செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

அரசு நிதி உதவியை மட்டும் நம்பும் சந்தை

எமது கடந்த சில பதிவுகள் தமிழ் முதலீட்டாளர்களுக்கு சந்தை மேலே வரும் போது வெளியே வருவதற்கு உதவி இருக்கும் என்று நம்புகிறோம்.


அடுத்த கட்டம் என்னவென்று பார்த்தால், எல்லோர் முகத்திலும் குழப்பம் தான்...



தற்போதைய நிலையில் சந்தை ஒன்றை மட்டுமே நம்பியுள்ளது. மற்ற எல்லாமே கவலை தரும் விடயங்கள் தான்.

அந்த நம்பிக்கை, பொருளாதார தேக்கம் நீங்க அரசு என்ன செய்யும்? என்பது தான்.


முதலில் அரசு என்னென்ன செய்ய வாய்ப்புகள் உள்ளது என்பதை பார்ப்போம்.

  • ஆட்டோ துறைக்கு GST வரியை 28% என்பதில் இருந்து 18% என்று குறைக்கலாம்.
  • வங்கி துறைக்கு வாராக் கடன்களால் வந்த பற்றாகுறையை தவிர்க்க அதிக நிதி உதவி அளிக்கலாம்.
  • பெரிய அளவில் அரசு சார்ந்த கட்டுமானம் போன்ற துறை சார்ந்த முதலீடுகளை அறிவிக்கலாம்.

இது தவிர, பெரிதாக ஒன்றும் எதிர்பார்க்க முடியாது என்பது தான் நிதர்சனம்.

சரி. மேலே சொன்னவற்றை அரசு செய்தால் என்ன ஆகும்.

GST வரியை குறைத்தால் அரசுக்கு வரி வருமானம் குறையும். ஏற்கனவே GSTயில் பெரிய அளவு வருமான முன்னேற்றம் இல்லாத சூழ்நிலையில் மேலும் வரி விதித்ததை குறைத்தால் வருமானம் பாதிக்கப்படும்.

ஆக,அரசுக்கு வருமானம் குறைகிறது.

அதே நேரத்தில் மற்ற இரண்டு குறிப்புகள் படி, பெரிய அளவில் நிதி முதலீடு மற்றும் உதவியை சந்தை எதிர்பார்க்கிறது.

அப்படி பணத்தை எங்கு வாங்குவது? வெளியில் சென்று கடன் வாங்குவார்கள்.

கடன் வாங்கினால் பட்ஜெட்டில் சொன்னபடி 3.25%க்கும் குறைவான நிதி பற்றாகுறை விகிதத்தை எட்ட முடியாது.

நிதி பற்றாக்குறை 50bps புள்ளிகள் கூட வாய்ப்பு என்று நிதி அமைச்சரே கருத்து கூறி உள்ளார். அதாவது பற்றாகுறை 3.75% என்ற விகிதத்தை எட்டலாம்.

அப்படி நடந்தால் Credit Agencies இந்தியாவின் தர நிர்ணயத்தை குறைக்கும்.

தர நிர்ணயத்தை குறைத்தால் கடன் வாங்குவதற்கு அதிக வட்டியை கொடுக்க வேண்டி வரும்.

இது அரசினை மட்டுமல்லாமல் வெளிநாட்டு கடன் வாங்கும் நிறுவனங்களையும் சேர்த்து தான் பாதிக்கும்.

முள்ளில் விழுந்த சேலையை கிழிச்சல் இல்லாமல் எடுக்க முடியாது என்பது தான் தற்போதைய நிலைமை.

அதனால் அரசு ஏதாவது அறிவிப்பு கொடுத்து சந்தை உயர்ந்தாலும் அது தற்காலிகம் தான் என்பதை நினைவில் கொள்க!


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக