jio லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
jio லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

2G இல்லாத இந்தியாவும், வஞ்சக எண்ணமும்

கடந்த சில நாட்களுக்கு முன்பு முகேஷ் அம்பானி டெலிகாம் துறை தொடங்கப்பட்ட 25வது வருட மாநாட்டில் முக்கியமான வார்த்தைகளை உதிர்த்துள்ளார்.

அதாவது 2G இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது தான் அது. வறுமை இல்லாத இந்தியா, போலியோ இல்லாத இந்தியா என்ற அரசியல் வாதிகளின் பொன்மொழி போன்று இது ஒரு புதிய பதம் தான்.


2G என்பது ஆரம்ப கட்டங்களில் NOKIA 1100 போன்ற Feature Phones வழியாக பேசும்  முறை தான். இன்னமும் இந்தியாவில் 35 கோடி மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

அதனை தான் ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பதால் கொஞ்சம் பின்புலத்தையும் பார்ப்போம்.

திங்கள், 1 ஜூன், 2020

JIO - Facebook முதலீடு, சூட்சமம் என்ன?

தொழில் நுட்பம் வந்து நன்மை செய்ததோ இல்லையோ. ஆனால் இன்னும் சிறிது காலத்தில் 99% உலக சொத்தும் 1% பணக்காரர்களிடமும் மீதி 1% சொத்து 99% மற்ற மக்களிடமும் இருந்தாலும் ஆச்சர்யமில்லை.

வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் வியாபாரம் முழுக்க ஒரு வித மையத்தன்மையை நோக்கி நகருவதையம் பார்க்க முடிகிறது. அந்த வகையில் தான் ஜியோவில் Facebook நிறுவனம் முதலீடு செய்வதையும் காணலாம்.



கிட்டத்தட்ட 45,000 கோடி ரூபாய் அளவு முதலீடு செய்து உள்ளார்கள். இது போக சில இதர நிறுவனங்களும் முதலீடு செய்து மொத்தத்தில் 75,000 கோடி அளவு முதலீடு செய்து உள்ளார்கள். அடுத்து, Microsoft நிறுவனமும் வரிசையில் இருப்பதாக செய்திகள் வருகின்றன.

ஏன், இத்தனை வரிசை என்ற கேள்வி வரும் போது, கொரோனோவானது இல்லுமினாட்டி சதியா? அல்லது மருந்து நிறுவனங்கள் சதியா? என்பதை விட மக்களை அதிகம் குழப்பம் செய்யத் தான் வைக்கிறது.

கொஞ்சம் பின்புலங்களையும் விரிவாக பார்ப்போம்.