமைதியை விரும்புபவர்கள் வெளிப்படையாகவே அதிருப்தியில் இருந்தனர். இவர்கள் ஒட்டு ஆளும்கட்சிக்கு விழ வாய்ப்பே இல்லை.

  மீடியாவில் என்ன மார்க்கெட்டிங் வந்தாலும் அதை உண்மை என்று நினைக்கிற கூட்டம் ஒன்று உருவாகி உள்ளது. இது வரலாற்றை அசல் ஆவணங்களில் தெரிந்து கொள்ள முயற்சி செய்யாமல் whatsapp மூலமும் வெறுப்பு பிரச்சாரம் மூலமும் மட்டுமே படித்திருக்கும். பெரும்பாலும் மத்தியதர படித்த வர்க்கம். மொத்த ஓட்டில் இது ஒரு 25% இருக்கும். மத மற்றும் சாதி அபிமான ஓட்டுக்கள் ஒரு 10% இருக்கும். ஆக 35% ஆளும்கட்சிக்கு கிடைக்கலாம்.

  எனவே எக்ஸிட் போல் ஓவர் எஸ்டிமேட் செய்துள்ளது என்றே நினைக்கிறன். 10% முதல் 20% வரை overestimate செய்திருக்கலாம்.
  எக்ஸிட் போல் சராசரி 300 இடங்கள். அதனை 10% டு 20% கழித்து பார்த்தால் 240 லிருந்து 270 க்குள் கிடைக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. Thanks for your comment! Your prediction is correct..I am also thinking the same .

   Delete