வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

உறுதிப்படுத்தப்பட்ட வீழ்ச்சி

கடந்த வெள்ளியன்று நிர்மலா சீதாராமன் அவர்கள் கொடுத்த பேட்டி காரணமாக மேலே சென்ற சந்தை இன்று காலை மீண்டும் பழைய நிலைக்கு வந்தது.


மீண்டும், இன்று வெள்ளி மாலை அடுத்த பேட்டி என்று அறிவிப்பு வந்தது.



இதையடுத்து மீண்டும் கடந்த வெள்ளி மாலை நிலையான 11000 நிப்டி புள்ளிகளுக்கும் மேல் சென்றது.

ட்ரேடர்களுக்கு கொண்டாட்டம் தான்.

செய்தி அடிப்படையில் கண்ணா பின்னா என்று மாற்றங்களை காணும் சந்தையில் பணம் பண்ணும் நேரம் அவர்களுக்கு.


இன்று பொதுத்துறை வங்கிகளை இணைப்பதாக அறிவித்துள்ளார்.

கடந்த மூன்று வருடங்களாக செய்து வரும் வங்கி இணைப்பு நடவடிக்கையின் தொடர்ச்சி தான் இது.

இதில் சிறிய வங்கிகளின் பங்குகளை வைத்து இருப்பவர்களுக்கு இழப்பு இருக்க வாய்ப்பு உள்ளது.

மற்றபடி, சந்தை இதனை பெரிதான நேர்மறை விடயமாக எடுத்துக் கொள்ள வேண்டுமா? என்றால் வாய்ப்பு குறைவே.

அடுத்து, வந்த இன்னொரு செய்தி தான் பெரிய ஹைலைட்.

அது தான் இன்று வெளிவர இருக்கும் GDP தரவுகள் தொடர்பான செய்தி.

ரிசரவ் வங்கி 5.6% வளர்ச்சி எதிர்பார்த்து இருந்தது.

வல்லுனர்கள் 5.2% முதல் 5.8% வரை எதிர்பார்த்து இருந்தார்கள்.

யாருக்கும் இல்லாமல், வெறும் 5% வளர்ச்சி தான் வந்துள்ளது என்று காட்டி உள்ளார்கள்.

ஒரு வளர்ந்து வரும் நாட்டில் இந்த வளர்ச்சி என்பது மிகக் குறைவே.

மேல் உள்ளது போல் ஒவ்வொரு காலான்டிற்கும் அரை சதவீதத்திற்கும் மேலேயே வளர்ச்சி குறைந்து வந்துள்ளது.

இது வரை பொருளாதார தேக்கமா? தற்காலிகமா? என்பது தெரியாமல் குழம்பி இருந்தோம்.

தற்போது அதிக அளவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே செப்டம்பர் மாதம் Roll-Over தரவானது மிகக் குறைவாக சென்றுள்ளது. அதிலும் Long Positions தான் அதிகமாக குறைந்து உள்ளது.

அந்த சூழ்நிலையில் அடுத்த வாரம் சந்தை பெரிய அளவு சரிவுகளை காணும் வாய்ப்பு உள்ளது.

Be Cautious!


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com