திங்கள், 26 ஆகஸ்ட், 2019

சில செயற்கை மாயைகள்

ஒரு மாதத்திற்கு முன்பு பழமை வாய்ந்த HDFC வங்கி முதல் பார்லி பிஸ்கட் நிறுவனங்கள் வரை பொருளாதரத்தில் எதோ நடக்கிறது என்று சொல்லி வந்தன.


திடீர் என்று கடந்த வெள்ளியன்று HDFC வங்கி அப்படி எல்லாம் பொருளாதார தேக்கத்தை பார்க்கவில்லையே என்றது.



அதன் தொடர்ச்சியாக பார்லி பிஸ்கட் நாங்கள் 10000 ஆட்களை வேலையை விட்டு தூக்குவதாக சொல்லவில்லையே என்று சொல்லியது.

அதே நாள் முடிவில் சீதாராமன் பிரஸ் கூட்டத்தை வைத்து இருந்தார். இப்படி தொடர்ச்சியாக எல்லாம் திட்ட்மிடுதலாகவே தோன்றியது.

அவர் சொன்னவற்றில் முக்கியம்சம் இது தான்.


வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விதிக்கப்பட்ட்ட புதிய வரிகள் நீக்கப்படுகின்றன. அவற்றால் அரசுக்கு 1400 கோடி இழப்பாகும்.

ஆக, வெறும் 1400 கோடி இழப்பிற்கா? அவர்கள் பெரிய தொகையினை குறுகிய காலத்தில் எடுத்து செல்வார்கள்.

இதனை மீடியாக்கள் கொண்டாடின. இனி FPI உள்ளே வருவார்கள் என்றன.

ஆனால் நேற்று மட்டும் FPI 750 கோடியை வெளியே எடுத்துள்ளார்கள்.

ஆனால் சந்தை உயர்ந்து விட்டது. எல்லாம் உள்நாட்டு காசு தான் உயர்த்தி உள்ளது.

இது தவிர மற்ற எல்லாமே நிர்வாக ரீதியான முடிவுகள் தான்.

அரசு நிறுவனங்களில் கார்கள் வாங்குவது என்பது ஆட்டோ துறைக்கு ஒரு சதவீதம் பலன் அளித்தாலும் ஆச்சர்யமே.

அரசு இருக்கும் நிதி நெருக்கடியில் இதனை விமர்சனம் செய்ய விரும்பவில்லை. இதனை தொடக்கமாக கருதுவோம்.

ஆனால் இதுவே ஒரு பெரிய ஒளிக்கு வழி என்பது போல் மீடியாக்கள் காட்டுவது சில்லறை முதலீட்டாளர்களை ஏமாற்றுவது என்பது போல் தான்.

நேற்றைய சந்தை உயர்வின் காரணமே இன்னும் புரியவில்லை.

கடந்த வார இறுதியில் தான் டிரம்பும் சீனாவும் அந்த சண்டை போட்டார்கள்.

ஆனால் நேற்று பேச்சு வார்த்தைக்குள் வந்து விட்டோம் என்றார்கள்.

இவர்கள் பேச்சு வார்த்தையை சிறு குழந்தை கூட நம்பாது.

அநேகமாக, G7 கூட்டத்தில் ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக டிரம்ப் சொல்லி விட்டு சென்று இருக்கலாம்.

தனிப்பட்ட முறையில், உங்கள் வேலைக்கு பிரச்சினை இருக்கிறதா? அடுத்து வேலை தேடினால் எளிதாக கிடைக்குமா? அதில் வரும் வருமானம் அதிக அளவு வாங்கும் சக்தியை கொடுக்குமா? என்று யோசித்தாலே இது தேக்கமா? தற்காலிகமா? என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

நமது மீடியாக்களை நம்பி முதலீடுகளை பங்குசந்தைக்கு கொண்டு வர வேண்டாம்.

இன்று அவசரத்திற்கு ரிசர்வ் வங்கி வைத்து இருக்கும் பணமும் அரசு கையில் வருகிறது. இதனையும் கொஞ்ச நாளுக்கு கொண்டாடுவார்கள்.

ஆனால் அடிப்படையான வாங்கும் சக்தியில் மாற்றம் வராத வரை பெரிதாக கொண்டாடுவதற்கு ஒன்றுமில்லை.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து: