வியாழன், 6 மார்ச், 2014

பங்குச்சந்தைக்கு கிடைத்த இனிப்பு செய்தி

பங்குச்சந்தையில் நேற்றைய ஒரு புள்ளி விவர செய்தி பங்குச்சந்தைக்கு நீண்ட கால நோக்கில் இனிப்பான செய்தியாக அமைந்தது.


இந்தியாவின் CAD என்று சொல்லப்படும் நிதிப் பற்றாக்குறை அளவு நாட்டின் மொத்த உற்பத்தியில்(GDP) ஒரு சதவீதத்திற்கும் குறைவாக சென்றது. இது கடந்த பதினெட்டு மாத கால அளவில் இல்லாத குறை அளவாகும்.

வேறு விதமாக [பார்த்தால் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து உள்ளது என்றும் கருதலாம். அல்லது இறக்குமதி அளவு குறைந்துள்ளது என்றும் கருதலாம். இதனால் டாலர் தேவை குறைந்து ரூபாய் மதிப்பிற்கு ஒரு வித பாதுகாப்பு ஏற்படுகிறது.ஆக, பல கோணங்களில் முதலீட்டாளர்களுக்கு நேர்மறை செய்தி. இதனால் பங்குச்சந்தை நேற்றும் 237 புள்ளிகள் வரை உயர்ந்து காணப்பட்டது.

இதற்கு முக்கிய காரணமாக கடந்த ஒரு வருடத்தில் மத்திய அரசு எடுத்த சில நல்ல முடிவுகள் காரணமாக அமைந்துள்ளது. ஆனால் அவர்களது  கெட்டநேரமும், முந்தைய ஆண்டுகளில் நடந்த மோசமான நிர்வாகமும்   இனி கிடைக்கும் நல்ல செய்திகளின் பெருமைகள் புதிய அரசுக்கே செல்லும்.

அடுத்து தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாம் ஒன்றும் பிஜேபி அனுமானியல்ல. ஆனாலும் பல மாநிலங்களில் அவர்களுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு நிலையும், ஓரளவு அமையவுள்ள நல்ல கூட்டணிகளும் சாதகமாக உள்ளது.

அவ்வாறு சாதகமான சூழ்நிலை அமைந்து, குறைந்த பட்சம் 200 தொகுதிகள் என்று சாதகமான முடிவுகள் அமையும் பட்சத்தில் சென்செக்ஸ் ஒரு குறுகிய நேரத்தில் 22000 என்ற உச்சத்தைக் கடக்கும் என்று கருதுகிறேன்.அதனால் இந்த வருட நீண்ட கால முதலீட்டில் ஈடுபடுவர்கள், பெரும் பகுதியை(60~70%) மே மாதத்திற்கு முன் முதலீடு செய்வது அதிக பலனைத் தரலாம்.

இந்த பதிவு முற்றிலும் எமது யூகமே. தற்போதைய சூழ்நிலையில் கிடைக்கப்பெற்ற தரவுகளுடன் வைத்து எதிர்பார்க்கப்படுபவை.

இதில் உலகப் பொருளாதாரம் போன்ற புறக்காரணிகள் கருத்தில் கொள்ளப்படவில்லை. மற்ற ரிஸ்க் காரணிகளை வாசகர்களின் யூகங்களுக்கு விட்டு விடுகிறேன்:)


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக