ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

நீதிமன்ற உத்தரவிற்கு இணங்க..

கடந்த வாரத்தில் IndiaBulls தொடர்பாக வெளிச்சத்திற்கு வரும் IndiaBulls ஊழல் என்ற கட்டுரை எழுதி இருந்தோம்.

நீதிமன்றத்தில் IndiaBulls நிறுவனத்தில் நடந்த சில மோசடி பண வர்த்தனைகள் தொடர்பாக தொடரப்பட்ட பொது வழக்கு பற்றி எழுதி இருந்தோம்.கடந்த வெள்ளியன்று டெல்லி நீதிமன்றம் IndiaBulls தொடர்ந்த வழக்கில் கீழ் உள்ளவாறு தீர்ப்பு வழங்கி உள்ளது.

"சுப்ரமணிய சுவாமி அவர்களோ அல்லது இணையதளம், ட்விட்டர், பேஸ்புக் வழியாகவோ IndiaBulls நிறுவனத்திற்கு எதிராக எழுத கூடாது.

ஏற்கனவே எழுதப்பட்ட கட்டுரைகளும் நீக்கப்பட வேண்டும்"


அதனால் எமது கட்டுரை விரைவில் நீக்கப்படும் என்று அறிவிக்கிறோம்.

இதே போல்,

Yes Bank நிறுவனத்திற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருகிறார்கள் என்று செய்தி வந்திருந்ததை ETயில் பார்த்து இருக்கிறோம்.

அண்மையில் கூட PayTm நிறுவனம் கூட Yes Bank நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்து இருந்தது.

இதெல்லாம் உண்மையில்லாத செய்திகளாகவே முடிந்தன.

இதை பார்த்து Yes Bank பங்குகள் ஒரே நாளில் கூடி, அதன் பிறகு குறைந்த வரலாறும் உண்டு.

முதலீட்டாளர்களுக்கு இதனால் ஏற்பட்ட இழப்பு என்பது மிக அதிகம்.

அதனால் நீதி மன்றம் இத்தகைய செய்திகளையும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறோம்.

அடுத்து, டிசம்பர் 17 அன்று மீண்டும் IndiaBulls வழக்கு விசாரணை வருமாம்.

அது வரை, IndiaBulls கட்டுரையை மறைத்து வைக்கிறோம்.

டிசம்பர் 17 வரை IndiaBulls பங்கில் இழப்பு ஏற்படுமாயின் நீதிமன்றம் பொறுப்பேற்குமா? என்பதற்கு இன்னும் தெளிவு இல்லை.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

1 கருத்து: