alibaba லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
alibaba லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 5 ஜூலை, 2015

தோல்விகளை வெற்றி படிக்கட்டுகளாக மாற்றிய அலிபாபாவின் ஜாக் மா - 2

அலிபாபா நிறுவனர்  ஜாக் மா அவர்களின் தன்னம்பிக்கை வெற்றி பற்றிய இந்த கட்டுரையின் முந்தைய பாகத்தினை இங்கு படிக்கலாம்.
தோல்விகளை வெற்றி படிக்கட்டுகளாக மாற்றிய அலிபாபாவின் ஜாக் மா


மீதி இரண்டிற்கும் அந்த சமயத்தில் எந்த நிறுவனங்களுமே இல்லை. ஜாக் மாவிற்கு வாய்ப்பும் அந்த புள்ளியில் தான் கிடைத்தது.

சீனாவை பொறுத்த வரை அப்பொழுது தான் ஏற்றுமதி பொருளாதரத்திற்கு மாறி இருந்தது. அதாவது அதிக அளவில் சீனாவின் குறுந்தொழில் நிறுவனங்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டு இருந்தன.



இது தான் வாய்ப்பு என்று ஜாக் மா நினைத்தார். சீனாவில் இருக்கும் பெரும்பாலான குறுந்தொழில் நிறுவனங்களையும், உலகம் முழுவதும் அவர்களுக்கு இருக்கும் நுகர்வோர் நிறுவனங்களை மறு முனையில் இணைத்து ஒரு இணையதளத்தை திட்டமிட்டார்.

இந்த B2B என்ற முறையை மையமாக வைத்து தான் அலிபாபா தொடங்கப்பட்டது.

தோல்விகளை வெற்றி படிக்கட்டுகளாக மாற்றிய அலிபாபாவின் ஜாக் மா

தோல்விகள் எப்பொழுதும் நிலையாக இருப்பதில்லை. அதில் துவண்டு விடாமல் படிப்பினைகளே என்று நினைத்து அடுத்த நிலைக்கு சென்றவர்கள் வாழ்வில் பெருவெற்றியை பெற்றிருக்கின்றனர்.


அதில் ஒருவர் தான் சீனாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான அலிபாபா நிறுவனத்தை தோற்றுவித்த ஜாக் மா. (Jack Ma)



அவரது தனிப்பட்ட வாழ்க்கை பலருக்கு பெரிய அளவில் தன்னம்பிக்கை கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

சீனாவின் கிழக்கு மாகாணம் ஒன்றில் தான் ஜாக் மா பிறந்தார். அவர் பிறந்த போது சீனா தீவிர கம்யூனிசம் காரணமாக பிற நாடுகளில் இருந்து விலகி ஒரு தனி உலகத்திலே இருந்தது.