புதன், 5 ஜூன், 2019

DHFL சரிவால் அகல பாதாளத்தில் ம்யூச்சல் பண்ட்கள்

ம்யூச்சல் பண்ட்கள் பல வகைப்படும்.

பெரும்பாலும், பங்குசந்தையில் தான் ம்யூச்சல் பண்ட்கள் முதலீடு செய்யப்படும்.


ஆனால் சில பண்ட்கள் பாதுகாப்பு என்ற போர்வைக்காக கடன் பத்திரங்களில் முதலீடு செய்கின்றன.

இவை Debt ம்யூச்சல் பண்ட்கள் என்று அழைக்கப்படுகின்றன.



இந்த பண்ட்களில் முதலீடு செய்யப்படும் நிதி அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் வழங்கும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகின்றன.

இந்த கடன் செய்யப்படும் முதலீட்டிற்கு ஒரு நிலையான வட்டி வழங்கப்படும்.

கிரெடிட் ஏஜென்சிகள் கொடுக்கும் தரத்திற்கு ஏற்ப வட்டி விகிதங்களும் மாறுபடும்.


உதாரனத்திற்கு AAA+ என்ற தரத்தில் இருக்கும் நிறுவனம் குறைவான வட்டி வழங்கும். அதே நேரத்தில் BBB- என்ற தரத்தில் இருக்கும் நிறுவனம் அதிக வட்டி வழங்க வேண்டும்.

Risk Vs Reward என்பதற்கேற்ப வட்டி விகிதங்களும் மாறும்.

DHFL நிறுவனத்திற்கு கடந்த 2018 செப்டெம்பரில் AAA+ தரம் இருந்தது.

இதை நம்பி நிறைய ம்யூச்சல் பண்ட்கள் DHFL நிறுவனத்தின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்து இருந்தன.

திடீர் என்று கடந்த மாதம் DHFL டெபாசிட்களை maturity அடைவதற்கு முன்பு எடுக்க முடியாது என்று சொல்லி விட்டது.

நேற்று ம்யூச்சல் பண்ட் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய 960 கோடி ரூபாயையும் கொடுக்கவில்லை.

இதனால் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த Debt பண்ட்கள் சிலவற்றின் NAV மதிப்பானது 50%க்கும் மேல் வீழ்ச்சி அடைந்து விட்டது.

கீழே உள்ள பட்டியலை பார்க்கவும்...



காலக்கொடுமை என்னவென்றால், ILFS நிறுவனத்திற்கு யோக்கியம் சான்றிதழ் வழங்கிய அதே கிரெடிட் ஏஜென்சிகள் தான் DHFL நிறுவனத்திலும் கோட்டையை விட்டு உள்ளன.

அப்படி என்றால், இவை எதை அடிப்படையாக வைத்து தரத்தை நிர்ணயிக்கின்றன என்பதில் தான் ஆயிரம் கேள்விகள் வருகின்றன.

டெஸ்ட் பண்ணி சொல்ல்றவரே தப்பா சொன்னால் எதை நம்பி முதலீடு செய்வது?

இந்தியா முதலீடுகள் மீதான நம்பிக்கையை இழந்து கொண்டே வருவதும் உண்மை தான்...


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக